நவ எருசலை மணவாளன் நடு வானில் தோன்றிடுவார் இதுவரை இருந்த துன்பமில்லை எமக்கென்றுமே ஆனந்தம் சரணங்கள் 1. தள கர்த்தனாம் இயேசு நின்று பலன் ஈந்திடுவார் அன்று அவர் ஆவியினால் புது பெலனடைந்து ஜெய வீரராய் நின்றிடுவோம் --நவ 2. நிதம் ஜெபத்துடன் வாஞ்சையாக அவர் வருகையை எதிர் நோக்கிப் புது எருசலேமாய்த் தூய நகரமதாய் நாம் இணைந்திடுவோம் அவரில் --நவ 3. புவி மீதினில் சரீர மீட்பு என்று வருமெனக் காத்திருக்கும் நாம் மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியாய் மாறிடுவோம் --நவ 4. ஜீவ ஒளி வீசும் கற்களாக சீயோன் கிரிதனிலே சேர்க்க அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் --நவ 5. தேவ தூதர் எக்காளமுடன் ஆரவாரத் தொனி கேட்க அவர் கிருபையினால் மறுரூபமாக நம்மைத் தம்முடன் சேர்த்திடுவார் --நவ
@gracegnanambal27874 жыл бұрын
Praise the lord போன வாரம் இந்த பாடல் மனதில் வந்து கொண்டே இருந்தது முதல் நான்கு வரி மட்டுமே தெரியும் அதை மட்டுமே Padicondirunthen Iepozhuthu முழு பாடல் கேட்கக் கர்த்தர் உதவி செய்தார் 🙏🙏🙏🙏