அது 85, 86 காலப்பகுதி என நினைக்கிறேன். பாடசாலை மதிய உணவு இடைவேளையில், நண்பர்கள் மிகவும் பதட்டமாக ஓடிவந்து அடேய்...அந்த ஒழுங்கைக்குள்ள ரெண்டுபேரைச் சுட்டுப் போட்டிருக்கிறார்கள்.....வாங்கோடா பாத்திட்டு வருவம்....பதட்டத்துடன் அவர்களுடன் விரைந்தேன். அது ஒரு சிறிய குச்சொழுங்கை. ஓரத்தில் இருவர் கண்களையும் கட்டி, கைகளையும் பின்னோக்கிக் கட்டிவிட்டு, நெற்றியில் குண்டடிபட்டு இறந்து கிடக்கிறார்கள். பக்கத்தில் ஒரு குறிப்பு " வீடுகளில் கோழிகளைக் களவாடும் கள்வர்களுக்குத் தண்டனை" திகைப்பினாலும், பயத்தினாலும் விரைவாக அவ்விடத்தில் இருந்து விலகினேன்.. அப்போது எனக்கு விவரம் போதாது. உலக நடத்தைகள் தெரியாத வயது. கோழி களவெடுத்தால் இதுதான் தண்டனைபோலும் என்றுதான் மனம் எண்ணியது. ஆனால், சிறிது வளர்ந்து, உலக அறிவென்பது மூளையில் ஏறும்போதுதான் புரிந்தது, சில நாடுகளில் கள்வர்களுக்கு அதி உயர்பட்சத் தண்டனையாக கையொன்றினைத்தான் வெட்டுவார்கள். நாமோ காட்டுவாசிகளைவிடக் கேவலமாக அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று மனம் நிம்மதி இல்லாமல் அலைபாய்ந்தது. இப்படியாகச் சிறு சிறு களவுகளைச் செய்த குற்றத்திற்காக மண்டையில் போடப்பட்ட அப்பாவிகள் எத்தனை எத்தனை!
@akkuddipichumani Жыл бұрын
nanrikal
@vikkmithushpas Жыл бұрын
so bro vaddukoddai sangarathai pathorakalikoviluku kidda kalli veethi periku ethaapola antha veethogil bus vacirukiraankal kaanthan enkiravan thinesh enkiravan veedila bus odiravankal pakkathu veeddu koliya kalaveduthu virunthu saapiduvaankalam unkalukku theriumo