#காமராஜர்

  Рет қаралды 1,931

Kalaignarist கலைஞரிஸ்ட்

Kalaignarist கலைஞரிஸ்ட்

Күн бұрын

ஒரு அரசியல் தலைவரை அவர் சார்ந்துள்ள கட்சியின் அரசியலால் எதிர்ப்பது என்பது வேறு. அதே தலைவரை ஒரு தனிமனிதராக மதிப்பது என்பது வேறு. தமிழக அரசியல் வரலாற்றில் மக்களிடம் தாங்கள் பின்பற்றும் கொள்கைகளும், தாங்கள் சார்ந்துள்ள கழகங்களும் வேறு வேறு என்றாலும் தந்தை மகனாக, அண்ணன் தம்பியாக, மாமனார் மருமகனாக ஒன்றாக உறவாடிக்கொண்டுதான் இருகின்றனர். தமிழக மக்களின் பிரதிபலிப்பாக விளங்கிய தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு கட்சித் தலைவரை அதன் எதிர்கட்சித் தலைவர் என்னதான் மேடை போட்டு விமர்சித்தாலும், தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் ஒருவர் நட்பு பாராட்டவே செய்தார்கள். அது வெறும் மரியாதை நிமித்தமாகவே இருந்தது என்பதைத் தாண்டி அவர்களின் தனிப்பட்ட வாழ்விலும் அக்கறை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக கலைஞரும் காமராசரும் அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும், அடிப்படையில் இருவருமே ஒருவர் மீது மற்றொருவர் நன்மதிப்பு கொண்டவர்கள். அப்படி இருக்கும்போது, கடந்த 2018 ஆம் ஆண்டு கலைஞர் உடல்நலக்குறைவால் இறந்த போது, அவர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுக்கும்படி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போது இருந்த அதிமுக அரசு இடம் தர முடியாது என்று கூறவே, உயர்நீதி மன்றத்தில் கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம்கொடுக்கவேண்டி திமுக சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.
கலைஞர் உயிரோடு இருந்தவரை அவரைப் பற்றிப் பொய்யான அவதூறுகளைப் பரப்பிக்கொண்டிருந்தவர்கள், அவர் இறந்தபோதும் அதை வைத்து ஏதேனும் ஆதாயம் தேட முடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்தனர். கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கிறார்கள் என்று தெரிந்த உடன் காமராசர் இறந்தபோது அவரை மெரினாவில் அடக்கம் செய்ய அப்போது முதல்வராக இருந்த கலைஞர் மறுத்துவிட்டார். அதனால் இப்போது கலைஞருக்கு மட்டும் மெரினாவில் ஏன் இடம்தரவெண்டும் என்கிறவாறு வாட்ஸப் மெசேஜுகளைப் பகிர்ந்த வண்ணம் இருந்தனர்.
காமராசருடைய இறப்புச் செய்திகேட்டு அவரது உடலைப்பார்க்க முதலில் வந்தவரே கலைஞர்தான். அதோடு மற்றொரு முக்கியமான செய்தி, காமராசர் உடல் அடக்கம் செய்யப்படவில்லை. அவரது உடலை எரிக்கவே செய்தார்கள். மேலும் காமராசர் இறப்பின்போது உண்மையில் நடந்தது என்ன என்று பல ஆளுமைகள் விளக்கமளித்தபோதும், பிரபல ஆங்கில நாளிதழான “THE HINDU”- விலும் கூட கலைஞர் காமராசருக்கு மெரினாவில் இடமளிக்க மறுத்ததாக ஒரு செய்தி வந்திருந்தது.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று விளக்கமளித்திருந்தார். காமராசர் மீது கொண்ட பற்றினால் ஒருகாலத்தில் தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர் பழ. நெடுமாறன். 1979 வாக்கில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினாலும், காமராசர் இறந்தபோது அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்தவர் அவர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,
”காமராஜர் மறைந்ததும், அவரது உடலுக்கு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இறுதிச் சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, தானாக முன்வந்து காமராஜர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் . ஆகவே அவருக்கு காந்தி மண்டபத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்யுங்கள், அதுவே பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.
பின்னர் அங்குதான், காமராஜர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், காந்தி மண்டபத்தில், காமராஜருக்கு நினைவிடம் அமைக்க நிலம் அளித்தவரும் கருணாநிதிதான். மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்க அப்போது காங்கிரஸ் சார்பில் கோரிக்கைகூட விடுக்கப்படவில்லை.
இப்போதுள்ள தலைமுறையினர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் அறியாத கருத்துக்களை உண்மை என நினைத்து, அதைப் பரப்புகிறார்கள். அதில் உள்ள உண்மையைக் கண்டறிய அக்கறை காட்டுவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.
காமராஜர் மீது வேறு எவரையும்விட அதிகப் பற்று கொண்டவர் கருணாநிதி. இந்தியா முழுக்க ஸ்தாபன காங்கிரசார் இந்திரா காந்தியால் கைதுசெய்யப்பட்டபோது, தமிழகத்தில் காமராசரைக் கைது செய்ய முடியாது என்று தெரிவித்தவர் கலைஞர். காமராசர் இறந்த பின்பு அவர் அஸ்தியைக் கரைத்த இடங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் 2000-ஆம் ஆண்டு, சுமார் 600 சதுர .கிமீ பரப்பளவில் மணிமண்டபத்தை அமைத்தவர் கலைஞர்தான். கடந்த பத்து ஆண்டுகளாக அந்த மணி மண்டபத்தை முறையாகப் பராமரிக்காமல், பழுதடைய விட்டுவிட்டு,கலைஞர் காமராசருக்கு இடமளிக்கவில்லை எனப் பொய்ச் செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறது அடிமை அதிமுக அரசு. இதுமட்டுமல்லாமல் திருநெல்வேலியில் காமராசருக்கு சிலையும் அமைத்துக்கொடுத்தவர் கலைஞர். முக்கியமாக கலைஞர், காமராசரின் நினைவாக சென்னை மெரினா கடற்கரைச் சாலைக்கு காமராசர் சாலை எனவும் பெயர்மாற்றி உத்தரவிட்டார்.
ஒருவேளை காமராசர் உயிரோடிருந்தால், கலைஞரைக் காமராசருக்கு எதிராக சித்தரிக்க முயல்வதை அவரேகூட அனுமதித்திருக்கமாட்டார். காலம்முழுக்க உண்மையாகவும், நேர்மையாகவும் மக்களுக்கு உழைத்தவர்கள் காமராசரும், கலைஞரும். ஆனால் இப்போது ஓட்டுக்காக கூவிக்கொண்டிருக்கும் அதிமுக அமைச்சர்கள் இளம் தலைமுறையினருக்கு எப்படி அடிமைகளாக இருப்பது என்று கற்றுக்கொடுப்பதுடன், எப்படி வரலாற்றை மறைத்துப் பொய் சொல்லுவது என்றும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
#கலைஞர்புகழஞ்சலி
#kalaignar
#kamarajar
#karunanidhi
#karunanidhistatue
#dmk
#கருணாநிதி
#திமுக
#திமுகதலைவர்கருணாநிதி
#ஸ்டாலின்
Visit to Like Our Other Sites
Facebook Page : / kalaignarist
Twitter : / kalaignarist
Instagram : / kalaignarist1924
Blogger : kalaignarist19...

Пікірлер: 2
@thouheedahmed9394
@thouheedahmed9394 2 ай бұрын
❤❤🎉
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3,6 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 94 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 16 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3,6 МЛН