கருவிலி கொட்டிட்டை சற்குணநாதேஸ்வரர் கோயில் | தாயின் கருவில் மீண்டும் பிறவாத நிலையை தரும் தலம்

  Рет қаралды 188,277

ஆன்மீகத்துடன் நட்பு

ஆன்மீகத்துடன் நட்பு

Күн бұрын

#தேவாரப்பாடல்_பெற்ற_சிவாலயங்கள்
#சற்குணநாதேஸ்வரர்_கோயில்
#மறுபிறவி_நிவர்த்தி_தலம்
திருக்கருவிலி கொட்டிட்டை
(கருவேலி 126/274)
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல்
பெற்ற 276 சிவாலயங்களில் இது 126 வது தேவாரத்தலம் ஆகும்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 63வது தலம். இந்திரன் , ருத்ர கணத்தவர்கள் , பிறவிப்பிணி தீர சற்குண மன்னன் வழிபட்ட தலம். எமதீர்த்தம் கோயிலுக்கு எதிரே உள்ளது.
சிவஸ்தலம் பெயர்:-திருக்கருவிலி கொட்டிட்டை (தற்போது கருவேலி என்றும், சற்குணேஸ்வரபுரம் என்றும் வழங்குகிறது)
இறைவன் : சற்குணநாதேஸ்வரர்.
அம்பாள் : சர்வாங்க நாயகி.
தல விருட்சம்: வில்வம்.
தீர்த்தம்: எம தீர்த்தம்.
புராண பெயர்: கருவிலிக்கொட்டிட்டை,
திருக்கருவிலி.
தற்போதைய பெயர்: கருவேலி
மாவட்டம்: திருவாரூர்.
#மறுபிறவி_இல்லை
இத்தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை. அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் 'கரு இல்லை' என்ற பொருளில் 'கருவிலி' எனப்பட்டது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.
தலச்சிறப்பு
இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதே ஆகும். எனவே இவ்வூர் இறைவன் 'சற்குணேஸ்வரர்' எனப்படுகிறார். அம்பாள் 'சர்வாங்க சுந்தரி' என்றழைக்கப்படுகிறார்.
பொது தகவல்
அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள்.அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம்.இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை.இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம்.இது கோவிலுக்கு வெளியே உள்ளது.கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவேலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால் தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும்.
தலபெருமை
முற்பிறவியில் ஒரு கெட்டவனுக்கு மகளாகப் பிறந்த பாவத்திற்காக, ஈசன்
மனைவியே மறுபிறவி எடுக்க வேண்டி வந்தது.அவள் மறுபிறவியில்,
இறைவனை அடைந்ததால் பிறவா நிலை பெற்றாள்.அது போலவே, இத்தலத்து
இறைவனைக் காண்போருக்கும் மறுபிறவி இல்லை.அதாவது, அவர்கள்
மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள்.இதனால் தான் இவ்வூர் "கரு இல்லை'' என்ற பொருளில் "கருவிலி'' எனப்பட்டது.காலப்போக்கில் கருவேலி
என மருவியது.கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த
குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது
மறைந்துவிடும் என்பதும் ஆகும். எனவே இவ்வூர் இறைவன் "சற்குணேஸ்வரர்''
எனப்படுகிறார்.அம்பாள் "சர்வாங்க சுந்தரி'' எனப்படுகிறாள்.
தல வரலாறு
சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான்.
மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது.யாகத்திற்கு செல்ல
விரும்பிய தாட்சாயணியை சிவன் தடுத்தார். அவரது சொல்லைக் கேளாமல்
தாட்சாயணி யாகத்திற்கு சென்றாள். அழைப்பில்லாமல் வந்த மகளை
அனைவரது முன்னிலையிலும் தட்சன் அவமானப்படுத்தினான்.அவமானம்
தாங்காத பார்வதி ஹோம அக்னியில் விழுந்து எரிந்தாள்.தாட்சாயணியின்
பிரிவைத் தாங்கமுடியாத சிவபெருமான், யாக குண்டத்திற்கு வந்து
அன்னையின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு பித்துபிடித்தவர் போல்
ஆடினார்.
சிவனின் ருத்ர தாண்டவத்தால், ஈரேழு லோகங்களும் அதிர்ந்தன.தேவர்கள்
நடுங்கினர்.அவர்கள் நாராயணனை அணுகி, சிவபெருமானைச் சமாதானம்
செய்ய வேண்டினர்.நாராயணன் சக்ராயுதத்தை ஏவி, தாட்சாயணியின்
உடலைச் சிறிது சிறிதாக துண்டித்தார். உடலின் பாகங்கள் 51 இடங்களில்
விழுந்தன. அவை மகாசக்தி பீடங்கள் என அழைக்கப்பட்டன.பின்பு
சிவபெருமானைச் சமாதானம் செய்தார். உடலை விட்ட தாட்சாயணி,
பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாக பார்வதி என்ற பெயரில் அவதரிப்பாள்
என்றும், அங்கு அவளை சிவனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றும்
திருமால் கூறினார்.இதன்படி, கயிலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்தது.
திருவிழா
மகாசிவரத்திரி, மார்கழி திருவாதிரை.
பிரார்த்தனை🍁
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
இறைவனைக் காண்போருக்கும் மறுபிறவி இல்லை.அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் உள்ள கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து கூந்தலூர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து கோயில் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
9442932942
கோயில் Google map link
maps.app.goo.g...
if you want to support us via UPI id
k.navaneethan83@ybl
Join this channel to get access to perks:
/ @mathina
தமிழ்

Пікірлер: 181
@venkateshmoorthy4573
@venkateshmoorthy4573 5 ай бұрын
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
@Kudavasal-Nandhini6
@Kudavasal-Nandhini6 Жыл бұрын
அற்புதமான பதிவு ரொம்ப நன்றி சார் இறைவன் உங்களுக்கு அனைத்து வளங்களையும் வழங்கட்டும் வாழ்க வளமுடன் சார் 🙏
@sivasivakumarkm7727
@sivasivakumarkm7727 Жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு ஐயா. நமசிவாய வாழ்க 🙏 நன்றி 🙏 உங்கள் பணம், பணி அப்பா அருளால் இனிதே தொடரட்டும். ஹர ஹர மகாதேவா 🙏.
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 21 күн бұрын
சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லும் நீங்கள் வெளி மாவட்டங்களிலிருந்து கருவிலி க்கு வரும் வழியைக் கூறவில்லை
@mathina
@mathina 21 күн бұрын
வீடியோ நல்லா பாருங்க சொல்லி உள்ளேன் திரும்ப திரும்ப சொன்னக்கூட அமைவிடம் சொல்லியும் கருவிலி செல்லும் வழி கேட்கறீங்களா Description ல் அனைத்து விவரங்கள் உள்ளன
@srk8360
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிவு. மிகத்தெளிவானவிளக்கம். நேரிலேயே சென்று தரிசித்து விட்ட திருப்தியை தருகிறது. நன்றி 🙏💐💐💐💐💐💐 திருச்சிற்றம்பலம்.
@ravichandar216
@ravichandar216 Жыл бұрын
மகத்தான ஒரு பதிவு. அனைவருக்கும் மறுபிறவி இல்லாத நிலையை தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி கள்.ஈசனடி போற்றி.
@rajagopalrajagopal6039
@rajagopalrajagopal6039 Жыл бұрын
0 , கோவிவ்எங்குஇருக்கீறதுஐரயா
@SaranyaSaranya-eb4li
@SaranyaSaranya-eb4li 5 ай бұрын
Vadamattam ulla karuvailli
@radhavenkatesan2672
@radhavenkatesan2672 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு மனதிற்கு அமைதி தந்தது ஐயா அவர்களின் கோவில் விளக்கம் அருமை தங்களின் இறைவன் சந்நதிகள் நேரில் பார்ப்பது போல இருந்தது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@malligabalasubramanian8955
@malligabalasubramanian8955 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி !!!
@vselvamani408
@vselvamani408 Жыл бұрын
மூன்று முறை கருவிழி சென்று வந்தேன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் வாழ்க
@ramakannan9901
@ramakannan9901 Жыл бұрын
எந்த ஊரில் உள்ளது சாமி திருச்சிக்கு பக்கமா சாமி
@mathina
@mathina Жыл бұрын
Trichy to Kumbakonam lots of Buses are available Kumbakonam to Poonthottam Bus you travel sir Kundalur Bus stop is located at Kumbakonam to Poonthottam route From Kundalur to temple 1 Km lots of buses are available sir. From Trichy to temple 120 Km. Kumbakonam to Temple 22 Km.
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 Жыл бұрын
It is Karu vili.
@mathina
@mathina Жыл бұрын
கருவிலி means மீண்டும் நாம் தாயின் கருவில் பிறக்க போவதில்லை
@tjalerkon3680
@tjalerkon3680 Жыл бұрын
பஸ்சில் போவதானால் கோயிலை அடைவதற்கு பஸ் ரூட் எப்படி
@sakthijagadeesan7369
@sakthijagadeesan7369 Жыл бұрын
அருமையான பதிவு ஓம் நமசிவாய
@rajaarumugam796
@rajaarumugam796 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
@palanichami7082
@palanichami7082 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய . . .
@akniakni8108
@akniakni8108 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@nachi9292
@nachi9292 Жыл бұрын
One of the best maintained siva temples. Most beautiful SivaLingam.
@ravisankargurusamy4783
@ravisankargurusamy4783 4 ай бұрын
வாடிநீர் வருந்தாதே மனிதர்காள் வேடனாய் விசயற் கருள்செய்த வெண் காடான் உறைகின்ற கருவிலிக் கோடுநீர் பொழில் கொட்டிட்டை சேர்மினே....திருக்குறுந்தொகை
@sivasp3494
@sivasp3494 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அருமை யான பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா.. நானும் விரைவில் இந்த தலத்திற்கு வந்து தரிசனம் செய்ய வேண்டுகிறேன். ஆண்டவன் அருள் பெற எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.. மிக்க நன்றி ஐயா.
@punniyakodir6803
@punniyakodir6803 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@காலபைரவர்
@காலபைரவர் Жыл бұрын
உங்கள் விளக்கம் அருமையான முறையில் இருந்தது‌ ரவி ஐயா உங்கள் பக்கத்தில் நிற்பவர் யார் சம்மந்மே இல்லாமல் பிராக்கு பார்த்து நிற்கிறார் இப்படி அவர் நிற்பதை பார்க்கும் போது எங்கள் முகம் சுழிக்கறமாதிரி இருந்து இனி வரும் காலங்களில் இதை தவிர்க்க பாருங்கள் இந்த பதிவு தொகுத்து வழங்கிய நபரின் குரல் வளம் அற்புதமான முறையில் இருந்தது‌. ரொம்ப நன்றி ஆன்மீகத்துடன் நட்பு
@mathina
@mathina Жыл бұрын
வரும் பதிவுகளில் சரி செய்யப்படும்
@காலபைரவர்
@காலபைரவர் Жыл бұрын
@@mathina நன்றி ஐயா ரவி ஐயா மன்னிக்கவும் இந்த மாதிரி முக பாவனை உள்ள நபரை தவிர்க்கவும் பதிவு ரொம்ப அருமையான முறையில் இருந்தது‌
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 3 ай бұрын
அருமையான விளக்கம் நல்ல பதிவு நன்றி
@venkatesannr9806
@venkatesannr9806 8 күн бұрын
Om Siva Siva Om
@ravic2159
@ravic2159 Жыл бұрын
🙏🙏சிவ சிவ🙏🙏 அவன் அருளாளே அவன் தாள் வணங்கி!!!!!!!
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌹🌙சிவ 🔥 சிவ☀🍀🌹🌻 திருநீலகண்டம்🌿🌹🙏🐄🦣
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம
@selvar9323
@selvar9323 Жыл бұрын
சிவ சிவ 🙏 சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Thanks valga valamudan sir
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 Жыл бұрын
Visited this temple 2 times. It is near kumbakonam. Well maintained. Sarvanga sundari Ambala is beautiful.
@aruns3648
@aruns3648 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@mbm2020m
@mbm2020m Жыл бұрын
Super thanks.. ஓம் நம சிவாய
@govindasamymanaimozhi5281
@govindasamymanaimozhi5281 Жыл бұрын
நன்றிகள் பல கோடி
@narayanraja7802
@narayanraja7802 Жыл бұрын
ஓம் நமசிவாய!
@girijaravi599
@girijaravi599 Жыл бұрын
Romba nandre sir
@MahaLakshmi-tc4ky
@MahaLakshmi-tc4ky Жыл бұрын
அண்ணா video காட்சிகள் அருமை அருமை ரவி அய்யா நன்றாக தல வரலாறு தெளிவாக பேசி உள்ளார் உங்கள் மூலம் நாங்கள் எல்லாரும் கருவிழி கோவில் தரிசனம் செய்தோம் மீண்டும் ஒரு பிறவா நிலை petruvittom 🙏🙏 நன்றிகள் பல 🙏உங்கள் இறை சேவை இன்னும் பல புராண அதிசயங்கள் நிறைந்த கோவில்களை உங்கள் மூலம் நாங்கள் பார்க்க வேண்டும் இறைவன் அருள் புரியட்டும்
@jeevanandham9985
@jeevanandham9985 Жыл бұрын
ஆதிசிவம்,,,அண்ணலேபோற்றி,,சற்குணேஷ்வராயநமஹ
@vimalavimala1506
@vimalavimala1506 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@meerachenganur1878
@meerachenganur1878 Жыл бұрын
വളരെ നല്ല പോസ്റ്റ്, നേരിൽ കണ്ടത് പോലെ തോന്നി. ദൈവം നിങ്ങളെ എല്ലാവരെയും അനുഗ്രഹിക്കട്ടെ. വളരെ നന്ദി
@sridhartheni8801
@sridhartheni8801 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக🙏🙏🙏🙏
@mkalaivani6340
@mkalaivani6340 Жыл бұрын
பதிவு அருமையான முறையில் இருந்தது இது போன்ற ஆலயங்களை உங்கள் மூலம் தரிசனம் செய்யவே நான் கண்டிப்பாக புண்ணியம் செய்திருக்க வேண்டும் ரொம்ப ரொம்ப நன்றி சார் 🙏👌
@jamunajagadeesan6939
@jamunajagadeesan6939 Жыл бұрын
சிவயநமபேசியதும்அருமை
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 Жыл бұрын
0mnamo SHIVAYA SHIVAYA namaha. Har Har Mahadev. Tiruchitrambalam. Swamye en mahgalukku Kalyana Varam arulavum swamiye.
@jphairoil
@jphairoil Жыл бұрын
நன்றி எங்க ஊர் 🙏🙏🙏
@saravanan3082
@saravanan3082 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய திருச்சிற்றம்பலம்
@sandyamuralismssv7473
@sandyamuralismssv7473 Жыл бұрын
OM NAMAH SHIVAYA NAMAH OM SAI SATGURU SAMEY VANAKAM
@kalavathis1483
@kalavathis1483 Жыл бұрын
சிறப்பாக பதிவு செய்து இருக்க நவநீதா இந்த கோயிலை தரிசனம் செய்ய அனைத்து பாவங்கள் நீங்கி விடும் வாழ்க வளமுடன் இனி உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் நவநீதா ராஜேந்திரன்கிட்ட பேசி திருச்சி வர சொல்றேன் ராஜேந்திரன் கூட நாகப்பட்டினம் வா
@jayamanivelu4742
@jayamanivelu4742 Жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@arumugamraju1921
@arumugamraju1921 Жыл бұрын
சிவன் எம் பெருமான் நம் பெருமான் சிவாய நம
@ancienttemples6119
@ancienttemples6119 Жыл бұрын
NIce.. Thank you...
@shanmugavelusrinivasan7275
@shanmugavelusrinivasan7275 Жыл бұрын
நேரில் வந்து பார்த்தது போன்று சிறப்பு நன்றி
@rajalakshmis4789
@rajalakshmis4789 Жыл бұрын
ஓம்நமச்சிவாயநமஹ. சற்குணநாதாநமஹ. ஓம்சிவபார்வதிநமஹ.
@Senthu1984
@Senthu1984 Жыл бұрын
Super 👌 Nama shivaya 🙏
@Kudavasal-Nandhini6
@Kudavasal-Nandhini6 Жыл бұрын
முதல் பார்வை
@krish.s246
@krish.s246 Жыл бұрын
அற்புதமான பதிவு 🙏
@Maanu1111
@Maanu1111 Жыл бұрын
On.namasivaya
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 Жыл бұрын
ஓம்நமசிவாய நமக
@gvijay2002
@gvijay2002 Жыл бұрын
யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் ஜயகுருராயா..
@manoharmuthukrishnan3893
@manoharmuthukrishnan3893 Жыл бұрын
Om Appa namah shivaya shivaya namah ohm appa potri potri appa thanks
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
ஓம் சர்வாங்கநாயகியே அம்மா போற்றி போற்றி 🙏🙏😔💐😔🙏🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🕉️sarguna natheshawarae ungalai Nan neril vanthu darisanam saitha palan arulvai yen APPA🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🔥🔥🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺pirappu aruppai pemmanae 🌿🌿🌿🤧
@viswanathanb2441
@viswanathanb2441 Жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ
@AnmigaBharatham
@AnmigaBharatham Жыл бұрын
சிவ சிவ 🙏
@rajaganapathyswamygal2474
@rajaganapathyswamygal2474 Жыл бұрын
இந்த கோவில் ஊழியம் செய்த ஒருவர் பிள்ளை ஒருவர் ஓதுவார் பணி வேண்டாம் என கூறிக்கொண்டு இருந்தார் அன்று அங்கு இருந்த நான் அவரை பாட சொல்லி பாரட்டி பேசிவிட்டு வந்தேன் பிறகு ஏற்று கொண்டு இன்று மிக சிறப்பான ஓதுவாராக இருக்கிறார் வணக்கம்
@mramasamy8625
@mramasamy8625 Жыл бұрын
கும்பகோணத்தில் இருந்து எந்த பஸ்களில் செல்லலாம் பஸ் ஸ்டாப் பெயர் என்ன
@ramdasss5289
@ramdasss5289 Жыл бұрын
God Bless U All.
@mathina
@mathina Жыл бұрын
Thanks sir God bless you all
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 Жыл бұрын
Thanks for the detailed descriptions.Om Namashivaya .
@mathina
@mathina Жыл бұрын
Glad you liked it
@ttfhack6638
@ttfhack6638 Жыл бұрын
தென்னாட்டுசிவனேபேற்றி என்னா ட்டாவருக்கும்சிவனேபேற்றி🙏🙏🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🏵️ Nandrigal 🌺 Thiruchitrambalam 💐💐🙏
@ushanatarajan1755
@ushanatarajan1755 Жыл бұрын
The temple is maintained very neat and clean by the authorities of a factory situated very near to this Temple
@jamunajagadeesan6939
@jamunajagadeesan6939 Жыл бұрын
விடியுஅருமைநான்நேரில்பார்த்ததைபோலவே கண்பித்தற்குநன்றி
@sdevkavin5061
@sdevkavin5061 Жыл бұрын
Superb information sir
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
இலவசமாக ஒரேமாதியான நிலம் சிவன் பெயரிலேயே இருக்கனும் அனைத்தும் நாம் அனுபவிப்பார்கள் மட்டுமே நிலம் உணவு உடை உறைவிடம் ஆபரணங்கள் ஒரேமாதிரி இருந்தாகனும் வாகனம்
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram Жыл бұрын
Om namasivaya
@vasukipalaniappan8957
@vasukipalaniappan8957 Жыл бұрын
Namasivaya om
@vethavalli6863
@vethavalli6863 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@seenivasanp6975
@seenivasanp6975 Жыл бұрын
🕉️OM NAMA SHIVAYA NAMA OM 🕉️🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@parameswaranvaidhyanathan5118
@parameswaranvaidhyanathan5118 Жыл бұрын
Before starting to explain the history of the temple and it's salient features, I request your channel to first intimate the exact location and route to the temple.....it will help out station people to visit the temple.....thanks
@mathina
@mathina Жыл бұрын
Ok sir
@vimalakumar9140
@vimalakumar9140 Жыл бұрын
நால்வர் சன்னதி ஏன் காட்ட வில்லை ஐயா திருச்சிற்றம்பலம்🌺🌺🌺
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 Жыл бұрын
🙏🙏🙏
@somusundaram3047
@somusundaram3047 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் நமசிவாய
@harirajanhari5357
@harirajanhari5357 Жыл бұрын
Fine
@vimalamuthukrishnan9935
@vimalamuthukrishnan9935 Жыл бұрын
Kaaladevi kovil(Madurai ,T.Kallupatti) thala varalaaru, temple opening g closing time matrum vazhi padum murai pathi vidavum.
@babumanickam7502
@babumanickam7502 Жыл бұрын
Neengal start pannumpodhu kovil ulla district taluk village location solli iruntha nallairunthu irukkum inme location solli sollngal🙏
@punithaarasu7467
@punithaarasu7467 Жыл бұрын
Om om nama shivaya om nama shivaya om nama shivaya
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌿🕉️Sargunanatheshwararuku arogara 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🌺🤧
@gurumoorthys9062
@gurumoorthys9062 Жыл бұрын
Om namasivaya nama om
@s.gogulakrishnan1552
@s.gogulakrishnan1552 Жыл бұрын
சூப்பர் சார்
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
ஓம் சற்குணநாதேஸ்வர் அப்பா போற்றி போற்றி 🙏🙏😔💐😔🙏🙏
@ajaytarun4567
@ajaytarun4567 Жыл бұрын
Very useful 👌 🙏🙏🙏🙏
@mathina
@mathina Жыл бұрын
Thanks a lot
@kathiravan8337
@kathiravan8337 Жыл бұрын
அருகில் இருக்கும் மற்றொரு தேவாரத்திருத்தலம் திருநல்லம் (கோனேரி ராஜபுரம்)
@umalakshmi9003
@umalakshmi9003 Жыл бұрын
🙏🌹💐
@murugang47
@murugang47 Жыл бұрын
வணக்கம் சொன்வற்றை திரும்பச் சொல்லாமல் கோவில் அமைவிடத்தை தெளிவாக கூறலாமே ஐயா.
@mathina
@mathina Жыл бұрын
Description ல் கோயில் அமைவிடம் தெளிவாக உள்ளது கோயில் அமைவிடம் தெளிவாக கூறப்பட்டுள்ளது பிராப்தம் இருந்தால் மட்டுமே இந்த கோயிலை தரிசனம் செய்யலாம் இல்லை எனில் தெளிவு இல்லாது போல் மாயமாக தோன்றும் check description video end part clearly mentioned the temple located details
@ramdasss5289
@ramdasss5289 Жыл бұрын
Narrator repeated same information many times. Better to inform where this temple is located etc. before hand. This be followed in future posts. Wishing your endeavour all success and useful to viewers. Best of luck. Bod bless u all.
@mathina
@mathina Жыл бұрын
All details clearly available in description
@selviselvi7299
@selviselvi7299 Жыл бұрын
ஓம் நமசிவாய எனக்கு அந்தபாக்கியம்கிடைக்குமாஓம்நமசிவாய 🔱🔱🔱📿📿📿💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲
@mathina
@mathina Жыл бұрын
சிவன் அருளால் நிச்சயமாக கிடைக்கும்
@erkbakya3164
@erkbakya3164 Жыл бұрын
Entha place 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om nama shivaya
@neelamegamramaswamy2126
@neelamegamramaswamy2126 Жыл бұрын
இந்த ஆலயத்திற்கு செல்லும் விவரங்களை கூறுங்கள்..
@mathina
@mathina Жыл бұрын
கும்பகோணத்திலிருந்து இருந்து நாச்சியார் கோயில் வழியாக பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ள கூந்தலூர் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது கருவிலி. கூந்தலூரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது. கும்பகோணத்திலிருந்து இருந்து நாச்சியார் கோயில் வழியாக பூந்தோட்டம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து கூந்தலூர் அடைந்து இத்தலம் அடையலாம்
@ramakrishnanj5448
@ramakrishnanj5448 Жыл бұрын
Temple location,bus route please 🙏
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
ஓம் நமசிவாய அப்பா போற்றி போற்றி போற்றி 🙏🙏😔💐😔🙏🙏
@nellaiappansubramoniapilla9280
@nellaiappansubramoniapilla9280 2 ай бұрын
Thanks for help us to view important temples but kindly avoid repeating the facts again and again . it's highly irritating and make us fast forward the video. Good luck
@mathina
@mathina 2 ай бұрын
Ok next time
@சிவசித்தம்-ர4ப
@சிவசித்தம்-ர4ப Жыл бұрын
நானும் ஒரு முறை சென்று உள்ளேன்
@mramasamy8625
@mramasamy8625 Жыл бұрын
கும்பகோணத்தில் இருந்து எந்த ஊர் செல்லும் பஸ்கள் செல்லும் பஸ் ஸ்டாப் பெயர் என்ன எப்படி செல்வது
@hemalathavenkatesh1714
@hemalathavenkatesh1714 Жыл бұрын
🌹🌺👌👌👌🙏🙏🙏🌹🌺🌷💐🙏🙏
@santhiselvam2174
@santhiselvam2174 Жыл бұрын
கோயில் எந்த ஊர் உள்ளது தயவுசெய்து கொடுங்கள் முகவரி வேண்டும்
@mathina
@mathina Жыл бұрын
கும்பகோணத்திலிருந்து இருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் கூந்தலூர் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 1 கி.மீ வடமட்டம் செல்லும் வழியில் சென்று கோயில் அடையலாம்.
@sumathisakthivel2374
@sumathisakthivel2374 Жыл бұрын
Location please..Distance from kumbakonam
@mathina
@mathina Жыл бұрын
Details available in description
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 Жыл бұрын
Some one wanted to know where it is?The video in the beginning says where it is and how to reach there.
@mathina
@mathina Жыл бұрын
Details available in description
@cartoontamilan6631
@cartoontamilan6631 Жыл бұрын
திருவாரூர் அல்லது பூந்தோட்டம் இருந்து பஸ் ரூட் என்ன?
@mathina
@mathina Жыл бұрын
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் பயணம் செய்து பூந்தோட்டம் அடைந்து பூந்தோட்டத்தில் இருந்து நாச்சியார் கோயில் வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து கூந்தலூர் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 1 கி.மீ வடமட்டம் செல்லும் சாலையில் நடந்தோ அல்லது ஆட்டோவில் பயணம் செய்து கருவிலி கொட்டிட்டை அடையலாம்
@rajgopalthiyagarajan2357
@rajgopalthiyagarajan2357 Жыл бұрын
Sir Thanks. Pl include location and contact No and nearest railway station.
@mathina
@mathina Жыл бұрын
Check description all the details available
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 Жыл бұрын
எந்த ஊர் அருகில் உள்ளது
@mathina
@mathina Жыл бұрын
கும்பகோணத்திலிருந்து இருந்து நாச்சியார் கோயில் வழியாக பூந்தோட்டம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து கூந்தலூர் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 1 கி.மீ தொலைவில் வடமட்டம் செல்லும் சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 13 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 3,9 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 27 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 13 МЛН