நமஸ்காரம், 10 பாசுரங்களில் திருப்பாணாழ்வார் ஒவ்வொன்றாக திருமாலின் திருமேனியை எப்படிப்பட்ட விளக்கத்துடன் அருளியுள்ளார். அது தெரியாமல் படிக்க வேண்டிய நிலையில் மடமடவென படித்தோம் அர்த்தம் அறியாமல். ஸ்ரீ ஸ்வாமிகள் நமக்கு விளக்கிவிட்டார். இனி கண்டிப்பாக மனதில் நின்று உறுகி படிக்கலாம். நன்றி. அடியேன்.
@malathynarayanan60783 жыл бұрын
கரால விந்தேனே மு கார விந்தம் என பால முகுந்தாஷ்டகத்தின் ஸ்லோகத்திற்கு அத்புதமாய் அர்த்தவிசேஷத்தை ஞானவித்து வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்தார் .அந்த பாலமுகுந்தனே வடபத்ர சாயியே திருவரங்கத்தில் ஆதிசேஷ பர்யங்த்தில் திருரங்கநாதனாக சேவை சாதித்துக்கொண்டு இருக்கிறார் என விண்ணப்பித்தார் .அவயங்கள் தோறும் பெருமானின் சௌந்தர்யத்தை வர்ணித்து புகழ் பாடியதோடு நில்லாமல் இந்த ஒன்பதாவது பாசுரத்தில் திருப்பானாழவார் முழு திருமேனியையும் அத்திருமேனியின் சமுதாய சோபையான லாவண்யத்தையும் ஏற்றதோடு பாடுகிறார் . நீலமேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே என ஆழவார் சாதித்தது போல் சுத்த சத்வமயமான திருமேனியின் லாவண்யத்தில் மூழ்கி தன் நெஞ்சத்தை பறிகொடுத்தார் என்றார் .ஒரு சிறு ஆலிலையில் சிறு குழந்தையாய் வடபத்ரசாயி திருக்கோலத்தில் பிரளய சமுத்திரத்தில் சப்த லோகங்களையும் உண்டு தனக்கே உரித்தான அ கடிதக்கடனா சாமர்த்தியத்தால் சேராததையும் சேர்த்து வைக்கும் திறனோடு ஒரு அத்விதீயனாய் நிகரற்று இருக்கும் கண்ணனே திருவரங்கத்தில் திருவரங்கநாதனாய் சயனித்து இருக்கிறார் .சிறு ஆலிலையில் ஜல சமுத்திரத்தின் நடுவில் அசையாமல் எங்கனம் சயனிக்க முடியும் என மார்க்கண்டேயர் திகைக்கும்போது அவர் வியப்பை போக்க ஜலத்திலிருந்து சறுக்கி நீர் நில வளம் கொண்ட உபய காவேரிக்கு மத்தியில் குண ப்ரவாஹமாய் திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதனாய் சயனித்து ஜகத் ரக்ஷனா சிந்தையிலும் பின் பிரத்யோகமாய் ஸ்ரீரங்கத்துவாசிகளையும் திருகடாக்ஷித்து யோகநித்திரையில் சயனித்து ஸ்திரமாய் ஆதிசேஷ பர்யங்கத்தில் தன் பரத்துவம் - மேன்மை ,சௌலப்பியா திகள் மேலோங்க சயனிக்கிறார் என ஆழவார் பாடியதை மானசீகமாய் அடியார்களும் அனுபவிக்கும் வண்ணம் தன் நிரதிசய ஞானத்தால் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் வர்ணித்தார் .மேலும் கோலமணி ஆரமும் ,முத்துதாமமும் சாற்றிக்கொண்டு ஒரு முடிவில்லாத அழகை தன் கண்களுக்குள் எல்லைப்படுத்திக்கொண்டு ஆழவார் அனுபவித்ததை- தொண்டரடிப்பொடி ஆழவார் பச்சைமாமலைபோல்மேனி என வர்ணித்ததை இவ்வாழவார் "நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினியே "என ஆழவாரின் நெஞ்சு நிறைந்த தை தன் வாசா கைங்கர்யத்தால் மேலும் அதை சிறப்பூட்டினார் . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .