Рет қаралды 80,460
கோவையை கலக்கும் பஞ்சு பரோட்டா,, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் பரோட்டா பிரியர்கள் ஏராளம். பரோட்டா வகைகளில் கொத்து புரோட்டா, பஞ்சு பரோட்டா, வீச்சு பரோட்டா, முட்டை பரோட்டா என பல வகைகள் உண்டு.பரோட்டாகளை விரும்பி சாப்பிடுபவர்களை பார்த்தால் நமக்கும் ஆசை வரும். தற்சமயம் கோவையிலும் அவினாசி சாலை சின்னியம்பாளையம் பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் பவன் என்னும் கடையில் "பஞ்சு பரோட்டா" விற்பனை தூள் கிளப்பி வருகிறது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பஞ்சு பரோட்டாவை விரும்பி சாப்பிடுவதாகவும், பஞ்சு போல் பார்க்க மிருதுவாக இருப்பதால் எளிதில் ஜீரணமாவதுடன், மென்மையாகவும் இருப்பதால் குழந்தைகள் அதிக அளவில் இந்த வகை பரோட்டாக்களை விரும்பி சாப்பிடுவதாகவும் கூறுகின்றனர். தாங்கள் தயாரிக்கும் பரோட்டாக்களில் உடலுக்கு தீங்கு அளிக்கக்கூடிய எந்த வகை பொருட்களையும் சேர்ப்பதில்லை எனவும், மாவு மற்றும் உப்பு ஆகியவற்றை மட்டுமே சேர்த்து பக்குவமாக பரோட்டா தயாரிப்பதாகவும் கூறுகின்றனர். இந்த பஞ்சு பரோட்டாக்கு எந்த வகை குருமா இருந்தாலும் சுவையாக இருக்கும் எனவும், மாலை 6 மணி முதல் பஞ்சு பரோட்டாக்களை வாங்க மக்கள் அதிக அளவில் வருவதாகவும், பரோட்டாவை விரும்பி சாப்பிடுவர்களுக்கு இந்த பஞ்சு பரோட்டா ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும். உங்களுக்கு நேரம் இருந்தால் ஒரு தடவை பஞ்சு பரோட்டாவை ருசித்துப் பாருங்கள். நன்றி நண்பர்களே மீண்டும் ஒரு சிறப்பு உணவுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.