கேட்டறியாதன கேட்டு, கண்டறியாதன கண்டேன். அற்புதம், மயிலை சற்குருநாதன் அவர்கள் குரலில் அவரது குழுவின் இசையும். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@janakikrishnamurthi55539 ай бұрын
தேவாரப்பாடல் என்ற பொன் மலருக்கு நாற்றமலிக்கும் நற்குரல் வளமும். தேன் தமிழ் உச்சரிப்பும்.ஐய் யாரப்பருக்கு அந்த நாவரசரே நேரில் பாடும் அனுபவம் பெட்ரோrம். தெய்வீக கவிதாஞ்சலி.வனங் கி வாzhத்துகிரோம்❤
@Kalpanaammu43 Жыл бұрын
கணீர் என்ற காந்த குரல் கேட்க ஆனந்தமாக உள்ளது.அழகான உச்சரிப்பு. சிவாய நம... ஐயா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manianuthiravasakam66623 жыл бұрын
மிக மிக அருமை. தருமபுரம் சுவாமிநாதனுக்கு அடுத்து தங்கள் வளமான குரலில் தேவாரம் கேட்க மிகவும் இனிமை. நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
@vijayasambathkumar7980 Жыл бұрын
அருமை அருமை
@n.desingurajann.desinguraj39215 ай бұрын
கேட்க திகட்டாத தேவாரம் பக்தி குரல் ஐயாறா போற்றி.
@rajarathinamlalithavenugop73012 жыл бұрын
தெய்வீகம் ராகம் குரல்வளம் இன்னிசை ஐயாறப்பர் திருவடிகளை வணங்கி போற்றுகின்றேன் எம் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி
@MurugesanKandaswamy-z8z Жыл бұрын
அப்பர் பெருமான் கயிலாய காட்சி கண்டு பாடிய திருப்பதிகத்தை தாங்கள் மிக அருமையாக பாடியுளீர்கள். திருச்சிற்றம்பலம்
@ramasubramaniangurumurthy32732 жыл бұрын
எம்பிரான் அப்பர் திருவடி போற்றி அருமையான பதிகம் அருமையான குரல் அய்யா திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவாய நம
திருநாவுக்கரசர் அருளியது 4.3 திருஐயாறு காந்தாரம் 1 மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி, போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன், யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது, காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன். கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன். 2 போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி, “வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன், ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது, கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! 3 எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி, முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன், அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது, வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! 4 பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி, துறை இளம் பல்மலர் தூவி, தோளைக் குளிரத் தொழுவேன், அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது, சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டுஅறியாதன கண்டேன்! 5 ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி, காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன், ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது, பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! 6 தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி, உள் மெலி சிந்தையன் ஆகி, உணரா, உருகா, வருவேன், அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது, வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! 7 கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி, வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன், அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது, இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! 8 விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடி, பெரும் புலர்காலை எழுந்து, பெறு மலர் கொய்யா வருவேன். அருங் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது, கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! 9 முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி, பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன், அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது, நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! 10 திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி, “எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன், அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது, பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்; கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! 11 வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி, களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன், அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது, இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! திருச்சிற்றம்பலம்
@ShaivamTV2 жыл бұрын
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@Rajkumarbhat709 ай бұрын
திருநீலகண்டம் ....சிவாய நமஹ..
@brindhad64799 ай бұрын
பாடல் கேட்டு கொண்டு படிக்க... ❤
@SureshKumar-ow2ji Жыл бұрын
Om namo shivaya 🙏
@meikandanmegaraj32859 ай бұрын
Namasivaya
@VijiAshokmaran3 ай бұрын
Om ñamasivaya
@RajkumarSivaji4 ай бұрын
ஐயாறா ஐயாறா
@nadanasabesanj685810 ай бұрын
❤
@indirasreesree13683 жыл бұрын
Flute daiveegam,patu talam daiveegam
@ஆனந்தகூத்தன்டி.வி2 жыл бұрын
மயிலை சற்குரு ஓதுவர்
@sivaindirakumar49842 жыл бұрын
Excellent pakthi and real devotional singer. Toronto 🇨🇦