சுத்த சன்மார்க்கிக்கள் திருமணம் செய்லாமா கூடாதா? திருமணம் செய்து நன்முயற்சியில் இருக்கலாமா கூடாதா? திருமணம் தடையாக அமையுமா? குழந்தை பெக்கலாமா கூடாத? இதற்கான வள்ளலார் கூறும் விளக்கங்கள் கூறுங்கள் ஐயா.
@exploitn3t742Ай бұрын
தங்களுக்கு பதிலளிக்க நான் ஒன்றும் பெரிய ஞானியும் அல்ல. ஆனால் புத்தகத்தில் படித்ததை வைத்தும் அதை எப்படியாவது பயிற்சி செய்து அடைந்து விட வேண்டும் என்பதே வைத்தும் உங்களுக்கு பதிலளிக்கிறேன். சற்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் திரை எனும் விழிப்புணர்வில் தோன்றும் ஒளியே நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுமே. படம் பார்க்கும் பொழுது அது வெறும் திரை அதில் தோன்றும் ஒலி தான் மொத்த படம், அதில் வரும் உருவம் அதில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மையல்ல என்ற உணர்வுபூர்வமான புரிதல் நமக்கு இருப்பதால் அதில் வரும் கதாபாத்திரத்திற்க்கோ அல்லது நிகழ்வுகளுக்கோ அதிகமாக வருந்தாமல் சில நேரங்களில் கடந்து செல்கிறோம். இதேபோல நமது விழிப்புணர்வில் ஏற்படும் மன அசைவுகளே இந்த உலகம் அதை இருக்கும் வரை அனுபவித்து விட்டு அதனுடன் எதனுடனும் ஒட்டாமல் நடப்பது எதுவாயினும் அதுவும் ஒரு நிகழ்வே என்று இருந்தால் போதும். இதற்கு பெயர் தான் சகஜ மார்க்கம். தூக்கத்தில் மன அசைவுகள் அனைத்தும் தடைப்பட்டு விழிப்புணர்வு மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது திடீரென ஏற்படும் மன அசைவை கனவு. அந்த கனவு முடியும் வரை அதில் வரும் நிகழ்வுகளும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை, எந்தவிதத்திலும் கனவு கண்டு கொண்டிருக்கும் பொழுது இது பொய் நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் அந்தத் தூக்கத்தில் ஏற்படும் கனவுதான் இது என்று என்று உன்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. எனவே அந்த கனவில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் கனவு முடியும் வரை உண்மை. நீ கண்டு கொண்டிருப்பது கனவுதான் என்று எனக்குத் தெரியும் எனவே இப்போது நான் உன் கனவிற்குள் வந்து உனது மன அசைவுகளை கவனித்துக் கொண்டு இருக்கும் அந்த விழிப்புணர்வை பிடித்து இழுத்து வந்து நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய் நன்றாக பார் என உன்னை காட்டி விட்டேன் இப்போது உன்னை மீண்டும் உன்னுடைய கனவிற்குள் செல்ல சொல்கிறேன். இப்போது நீ கனவு கண்டு கொண்டிருக்கிறாய் என்ற அறிவுடன் உன்னுடைய கனவை காண்பாய் அது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கனவே இன்று நீ உணர்வு பூர்வமாக அறிவாய். அது நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் உண்மையானவை அந்த கனவு முடியும் வரை என்பதையும் நீ அறிவாய். எனவே இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால் அதில் அந்த கனவில் வரும் அனைத்து இன்ப துன்ப நிகழ்வுகள் வெறும் நிகழ்வுகளை அதாவது இன்னும் சொல்லப்போனால் அது ஒரு மன கற்பனையை என்று நீ அறிவாய். அப்படி இருக்கும்போது அது செய்யலாம் இது செய்யக்கூடாது அது வேண்டும் இது வேண்டாம் நான் அதை பின்பற்றுகிறேன் நான் இதை பின்பற்றுகிறேன் இன்று எதனுடனும் நீ ஓட்ட மாட்டாய். இந்த நிகழ்வு வேண்டுமானாலும் செய்யலாம் அது வெறும் நிகழ்வு மட்டுமே என்ற அறிவு மட்டும் இருந்தால் போதும். எப்படி கனவு முடியும் பொழுது கனவில் ஏற்பட்ட அனைத்து நிகழ்வுகளும் பொய் என்று நீ அறிவாயோ அதேபோல் இவ்வுலகத்தில் இருந்து உன்னுடைய விழிப்புணர்வு பிரியும்போது இவ்வழி புனர்வாழ்வு ஏற்பட்ட அனைத்து நிகழ்வுகளும் பொய்யென நீ அறிவாய். இறுதியாக உங்களுக்கு சொல்ல விரும்புவது விழிப்புணர்விற்கு பின்னால் உள்ள பல அடுக்குகளை கொண்ட சூட்சுமம் உலகங்களை ஆராய இந்த ஜென்மத்தை பயன்படுத்திக் கொள்ள நீ விரும்பினால் அதற்காக பல வருடங்கலை தியாகம் செய்ய மனம் இருந்தால், வாழ்ந்த அனைத்தும் யானைகள் என்னென்ன பயிற்சிகளையும் என்னென்ன முறைகளையும் பின்பற்றினால் வளவா அதை ஏன் நீயும் செய்து திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெறாமல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் இவ்வுலகத்தை அடையலாம். அல்லது தனது மனதை தனது கைக்குள் கொண்டு வந்து தனது மனம் தனது உணர்வுகள் என்ன நிகழ்வுகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது எதன் மேல் பட்ருள்ளது எது வேண்டாம் என்று ஒதுக்கி இருக்கிறது இதையெல்லாம் அறிந்து எந்த நிகழ்வின் மீதும் எந்த எண்ணங்கள் மீதும் எந்த உணர்ச்சிகள் மீதும் ஒட்டாமல் வெறுமனே கவனித்து உலக வாழ்க்கையை வாழ்ந்து விட்டு ஒரு காலம் வரும்போது அதற்காக தன் உடலை ஆயத்தப் படுத்திக் கொள்வதே சேர்ந்த முறை என்று நான் கருதுகிறேன்
@qublascience369Ай бұрын
அருமை ஐயா! மிக்க நன்றி. தாங்கள் கூற வரும் சூட்சமம் என்னவென்று சொல்வேன்! முற்றிலும் புரிந்தேன். 🙏