மறவாதிரு நெஞ்சமே உனக்கிது பிறவா மருந்தாமே அநுபல்லவி. நறுமாமலர்ப் பொழில்சூழ் தில்லையம்பல நாதர்க்குஞ்சிதச் செம்பொற் பாத மிமைப்பொழுதும் (மறவா) சரணங்கள். 1. நிச்சயமாகவே கேளா யஞ்செழுத்துண்டு நிற்கும் நிலையையறிந் துச்சரித்துக்கொண்டு வைச்சவழியே சென்று அச்சமறவே கண்டு மன்றுளானந்த நடமின்றே கண்டுகொளென்றும் (மறவா) 2. பழையவடியார் திருவடியில் வீழ்ந்தெழுந்து பணிசெய்யவே ய வரிரங்கிமன மகிழ்ந்து பிழைவராமற் காத்துத் திருவடி நீழலிற் பிசகா திருக்க வைப்ப ராசையாய் நீ எப்போதும் (மறவா) 3. தினவாரமுந்திரு மூலத்தானமேசென்று தெரிசனம்செய் சிவ காமிசந்நிதிகண்டு அனவரதமுஞ் செம்பொனம்பலத்தாடியவம் மையப்பர் பொற்றாள் செம்மையாகக் கண்டு (மறவா)
@sooryakannan90896 жыл бұрын
Beautiful composition by Muthuthandavar and great singing by Nithyashree ! Thanks !
@Divya03126 жыл бұрын
Happy birthday dear Nithyasree Mahadevan.. Many many happy returns of the day. Today August 25th 2018.. on this day in 1973 was born this Poomkuyil.. love you Mam... Keep going. On this birthday I pray for your health and Music...