Neramithu - Rishimoolam | நேரம் இது நேரம் இது | P.Susheela,TMS, Ilayaraja, Sivaji Ganesan Superhits

  Рет қаралды 301,225

INRECO Tamil Film Evergreen Nostalgic Songs

INRECO Tamil Film Evergreen Nostalgic Songs

11 жыл бұрын

Movie :
Rishimoolam
Song Title :
Neramithu
Sung By :
P.Susheela & T.M.Soundararajan
Lyric :
Kannadasan
Composer :
Ilaiyaraaja
Cast :
Sivaji Ganesan & K.R.Vijaya
Genre :
Love
Produced BY:
The Indian Record Mfg Co.Ltd
Year :
1979

Пікірлер: 47
@ezhilarasandevaraj7381
@ezhilarasandevaraj7381 2 жыл бұрын
"நீங்கள் பாடிய இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்." - ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா வந்த பெண்மணி. இளையராஜாவின் குரலை கேட்டதும் அந்த வெளிநாட்டு பெண் அசையாமல் அப்படியே நின்று விட்டார். மகாபலிபுரத்தில் ஒரு மாலை நேரத்தில் நடந்த விஷயம் இது. பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வந்திருந்தார் அந்தப் பெண். மகாபலிபுரம் சிற்பங்களை பார்த்து ரசித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு அவர் வந்தார். அந்த விடுதியில்தான் இளையராஜாவும் தங்கி இருந்தார். இது 1980க்கு முன். 'ரிஷிமூலம்' என்ற சிவாஜி படத்திற்கான பாடல் கம்போசிங் நடந்து கொண்டிருந்த நேரம். அதற்காகத்தான் அந்த மகாபலிபுரம் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்கள் படக் குழுவினர். மூன்று நாட்களாக இடைவிடாமல் இசை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. 'ரிஷிமூலம்' படத்தில் ஒரு பாடல். "நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத..." இந்தப் பாடலுக்கான மெட்டை இளையராஜா விதம்விதமாக பாடிக் காட்டினார். படக் குழுவினர் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள். மகாபலிபுரத்தின் மாலை நேரத்து ரம்மியமான சூழலில் இளையராஜாவின் குரல் வழக்கத்தைவிட இனிமையாக ஒலித்தது. இப்படி அவர் மெட்டுப் போட்டு பாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்... தற்செயலாக அந்த பிரான்ஸ் நாட்டு பெண், இளையராஜா குழுவினர் தங்கியிருந்த அறையை கடந்து சென்றார். அறைக்குள் இருந்து வெளிவந்த இளையராஜாவின் குரலைக் கேட்டதும், அந்தப் பெண் நடப்பதை நிறுத்திவிட்டு அசையாமல் அப்படியே, அந்த இடத்திலேயே மகாபலிபுரம் சிலைபோல மணிக்கணக்காக நின்று கொண்டிருந்தார். வெகுநேரம் பாடிக்கொண்டிருந்த இளையராஜா, தன் குரலுக்கு சற்று ஓய்வு கொடுக்க... அப்போதுதான் அந்தப் பெண் தன் சுயநினைவுக்கு வந்தார். இந்த நேரத்தில் இளையராஜா தன் அறையிலிருந்து மெல்ல வெளியே எட்டிப் பார்த்தார். அதே நேரம் அந்தப் பெண்ணும் இளையராஜா அறைக்கு அருகே மெல்ல வந்து, 'நான் உள்ளே வரலாமா' என சைகையிலேயே அனுமதி கேட்க, இளையராஜா உடன் இருந்தவர்கள் அவரை உள்ளே வரச் சொல்ல, மெல்ல மெல்ல அடியெடுத்து அறைக்குள் நுழைந்த அந்தப் பெண், அறையைச் சுற்றிலும் பார்த்தார். எல்லோரும் விரிப்பை விரித்து தரையில் அமர்ந்திருந்தார்கள். 'உட்காருங்கள்' என இளையராஜா சொல்ல, அந்தப்பெண் இளையராஜாவுக்கு எதிரே பணிவோடு தரையில் அமர்ந்தார். சிறிது நேர மௌனத்துக்குப் பின் அந்த பிரான்ஸ் பெண் மெல்லிய குரலில் இளையராஜாவை நோக்கிக் கேட்டார். "இப்போது நீங்கள் பாடிக் கொண்டிருந்தீர்களே. அந்த பாடலை இன்னும் ஒருமுறை எனக்காக பாட முடியுமா ?" "அதனாலென்ன, பாடுகிறேன்" என்று சொன்ன இளையராஜா மீண்டும் ஒருமுறை மெல்லிய குரலில் அந்த 'நேரமிது' பாடலை பாட ஆரம்பிக்க, எதிரில் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. பாட்டை முடித்துவிட்டார் இளையராஜா. ஆனால் அதன் பிறகும் கூட அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் வழிவது நிற்கவில்லை. இளையராஜா புரிந்துகொண்டார். இசை செய்யும் மாயங்கள் ஜாலங்கள் அவருக்கு நன்றாகவே தெரியும். ஜாதி இனம் மொழி எல்லாவற்றையும் கடந்தது இசை. சிறிது நேரத்துக்கு பின் அந்த பெண் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னார். "நீங்கள் பாடிய இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன். எனக்காக நீங்கள் ஒன்று செய்ய முடியுமா ? எனக்கு பியானோ வாசிக்க தெரியும். அதில் நான் இசைப்பதற்காக, இப்போது நீங்கள் பாடினீர்களே, அந்த மியூசிக் நோட்ஸை எழுதி தர முடியுமா ?" எதுவும் சொல்லாமல் தன் முன்னால் இருந்த ஒரு பேப்பரை எடுத்து, தான் பாடிய பாடலுக்கான இசைக்குறிப்புகளை எழுதிக்கொடுத்தார் இளையராஜா. கண்களில் நீர் துளிர்க்க அதை வாங்கிக் கொண்டு அந்தப் பெண் சொன்னார். "நான் புறப்படுகிறேன். இதற்கு முன்னால் எத்தனையோ முறை இந்தியாவுக்கு வந்து இருக்கிறேன். ஆனால் இந்த தடவை உங்களை வந்து சந்தித்ததை, என் வாழ்நாளில் ஒருபோதும் நான் மறக்கவே மாட்டேன். நன்றி." இளையராஜாவும் கை குவித்து வணங்கி வழி அனுப்பினார். அந்தப் பெண் புறப்பட்டு போன பின்னரும் கூட, வெகுநேரம் அந்த அறையில் அமைதி நிலவியது. ஆனால் அந்த மௌனத்தில் கூட ஏதோ ஒரு இசை கலந்திருந்தது. இசைக்கு மயங்காத இதயங்கள் எதுவுமே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அந்த இசை என்ற பிரம்ம நாதத்துக்கு, இனம், மதம், நாடு, மொழி என்ற எல்லைகள் எதுவுமே
@gorillagiri7327
@gorillagiri7327 4 ай бұрын
Superb 👍 thanks for your information
@sumathip3745
@sumathip3745 13 күн бұрын
அருமையான பதிவு, ஏடுகளில் பதிவு பண்ண வேண்டிய ஒரு அற்புதமான நிகழ்வு. இதை படிக்கும் போது ஐயா அவர்களும் முகம் தெரியாத அந்த பெண்மணியும் என் மனக் கண் முன்னால்..அடடா இளையராஜா அவர்கள் அனைத்து உணர்வுள்ள உயிர்களிடம் தன் இசையால் ஆட்கொள்பவர் என்பதை மீண்டும் நான் உணர்ந்த தருணமிது.கண்கள் தானாகவே கலங்குகின்றன. இளையராஜா ஐயா வாழ்க வாழ்க. 🙏🙏🙏🙏
@sekerthalapathy2801
@sekerthalapathy2801 Жыл бұрын
என்ன குரல்வளம் அருமை அருமை நண்பரே தாங்கள் இது போன்ற பாடல் தோடர்து கோன்டே இருக்கட்டும் அர்புதம் இவன் V.G சேகர் பன்னாள்
@asokkumarr.r.3406
@asokkumarr.r.3406 6 жыл бұрын
சென்னையில் புவனேஸ்வரி தியேட்டரில் 1980 ல் சூளையில் பார்த்த படம் மனதைவிட்டு அகலாத பாடல்! Ever we love the song! Wow TMS sir!sucila mam!
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
இரவு நேர சேட்டைகளோடு ஆரம்பமாகும் இப்பாடலை, இசைஞானி நமக்கு தந்த விதம் மாலை நேரத்தென்றல் நம்உடலை வருடிச்செல்வது போல் இருக்கிறது அருமை !! இசை அரசரும்,இசை அரசியும் நேரமறிந்து பாடியிருக்கிறார்கள், சூப்பர் !! வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் நெய்வேலி கணபதி திரையரங்கம். எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி... நெய்வேலிக்கு...! படம் : ரிஷி மூலம். இசை : இசைஞானி இளையராஜா.
@kanagaraj1043
@kanagaraj1043 5 күн бұрын
மிகவும் அழகான வரிகள் பாடல்
@goodies5ful
@goodies5ful 5 ай бұрын
TMS sir & Susheela Mom are living with the song.
@kumaraguru9919
@kumaraguru9919 4 жыл бұрын
ஆ: நேரமிது நேரமிது நெஞ்.சில் ஒரு பாட்டெழுத இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத... பிறந்தது பேரெழுத.. பெ: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத... பிறந்தது பேரெழுத ஆ: மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா தாகம் எல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா.. மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா தாகம் எல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா.. பெ: கூண்டுக்கிளிக்கொரு ஆசை பிறந்தபின் கோலம்போடும் நேரங்கள் ஆ: நேரமிது நேரமிது நெஞ்.சில் ஒரு பாட்டெழுத பெ: திங்கள் ஒளி திங்களைப்போல் உங்கள் பிள்ளை உங்களைப்போல் உங்களைத்தான் நாடுகிறான் என்னிடம் ஆசையில்லை .. திங்கள் ஒளி திங்களைப்போல் உங்கள் பிள்ளை உங்களைப்போல் உங்களைத்தான் நாடுகிறான் என்னிடம் ஆசையில்லை .. ஆ: நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும் உன்னைப் போலத் தோன்றுதே பெ: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத ஆ: இன்னும் ஒன்று வேண்டுமென்று தெய்வத்திடம் கேட்டிருந்தேன் இந்த ஒன்றே போதுமென்றாள் தேவி என் காதினிலே பெ: ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டாலென்ன பிள்ளை. கூட இன்பமே.. ஆ: நேரமிது நேரமிது பெ: நெஞ்சில் ஒரு பாட்டெழுத ஆ: இன்பம் என்னும் சொல் எழுத பெ: நீ எழுத ஆ: நான் எழுத பெ: பிறந்தது பேரெழுத... இரு: பிறந்தது பேரெழுத....
@vnathysubenthiran3268
@vnathysubenthiran3268 Ай бұрын
Thanks for lyrics 🎉
@htcmohan
@htcmohan 3 жыл бұрын
Susheela amma and TMS aiyah ... amazing combination. The opening musical note displayed "maestro's class" Susheela amma @ 2:08 - 2:14 ... my favorite line. I was blown away.
@poornimaj9574
@poornimaj9574 2 жыл бұрын
En daddy Ku romba pudicha song ethu ... daddy ipo illa en koda ...Miss you Daddy 💔💔
@SENTHILKUMAR-cp4el
@SENTHILKUMAR-cp4el 4 жыл бұрын
This is not a song.but a creation of total univese through one man s elevated mind.min 1.24 to 1.36 is origin
@rajeevjvs5300
@rajeevjvs5300 4 жыл бұрын
Tyh
@jesusjesus5514
@jesusjesus5514 2 жыл бұрын
Say Nothing.Superbbb...❤️🌹🌹🌹🙏
@kumaraguru9919
@kumaraguru9919 4 жыл бұрын
படம்: ரிஷி மூலம்(1979), பாடியவர்கள் :டிஎம் சௌந்தரராஜன், பி சுசீலா, இசை: இளையராஜா,பாடலாசிரியர்: கண்ணதாசன் ********************************************************************** ஆ: நேரமிது நேரமிது நெஞ்.சில் ஒரு பாட்டெழுத இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத... பிறந்தது பேரெழுத.. பெ: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத... பிறந்தது பேரெழுத ********************************************************************** ஆ: மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா தாகம் எல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா.. மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா தாகம் எல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா.. பெ: கூண்டுக்கிளிக்கொரு ஆசை பிறந்தபின் கோலம்போடும் நேரங்கள் ஆ: நேரமிது நேரமிது நெஞ்.சில் ஒரு பாட்டெழுத ********************************************************************** பெ: திங்கள் ஒளி திங்களைப்போல் உங்கள் பிள்ளை உங்களைப்போல் உங்களைத்தான் நாடுகிறான் என்னிடம் ஆசையில்லை .. திங்கள் ஒளி திங்களைப்போல் உங்கள் பிள்ளை உங்களைப்போல் உங்களைத்தான் நாடுகிறான் என்னிடம் ஆசையில்லை .. ஆ: நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும் உன்னைப் போலத் தோன்றுதே பெ: நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத ********************************************************************** ஆ: இன்னும் ஒன்று வேண்டுமென்று தெய்வத்திடம் கேட்டிருந்தேன் இந்த ஒன்றே போதுமென்றாள் தேவி என் காதினிலே பெ: ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டாலென்ன பிள்ளை. கூட இன்பமே.. ஆ: நேரமிது நேரமிது பெ: நெஞ்சில் ஒரு பாட்டெழுத ஆ: இன்பம் என்னும் சொல் எழுத பெ: நீ எழுத ஆ: நான் எழுத பெ: பிறந்தது பேரெழுத... இரு: பிறந்தது பேரெழுத.... **********************************************************************
@sabari8734
@sabari8734 3 жыл бұрын
Super song
@dailythanthipallavaram5212
@dailythanthipallavaram5212 5 жыл бұрын
ilayaraja music 2000murai ketirupen thigattavillai
@velmuruganar8432
@velmuruganar8432 2 жыл бұрын
Enga ammaviku pedicha padal. Enga Amma adikadi padum padal
@maheswaranmaheswaran1390
@maheswaranmaheswaran1390 2 жыл бұрын
Ethu ore porkalam
@rajendranm5667
@rajendranm5667 4 ай бұрын
❤super.sons. super music thanks
@karthikkeyen5440
@karthikkeyen5440 2 жыл бұрын
அருமையான பாடல்
@vinsentvi
@vinsentvi 2 ай бұрын
Wow
@INRHINDTAMIL
@INRHINDTAMIL 2 ай бұрын
❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits Carnatic Videos - bit.ly/inrCarnatic
@dailythanthipallavaram5212
@dailythanthipallavaram5212 6 жыл бұрын
ever green song
@seenivasanm6948
@seenivasanm6948 2 жыл бұрын
Nice song
@mohdsheik1655
@mohdsheik1655 3 жыл бұрын
Super. H
@ibram7961
@ibram7961 6 жыл бұрын
What a nice song li is
@ayyasamyv3455
@ayyasamyv3455 2 жыл бұрын
APPA enna oru kavi
@nagarajann3991
@nagarajann3991 2 жыл бұрын
What,a,song
@1minutesinfo610
@1minutesinfo610 5 жыл бұрын
Nenjai ganaka vaithu kangalil kaneerai varavaikkum padal Tamil padathilthan ithu mathiri manathai urukkum padalai kettka mudiyum
@vikysurya2568
@vikysurya2568 9 жыл бұрын
ISAIKU NEEYE BRAHMMA RISHI
@user-nu5sv1gq4h
@user-nu5sv1gq4h 7 ай бұрын
@SaravananSaravanan-zc2xy
@SaravananSaravanan-zc2xy 3 ай бұрын
சூப்பர் பாடல் என்றும் இனிமை
@saregamakaruna
@saregamakaruna 2 жыл бұрын
❤❤❤
@subbudevendra
@subbudevendra 5 жыл бұрын
naeramidhu Naeramidhu nenjil Oru Paattezhudha inbam Ennum Sol Ezhudha nee Ezhudha Naan Ezhudha pirandhadhu Paerezhudha pirandhadhu Paerezhudha naeramidhu Naeramidhu nenjil Oru Paattezhudha inbam Ennum Sol Ezhudha nee Ezhudha Naan Ezhudha pirandhadhu Paerezhudha pirandhadhu Paerezhudha maegaththilae Velli Nilaa kaadhalilae Pillai Nilaa dhaagamellaam Theeruvadhu pillaiyin Thaalaattilaa maegaththilae Velli Nilaa kaadhalilae Pillai Nilaa dhaagamellaam Theeruvadhu pillaiyin Thaalaattilaa koonduk Kilikkoru Aasai Pirandha Pin kolam Podum Naerangal naeramidhu Naeramidhu nenjil Oru Paattezhudha thingal Oli Thingalai Pol ungal Pillai Ungalai Pol ungalai Thaan Naadugiraan ennidam Aasai Illai thingal Oli Thingalai Pol ungal Pillai Ungalai Pol ungalai Thaan Naadugiraan ennidam Aasai Illai nee Petra Pillaiyin Vaegamum Kobamum unnai Pola Thondrudhae naeramidhu Naeramidhu nenjil Oru Paattezhudha innum Ondru Vaendum Endru dheivaththidam Kaettirundhaen indha Ondrae Podhum Endraal devi En Kaadhinilae raaththiri Raaththiri Thookkam Kettaal Enna pillai Kooda Inbamae naeramidhu Naeramidhu nenjil Oru Paattezhudha inbam Ennum Sol Ezhudha nee Ezhudha Naan Ezhudha pirandhadhu Paerezhudha pirandhadhu Paerezhudha
@rajeevjvs5300
@rajeevjvs5300 4 жыл бұрын
Super
@vigneshasaithambi2635
@vigneshasaithambi2635 5 жыл бұрын
l lovely song
@kprmgr1006
@kprmgr1006 8 жыл бұрын
SIMA KURALUKU ORUVAR T*M*S***
@lathas495
@lathas495 6 жыл бұрын
i want to upload malejkarokesingers c n dinakaran coimbatore
@lakshmananr3578
@lakshmananr3578 5 жыл бұрын
JJ
@sethunakkeeran1975
@sethunakkeeran1975 3 жыл бұрын
🔻🔺
@user-uq3lp7nh8v
@user-uq3lp7nh8v 4 ай бұрын
அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@devisivamsivam5507
@devisivamsivam5507 4 жыл бұрын
சூப்பர் பாடல்
@govindarajgovindaraj3408
@govindarajgovindaraj3408 2 жыл бұрын
Dq
@govindarajgovindaraj3408
@govindarajgovindaraj3408 2 жыл бұрын
Ast
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 99 МЛН
out video 07 05 2024 15 03 11
4:13
Srinivasan R
Рет қаралды 3,2 М.
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 12 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 1,8 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 145 М.
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Dj Jack SpaRRow
Рет қаралды 1,7 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,3 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 28 МЛН
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 175 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 11 МЛН