Рет қаралды 3,844
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
பாடல் 228
பாதி மதி நதி போதும் அணிசடை
நாதர் அருளிய… குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய… மணவாளா
காதும் ஒருவிழி காகம் உற அருள்
மாயன் அரி திரு… மருகோனே
காலன் எனை அணுகாமல் உனது இரு
காலில் வழிபட… அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகை உறு… சிறைமீளா
ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வர வரும்… இளையோனே
சூதம் மிகவளர் சோலை மருவு
சுவாமி மலைதனில்… உறைவோனே
சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வல… பெருமாளே