மிக்க நன்றி.உடனடி உபயோகத்திற்கு என்றால் எருக்கு இலை பூ காய் எல்லாம் சிறிதாக கட் செய்து மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து 5 நாள் கழித்து வடிகட்டி 2 பங்கு தண்ணீர் சேர்த்து மண்ணுக்கு ஊற்றவும். 4 பங்கு தண்ணீர் சேர்த்து வடிகட்டி இலைகளின் மேல் ஸ்பிரே செய்யலாம்.நீண்டநாள் வைத்திருந்து தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால் இலையோடு நாட்டு சர்க்கரை போட்டு மூடி வைத்து கிளறி கிளறி விட்டு நிழலில் வைத்து 15 நாள் கழித்து வடிகட்டி பயன்படுத்தலாம்.