Pallaandu Pallaandu - Vishnu Anjali

  Рет қаралды 1,743

ABHAYAKARAM

ABHAYAKARAM

Күн бұрын

Vishnu Anjali (Pallaandu Pallaandu)
Gambiranaattai Ragam
Adhi Thalam
Nattuvangam & Dance Choreography by Kalaimamani Dr.Preetha Prabhudoss
Vocal. Puduvai Balaji Ramji
Miruthangam. Puduvai Bharath
Violin. Puduvai Thanigachalam
Composed by Puduvai Kalaimamani Dr.Abhayakaram Krishnan
PUDUVAI BHARATHALAYA, Puducherry
கடவுளுக்கே கண் திருஷ்டி கழிக்கும் பல்லாண்டு பாசுரம்....
பெரியாழ்வார் கூடலழகர் பெருமாளை (மதுரை)
பார்த்து பாடிய அழகான
பாசுரம் பல்லாண்டு
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு"
"விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்"
மதுரையின் நான்கு
வீதிகளை சுற்றிக்கொண்டு
வரும் போது,
தன் குழந்தைக்கு விழாவில் மரியாதை செய்வதை பார்க்க தாயும் தந்தையும் பார்க்க ஆசைப்படுவது போல,
மதுரை கூடலழகர் பெருமாள் இருப்பு கொள்ளாமல், தானும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், கருடவாகனத்தில் வர,
எம்பெருமானை ஆகாசத்தில் கருடவாகனத்தில்
பார்த்த பெரியாழ்வார்,
"தன்னுடன் கூட வந்திருக்கும் பண்டிதர்களில்,
சிலர் 'பரமாத்மா என்று ஒருவர் இல்லவே இல்லை' என்றும்,
சிலர் 'அணுக்கள் தான் உலகம்' என்றும்,
சிலர் 'இயற்கையே தான் உண்மை' என்றும்,
சிலர் 'கர்மா (action-reaction ) தான்' என்றும்
சிலர் 'காலம் தான்' என்றும்,
சிலர் 'வேதத்திலேயே சொன்ன உபதெய்வங்களையே பரமாத்மா' என்றும்,
சிலர் 'தெய்வம் உண்டு, ஆனால் தெய்வத்துக்கு நாமம் இல்லை, ரூபம் இல்லை, குணம் இல்லை என்றும்' அரச சபையில் வாதிட்டார்கள்
இவர்கள் மத்தியில், இப்படி அப்பட்டமாக நாம, ரூப, குண, சௌந்தர்யத்துடன் "தானே பரமாத்மா" என்று வந்து விட்டாரே?!!
இவர்களால் பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டு விடுமோ!!"
என்று பெரியாழ்வார் நினைத்தார்.
"குழுமி இருக்கும் அத்தனை பேரும் பெருமாளின்
அருமை தெரிந்து இருப்பார்களா?
பக்தர்கள் நடுவில், பெருமாள் இப்படி
திவ்ய காட்சி கொடுத்தால்,
பக்தர்கள் ஆசை தீர ஆடுவார்கள், பஜிப்பார்கள்.
இவர்களோ! இத்தனை காலமும், குதர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள்.
பெருமாளின் மகிமையை உணராது இருந்தார்கள்.
இவர்களும் பார்க்கும் படியாக, கொஞ்சம் அவசரப்பட்டு தரிசனம் தந்துவிட்டாரோ?"
என்று பெரியாழவார் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
"பெருமாளுக்கு திருஷ்டி பட்டு இருக்குமோ?!!"
என்று தோன்ற,
"பெருமாளுக்கு பல்லாண்டு பாடி திருஷ்டி கழிக்க வேண்டும்"
என்று பெரியாழ்வார் ஆசைப்பட்டார்.
பெரியாழ்வார் அழகாக இசையோடு பாடுவார்.
"வித்வத் சபைக்கு வருகிறோமே"
என்பதால், பஜனை செய்ய விடமாட்டார்கள் என்பதால் தாளம்
எடுத்துக்கொண்டு வரவில்லையாம் பெரியாழ்வார்.
பெருமாள் கருடனில் அமர்ந்து காட்சி கொடுக்க, இப்போது பஜனைக்கு அவசியம் வந்ததும்,
பெரியாழ்வாருக்கு தாளம் தேவைப்பட்டது.
யானையின்
இருபக்கமும் தொங்கி கொண்டிருந்த
மணிகளையே தாளமாக
எடுத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று மொத்திக்கொண்டு,
பகவானுக்கு மங்களாசாஸனம் செய்கிறார் பெரியாழ்வார்.
"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!" என்று சாமானியன் நினைக்கிறான்.
"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமே" என்று பக்தன் நினைக்கிறான்.
"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா,
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து
தோன்றி விட்டார்.
பக்தனான பெரியாழ்வாருக்கு
"பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற,
*பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு*
*அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே *
என்று மங்களாசாசனம் செய்கிறார்.
(பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு.)
பெரியாழ்வார் எப்படி பெருமாளை வாழ்த்துகிறார் என்பதை பாருங்கள்
திருமாலே!நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.
பின்னும் பார்க்கிறார் அவன் மார்பில் வாழும் லக்ஷ்மி தெரிகிறாள்.
அவளையும் வாழ்த்துகிறார்.
பின்னும் பார்க்கிறார் அவன் கையில் உள்ள சங்கும் சக்கரமும் தெரிகிறது.
அவற்றையும் வாழ்த்துகிறார்.
சரி அவன் வாழ வேண்டும், அவன் மனைவி, அவன் சங்கு, அவனுடைய சக்கரம் எல்லாம் வாழ்தியாகிவிட்டது.
அவனுக்கும் தனக்கும் உள்ள பந்தம் பிரிந்து விடக் கூடாது.
அந்த பந்தமும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.
கடவுளுக்கே கண்ணேறு கழிக்க முயன்ற பெரியாழ்வாரின் பக்தி மேன்மையைக் கண்ட, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசைக்கிராமத்தில் ஏழாமவராக வரும் பெரியாரின் பாடல்களை நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதற்பாடலாகத் தொகுத்தனர்.
மேலும் சாற்றுமறை என்னும் வைணவ தினசரி வழிபாட்டின் தொடக்கம் மற்றும் முடிவின் போதும், வைணவ கோயில்களின் திருவிழாக்களில்
சுவாமி புறப்பாடு
மற்றும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும் போதும் இன்றளவும் கூட பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்ட பின்னரே சுவாமியை திருக்கோயிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர்.
இந்த பாடலை பாடுவதால் நமக்கும் பாதுகாப்பு,நமது
கண்ணேறும் கழியும்.
இந்த பாடலை மனதார பாடி நமக்கும் நமது குடும்பத்திற்கும் இறைக்காப்பு செய்து இன்பமாக வாழ்வோம்.

Пікірлер: 4
@manimozhivm8255
@manimozhivm8255 10 ай бұрын
அருமையான விஷ்ணுவாஞ்சலி 🙏 லாஸ்ட் எடிட்டிங் சூப்பர் 👏👏👏👍🙏
@arjunanananthi5827
@arjunanananthi5827 10 ай бұрын
👏👏👏👏👍👌
@mathankumarv3800
@mathankumarv3800 10 ай бұрын
It is very nice 👏👏👏
@gopinathsan
@gopinathsan 10 ай бұрын
Shivanjali
6:59
ABHAYAKARAM
Рет қаралды 27 М.
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 9 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
Rajnikanth speak about Cosmic Energy || Power of Meditation || Spiritual Reality
9:29
பிரபஞ்ச சக்தி
Рет қаралды 99 М.
Ilaiyaraaja live composing - Classical Pianist Reaction
8:35
Lidia Kotlova - Music of India
Рет қаралды 500 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 338 М.
LAYA KAVITHAI
4:50
ABHAYAKARAM
Рет қаралды 1,1 М.
Aadathu Asangathu Vaa Kanna Song | Alaipaayuthe Kannaa | Sudha Ragunathan Carnatic Vocal
8:21
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 564 М.
Pushpanjali
6:13
ABHAYAKARAM
Рет қаралды 841
AnanyaKurup_BharatNatyamperformance at the age of 4 - part 1 .mp4
10:59
nitienshinde
Рет қаралды 2,7 МЛН