Рет қаралды 1,717
*பாரம்பரியத்தில் மர்ஹூம் மௌலவி ஏ.ஏ.எம்.மஸ்ஹூத் ஆலிம் அவர்கள்
18/08/2020 செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான 'பாரம்பரியம்' நிகழ்ச்சி. முஸ்லிம் சேவைக்கு சன்மார்க்க பணியாற்றி புகழ் சேர்த்தோர் வரிசையில் காலஞ்சென்ற அல்ஹாஜ் மௌலவி ஏ.ஏ.எம்.மஸ்ஹூத் ஆலிம் அவர்களின் வானொலி, சமுதாயப் பங்களிப்புகளை அன்னாரின் புதல்வர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். அக்ரம் (நளீமி), அஷ்ஷெய்க் யூ.கே.ரமீஸ் (முதுமாணி), அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், சட்டத்தரணி மாஸ் லமீன் யூஸுப் ஆகியோர்கள் நினைவுப் படுத்துகிறார்கள்.
கலாபூஷணம் எம்.எஸ்.எம்.ஜின்னா செவ்வி காணும் இந்த நிகழ்ச்சியினை , முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சி அமைப்பாளர் பாத்திமா ரினோசியா தயாரித்தளித்திருக்கிறார்.