தேசாந்திரி பதிப்பகம் வழங்கும் எஸ்.ராவிடம் கேளுங்கள் பகுதி 7யை பார்த்தேன். மிகவும் அருமையாகவும், நன்றாகவும் இருந்தது. இந்தப் பகுதி தான் சிந்திக்க வைக்கக்கூடிய நகைச்சுவை இருந்தது. நண்பரின் வீட்டிற்குள் அகப்பட்டுக் கொள்ளும் நிகழ்வு நகைச்சுவையாக இருந்தது. அதே நேரத்தில் பூட்டிய வீட்டிற்குள் அகப்பட்டுக் கொண்டால், மனிதர்கள் எல்லோரும் திருடனாகத்தான் கருதுகிறார்கள். மனிதர்கள் அவ்வாறாக நினைப்பதற்கு காரணம் நான்கு சுவர்கள் இருப்பதால் தானோ என்னவோ என்று எனக்கு தோன்றுகிறது. சர்க்கஸ் பற்றி ஒரு வாசகர் கேள்வி கேட்டு இருந்தார். அந்த வாசகர் கேட்ட கேள்விக்கு தங்கள் பதிலால் சர்க்கஸ் மீதான பழைய நினைவுகளை நான் மீட்டுக்கொண்டேன். சிறுவயதில் ஐந்து அல்லது ஆறு முறைகள் சர்க்கஸ் நிகழ்ச்சியை நேரடியாக பார்த்திருப்பேன். அந்த நிகழ்வு வாழ்நாள் முழுவதும் என் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கினாலும் அதற்கு எவ்வளவு கட்டணம் கொடுத்தாலும் பார்க்க மனம் விரும்புகிறது. சர்க்கஸ் பற்றி கேள்வி கேட்ட வாசகருக்கும் தங்கள் பதிலுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தனியாக பயணம் செய்யும் அனுபவத்தை தாங்கள் பகிர்ந்து கொண்டதால் எனக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. நான் காலை காபி குடிப்பதற்காக தேநீர் கடைக்கு செல்வேன். கடையில் காபியை ருசித்து சாப்பிட ஆரம்பித்தேன். அரபு நாட்டுக்கு நான் சென்றதில்லை. காபியும் குடித்ததில்லை. நம்மூர் தேநீர்க்கடையில் காபி குடிக்கும் போது அரபு நாட்டு காபி குடித்த பிரம்மை ஏற்ப்பட்டது. காபி மீது ஒரு காதல் உருவானது. தங்கள் பதில் அந்த அளவிற்கு உற்சாகம் கொடுத்தது. காந்தியை நன்கு வாசித்திருக்கிறேன். காந்தியை நான் பார்த்ததில்லை. காந்தியை முழுவதும் அறிந்து கொண்ட தங்களை இன்னொரு வாழும் காந்தியாகதான் நான் பார்க்கிறேன். மின் புத்தகமாக படிப்பதை விட அச்சிடப்பட்ட புத்தகமாக படிக்கும் போது சிறகை விரித்த பறவையோடு பறந்த உணர்வு கொண்டேன். வரும் காலங்களில் தங்களின் இந்த பதில் பதிப்பகத்தாரும், வாசகரும், விற்பனையாளரும் புரிந்து கொண்டிருப்பார்கள். வாசகருக்கு நான் சொல்வது யாதெனில், இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள், கேட்டவர்கள் பாக்கியவான்கள். காணாதவர்கள் இந்நிகழ்ச்சியை காணுங்கள் என்று சொல்லுவேன். தங்களுக்கும், தேசாந்திரி பதிப்பகத்தாருக்கும் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@jockinjayaraj28666 ай бұрын
Sir god vs spiritual different ❤❤❤❤❤❤
@balamuruganr68865 ай бұрын
தனியாக பயணிப்பதன் காரணம் நீங்கள் கூறியது மிகச் சரியானது நானும் ஒருவரை அழைத்து செல்லும்போது சிரமம் உணர்ந்தேன்.ஆகவே நானும் தனியே பயணிக்க விரும்புகிறேன்..இன்னும் நிறைய பயணிக்க திட்டமிட்டு வருகிறேன்.
@tonystarck98626 ай бұрын
Very funny incident of got locked inside the house, also very shock to hear the ebook piracy issue
@nanmaran.p50236 ай бұрын
திருட்டு மட்டும் இல்லை. பல்வேறு தவறான/ஒரு சிலருக்கு வேண்டிய கருத்துக்களும் இடை இடையே சேர்க்கப்பட்டுள்ளன. தங்களது உரையாடல் அருமை 🙏🏻
@chinraj72416 ай бұрын
Hi sir I'm a biggest fan sir thanks for sharing in your experience and naval story thank you so much s. Ramakrishnan sir
@subhajana52966 ай бұрын
I’m just trying my luck
@subhajana52966 ай бұрын
😊😊😊
@virusurendar3 ай бұрын
Post more videos like this. I see it is stopped after 8 episodes
@Mistral3696 ай бұрын
Amazing session with awesome pictures🤗
@andiperiyasamy80636 ай бұрын
thanks brother
@ராஜதுரை-ற7ழ6 ай бұрын
Thank you sir 💐💐💐💐
@சக்திவேல்ராஜ்6 ай бұрын
வணக்கம் ஐயா
@mohamedriyaz.s47046 ай бұрын
இலக்கிய சம்பந்தபட்ட நூல்கள், வரலாற்று புனைவு கதைகளோடு எழுதும் (பொன்னியின் செல்வன், கடல் புறா, வேள்பாரி) இது போன்ற நூல்கள், இரண்டிலும் உங்களுக்கு பிடித்தது (அ) நீங்கள் பரிந்துரைப்பது எது?
@rabertvedha67056 ай бұрын
Unmailaye coffee kudikumpodhu ivlo la yosichu unarnthu kudipingala ila kadha azhga solanumnu soldringala