பிற்பகல் 1.00 மணி DD தமிழ் செய்திகள் [31.12.2024]

  Рет қаралды 1,113

DD Tamil News

DD Tamil News

Күн бұрын

1) பெண்களுக்கு எதிராக என்ன குற்றங்களை யார் செய்தாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் - மாணவி பாலியல் வ‍ன்கொடுமை விவகாரத்தில் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையக்குழுவினர் உறுதி
2) விசாரணை அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் - தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் மம்தா குமாரி பேட்டி
3) தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்காக விடப்பட்ட சர்வதேச டெண்டர் ரத்து - மீண்டும் டெண்டர் விடப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல்
4) திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்
5) சென்னையில் புத்தாண்டையொட்டி, 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு - மெரினாவில் இன்றிரவு எட்டு மணிக்கு மேல் போக்குவரத்து தடை
6) ஏமனில் இந்திய செவிலிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்ட விவகாரம் - தேவையான அ‍னைத்து உதவிகளும் செய்யப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
7) தென்கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரை கைது செய்ய உத்தரவு - நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக அந்நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை
8) எக்ஸ் தளத்தில் வணிக அ‍டிப்படையில் விளம்பர பதிவுக‍ளை வெளியிட்டால் நடவடிக்கை - குற்றவழக்கு பதிவு செய்யப்படும் என எலான்மஸ்க் அறிவிப்பு
9) உலக மகளிர் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - இந்தியாவின் வைஷாலி ரமேஷ்பாபு நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்

Пікірлер
Super Singer Junior 9 | Full Episode 7
1:26:13
Vijay Television
Рет қаралды 602 М.