மூன்று உரங்களைப் பற்றி நல்ல பயனுள்ள கருத்துக்களை சொல்லிருக்கிறீர்கள் அருமை மா❤ உங்கள் மாடித்தோட்ட பூக்களைப் பார்க்கும்போது கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது 👌
@ponselvi-terracegarden4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@ThoothukudiZiya4 ай бұрын
செடிகளுக்கு உரம் கொடுத்து வளர்ப்பது பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது
@ponselvi-terracegarden4 ай бұрын
மிக்க நன்றி சகோதரி
@Dhilsath-c8h2 ай бұрын
Supper maam🎉
@ponselvi-terracegarden2 ай бұрын
Thank you so much.
@amutharamesh66324 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் மிக சுலபமான உரம் அருமை அருமை மகிழ்ச்சி மிகவும் பயனுள்ள வீடியோ ங்க சகோதரி 👍👍👍💐😊
@ponselvi-terracegarden4 ай бұрын
மிக்க நன்றி சகோதரி.
@germanmeera4 ай бұрын
Wow amazing Very useful sharing 🎉🎉🎉
@ponselvi-terracegarden4 ай бұрын
Thank you so much sister, keep watching my videos.
@kalaichelviranganathan32584 ай бұрын
மிகவும் பயனுள்ள தேவையான தகவல்களை சொன்னதற்கு மிக்க நன்றி 👌👌👍.
@ponselvi-terracegarden4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@SrimathiK-te2pl4 ай бұрын
Wonderful and very simple fertilizers, thanks a lot sis ❤
@ponselvi-terracegarden4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@sivagamisivagami88174 ай бұрын
Thankyou sister use full video 🎉😊
@ponselvi-terracegarden4 ай бұрын
Thank you ma.
@maheswarivijayakumar9324 ай бұрын
Useful information mam.
@ponselvi-terracegarden4 ай бұрын
Thank you sister.
@vsrinivasan53694 ай бұрын
Super amma
@ponselvi-terracegarden4 ай бұрын
Thank you so much, keep watching my videos.
@umagarden4 ай бұрын
மாடித்தோட்ட செடி களுக்கு எப்படி உரம் கொடுக்க வேண்டும் அதன் அளவுமுறை , பயன்படுத்தும் விதம்.- விளக்கம் அருமை💐💐💐 தோழி.
@ponselvi-terracegarden4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@rainbowrainbow37274 ай бұрын
அக்கா சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ponselvi-terracegarden4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ராஜி.
@MeenaGanesan684 ай бұрын
சிஸ்டர் எப்படி இருக்கீங்க நீங்கள் உண்மை பேசுவது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது டியர் சிஸ்டர் சூப்பரா சொல்லிருக்கீங்க உங்க வீடியோஸ் பார்த்து கமெண்ட் போட்டாச்சு இன்னும் ஒன்னு மட்டும் பார்க்கனும் டியர் நன்றி வணக்கம்❤👍🙏
@ponselvi-terracegarden4 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சி சகோதரி. வீட்டில் வீணாகும் மற்றும் கழிவுப் பொருட்கள் மட்டுமே நம் செடி வளர்க்க போதும். சிலர் தங்கள் பொருட்களை விற்பதற்காகவும்,மற்றும் சிலர் சேனல் விளம்பரத்திற்காகவும் பல உரங்களை பயன்படுத்தினால்தான் செடி வளரும் என்பது போல் மிகைப்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் கெமிக்கல் உரங்களை மிக தாராளமாக பயன்படுத்துகிறார்கள். வீட்டுக் கழிவுகள் மட்டுமே செடிகளுக்கு போதும் என்பது மட்டுமே என் கருத்து... மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@sanjun51114 ай бұрын
@@ponselvi-terracegarden0:41
@hemalatha5004 ай бұрын
Super information sister.sevandhi cutting tips mattuthan use pananuma or middle stems kuda use pannallama. Please advise 🙏🏼 😊
@ponselvi-terracegarden4 ай бұрын
நுனிகிளைகளும் யூஸ் பண்ணலாம். நடுவில் உள்ள கிளைகளும் யூஸ் பண்ணலாம். எல்லாமே துளிர்க்கும், சகோதரி..நிழலில் வைத்து பராமரிப்பது முக்கியம்..
@Sangeethakitchenandgardening4 ай бұрын
Hmm okay sister 👍
@ponselvi-terracegarden4 ай бұрын
Thank you ma.
@padmavathi29543 ай бұрын
Hai sister super vedio thank you. Nan madi thottam 2 years ah vachuirukiren. Enaku oru santhegam pot la soil mathum pothu new soil podanuma nan ithuvaraikum athe mannula kaiksri wast,kaintha ilai,manpulu uram,cocopeat,potu kanthu oru varam kalithu natrukal vaithu veduven. Yield koncham kamiyathan iruku sister vera enna seiyanum pls solunga
@ponselvi-terracegarden3 ай бұрын
மண்கலவையை புதுப்பிக்கும் போது புதிய மண் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். கட்டாயம் இல்லை, சகோதரி.. ஆனால் தொட்டி செடிகளுக்கு புளித்த லிக்விட் பெர்டிலைசர் எதாவது மாதம் இருமுறை கொடுப்பது அவசியம். மண்ணுக்கு மேல் காய்ந்த இலைகள் போடுவதும் நல்ல பலன் கிடைக்கும். நான் என் செடிகளுக்கு மாடித்தோட்டம் ஆரம்பித்தது முதல் தவறாமல் கொடுத்து வரும் லிக்விட் பெர்டிலைசர் லிங்க் தருகிறேன். உங்கள் செடிகளுக்கும் கொடுங்கள். நல்ல பலன் தெரியும். மிக்க மகிழ்ச்சி சகோதரி.
நன்றி தோழி அருமையான விளக்கம் நீங்க காட்டின கரைசலில் எந்த அளவு என்ன பொருள் ஊற வச்சிருக்கீங்க தோழி
@ponselvi-terracegarden4 ай бұрын
உங்களுக்காக அடுத்த வீடியோவாக இதை வெளியிடுகிறேன், சகோதரி. எனக்கு ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ் வந்ததற்கு நன்றி சொல்லும் வீடியோவாக இந்த கரைசலை நான் ஒரு வருடத்திற்கு முன்பே வெளியிட்டிருக்கிறேன். லிங்க் தருகிறேன் பாருங்கள் சகோதரி. நம் சேனலை ரெகுலராக பார்க்கும் உங்களுக்கு கூட தெரிந்திருக்கலாம். நான் அடிக்கடி செடி நன்றாக வளர புண்ணாக்கு கரைசல் பல வீடியோக்களில் லிங்க் தருவேன். அந்த கரைசல் தான் இது..
@@ponselvi-terracegarden வேர்க்கடலை கடுகு எந்த அளவுக்கு ஊறவைக்கணும் தோழி உங்க லிங்க் மூலம் அந்த வீடியோ பார்த்தேன்
@ponselvi-terracegarden4 ай бұрын
@@covaijansi3119 இந்த கரைசலுக்கு ஒரு கை நிறைய வேர்க்கடலை, மூன்று டீஸ்பூன் கடுகு சேர்த்தேன், தோழி. முன்பு உள்ள பழைய வீடியோவில் அரிசி கழுவிய தண்ணீர் இல்லாமல் செய்திருப்பேன். இப்போது எந்த பெர்டிலைசர் செய்தாலும் அதை சேர்ப்பேன் தோழி. இதில் அழுகிய வாழைப்பழம், மற்றும் கொய்யா சேர்த்திருக்கிறேன். வேறு எந்த வித்தியாசமும் இல்லை, தோழி..
நடவு செய்யும் போது போட்ட உரங்கள் தொட்டியில் இருக்கும். லிக்விட் பெர்டிலைசர் எதாவது இப்போது தரலாம், மிக்க நன்றி..
@thenmozhiilangovan60923 ай бұрын
I have gova plant since 4 years, only New leaves are coming but no flower n fruit, what to do for yyield
@ponselvi-terracegarden3 ай бұрын
தொட்டியில் வளர்கிறதா? அல்லது தரையிலா? சகோதரி.
@thiruchelviselvi99214 ай бұрын
வணக்கம் சகோதரி குரோபேக்கில் ஒருலேயர்தேங்காய் நார் போட்டு அதன் மேல் மண் கலவை போடலாமா
@ponselvi-terracegarden4 ай бұрын
சகோதரி வணக்கம். காய்கறி செடிகளுக்கு நீங்கள் சொல்வது போல போடலாம். ரோஜா, மல்லிகை, மற்றும் நிரந்தர செடிகளுக்கு அடியில் முடிந்த அளவு மண் அதிகமாக இருக்க வேண்டும். நன்றி சகோதரி.
@sumathirajan81454 ай бұрын
Akka roja sedi mottu karukuthu enna panlam
@ponselvi-terracegarden4 ай бұрын
கருகின மொட்டுக்கள், பாதிக்கப்பட்ட இலைகளை கட்பண்ணி எடுத்து விடுவதுதான் செடி க்கு நல்லது, சகோதரி. மேலும் நோய் பரவுவதை தடுக்கலாம். மண்ணை நன்றாகக் கிளறி விட்டு சத்தான கரைசல் ஊற்றுங்கள். வேப்பிலை பூச்சி விரட்டி, வசம்பு கரைசல், வேப்பெண்ணெய் கரைசல் எதாவது ஒன்றை தெளியுங்கள்.
@vijayarani83504 ай бұрын
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை உரங்கள் வைக்க வேண்டும்
@ponselvi-terracegarden4 ай бұрын
திடவுரம் அடிக்கடி கொடுக்க வேண்டாம் சகோதரி. மாதம் ஒருமுறை மண்ணை நன்றாகக் கிளறி விட்டு கொடுத்தால் போதும். இந்த வீடியோவில் பார்ப்பது போல் வாட்டர் கேன்கள் மற்றும் பத்து இஞ்ச் போன்ற தொட்டிகளுக்கு இரண்டு கையளவு போடுங்கள். பெரிய அளவில் உள்ள தொட்டிகளுக்கு கொஞ்சம் அதிகமாக கொடுங்கள். மண்ணோடு கலந்து விடுங்கள். மேல் பரப்பில் காய்ந்த இலைகள் போட்டு மூடி விடுங்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புண்ணாக்கு கரைசல் போன்ற லிக்விட் பெர்டிலைசர் எதாவது கொடுங்கள். இடையில் நம் வீட்டில் அரிசி கழுவிய தண்ணீர், வீணாகும் தயிர் போன்றவை கிடைப்பதை நன்றாக புளிக்க வைத்து செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது கலந்து ஊற்றுங்கள். இது மட்டுமே போதும். நன்றி சகோதரி.