ஒரு ஐயப்ப பக்தர். வயது 54. தற்போது 18-ஆம் ஆண்டு தொடக்கத்திற்கான மகிழ்ச்சியில் .. மாலை போட்டிருந்தார். கார்த்திகை 1 மாலை போட்டார். ஒரு ஐந்தாவது நாள் அவர் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்துவிட்டார். அந்த பக்தர் சிவனடியாரும் கூட. எங்கு தவறு நடந்தது. அவரைச் சுற்றி உள்ள சொந்தங்கள் எப்போதும் அவரை பழிச் சொற்களை வாரி இரைத்துக் கொண்டே இருக்கும். சொந்தங்களை கவனிப்பதில் அவர் ஒரு பாரி வள்ளல் இத்தனைக்கும். இருந்தாலும் அவரிடமுள்ள அத்தனை பணத்திற்கும் ஆசைப்பட்டு .. இன்னும் இன்னும் வேண்டும் என்று சபித்துக் கொண்டே இருப்பார்கள். நம் ரத்த சொந்தங்களின் சாபத்திற்கு முன்னால்.. ஒரு சிங்கப்பெருமாளோ !! சிவபெருமானோ !! நம்மை காப்பாற்ற வரமாட்டார். ஒரு போதும். துஷ்டனை கண்டால் தூர விலக வேண்டும். அவரிடம் உள்ள பண வசதிக்கு தூரமாக விலகி இருக்கலாம். சொந்த வீட்டை விட்டு எப்படி போவது என்று யோசித்துக் கொண்டே இருந்தார். ஒரு மனிதனை நாம் கரித்துக் கொண்டே இருந்தால்.. விபரீத விளைவுகள் இப்படித்தான் நடக்கும். நமக்கான அதிர்வலைகள் சுற்றிலும் சரி இல்லாத போது.. அது வீடாக இருந்தாலும் நாடாக !!! ( பங்களாதேஷ் ) இருந்தாலும்.. தனித்துவமான அடையாளமே !! முன்னேற்றமே !! நல்லது.