ஒரு இனத்தின் வரலாற்றை அறிவதற்குச் சான்றாக அமையக்கூடியது அவ்இனம் எத்தனை அரிய இலக்கியங்களைக் கொண்டுள்ளது என்பதே. ஏனென்றால் நல்ல இலக்கியம் படைக்க இலக்கணம் பல நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பாவனையில் இருந்திருக்க வேண்டும்.. தமிழனத்தின் அறு சுவை உணவிற்கு உலகில் நிகர் இல்லை. இந்த 2 அம்சங்களும் இலகுவாகப் பறை சாற்றும் இலங்கையிலும் இந்தியாவிலும் எது மூத்த குடி என்று தெரிகிறது. இரண்டு தனிப்பட்ட இனங்களை தனது சாதகத்திற்காக ஒன்றாக்கியவன் ஆங்கிலேயன். இந்த இரு இனங்களும் மொழியால் சமயத்தால் கலாச்சாரத்தால் வேறுபட்டவை. இது எதைப் போன்றது என்றால் இலங்கையை இந்தியாவுடன் இனைத்து சிங்கள மக்களை சிறுபான்மையினர் என்பதாகும். எனவே தமிழர் சிறு பான்மை இனத்தவர் என்ற மாயையை அறுக்கவும். இரு தேசியங்களை அவர்களின் விருப்பிற்கு மாறாக இணைத்தமை ஒரு கட்டாயத்திருமணம் போன்றது. 1948 இல் இருந்து பல இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டது தமிழ் இனம். கட்டாயத் திருமணத்தில் கூட விவாகரத்தை வாங்கமுடியும் - ஆனால் எமக்கு வாழ் நாள் பூராகவும் அடிமை வாழ்வா? கடந்த 20 வருடங்களில் தமிழ்ப் பகுதிகளில் ஏதானும் முன்னேற்றம் இருந்ததா? தமிழர் தான் அதிகளவில் இலங்கைக்கு விமானத்தில் பயணிப்பவர்கள். அவர்களுக்கென்று ஒரு சர்வதேச விமானத்தளம் உள்ளதா? அதை விடுத்து அம்பாந்தோட்டையில் ஒரு சர்வதேச விமானத்தளம். இதற்கு மத்தியில் எமது போருக்குப் பிந்திய சமூகத்தை போதையால் நாளும் வதக்குகின்றனர் பேரினவாதிகள். இதே ஆங்கிலேயர் மற்றவரின் ஆதிக்கத்தில் வாழமுடியாது என்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்துள்ளார்கள். இந்தப் பிண்ணணியில் எவ்வளவு காலம் குட்டக் குட்ட வாழமுடியும். I guess the divorce is the only way out.