தன் பக்தனுக்காக கொடி மரத்தை விலகி இருக்க சொன்ன விஷ்ணு பகவான் | MAYILOSAI

  Рет қаралды 290

MAYILOSAI

MAYILOSAI

Күн бұрын

#thirukurankudi #vishnu_bagavan #perumal_kovil #vishnu_avatharam #thirukurankudi_temple #kaisiga_puranam #mayilosai #tamil #
கைசிக புராணம்
வராக புராணத்தில் விஷ்ணு பூமாதேவியிடம் சொல்வதாகக் கைசிக புராணக் கதை வருகிறது. திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் தாழ்ந்த வகுப்பை சார்ந்த 'நம்பாடுவான்' என்ற பெயருடைய ஒருவன் வாழ்ந்து வந்தான். எந்நேரமும் 'நம்பியை' பாடுவதால் நம்பியை பாடுவான் என்பது சுருங்கி நம்பாடுவான் என பெயா் பெற்றான். அக்காலத்தில் கோயிலுக்குள் செல்ல முடியாததால் வெளியே நின்று ஏகாதசி தோறும் நம்பியை நினைந்து 'கைசிகப் பண்' இசைத்துப் பாடுவான் பெருமாள் மகிழ்வோடு அவனது இசையை கேட்பார். அவர் மூலவரைப் பார்த்ததில்லை. கொடிமரம் மறைக்கும். ஒரு கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியன்று இவா் பெருமாளை சேவிக்க வரும்போது ஒரு பிரம்மராட்ஷசன் இவனை வழிமறித்து ஆகாரமாக்க நினைத்தான். இதை அறிந்த 'நம்பாடுவான்' தன்னைத் தர தயார் என்றும் ஆனால் பெருமாளைச் சேவித்துவர அனுமதிக்கவேண்டும் என்று பிரம்மராட்ஷசனிடம் 18 சத்தியங்கள் செய்து வேண்ட பிரம்ம ராட்ஷசனும் சம்மதிக்கிறான். பின்னா் கோயிலுக்குச் சென்ற 'நம்பாடுவான்' வழக்கம்போல் பெருமாளின் புகழை 'கைசிகப் பண்' இசைத்துப் பாடினான். இன்றோடு என் வாழ்க்கை முடியப்போகிறது இந்த நிமிடம் வரை பெருமாளை பார்க்க முடியவில்லையே கொடிமரம் மறைக்கிறதே என வருத்தத்தோடு நிற்க பெருமாள் அவன் வருத்தத்தை போக்க கொடிமரத்தை விலகி இருக்க சொல்லி தரிசனம் தந்தார். பெருமானை கண்ட மகிழ்ச்சியுடன் காட்டுவழியாக சென்றபோது, விஷ்ணு ஒரு முதியவர் உருவம் தாங்கி இவ்வழியில் பிரம்மராட்சசன் ஒருவன் நிற்கிறான். உன்னைப் புசித்துவிடுவான். நீ வேறு வழியில் சென்று விடு' என்று நம்பாடுவானைப் பார்த்துச் சொன்னார். அவனோ 'இல்லை, நான் அந்த ராட்சசனுக்கு சத்யம் செய்து கொடுத்ததிருக்கிறேன். நான் அவனுக்கு ஆகாரமாக வேண்டும் என்று சொல்லிவிட்டான். நம்பாடுவானைப் பார்த்தபோது ராட்சசனின் மனநிலை மாறியிருந்தது. நம்பாடுவானைப் புசிக்க அவன் விரும்பவில்லை. அழகியநம்பியின் முன் பாடிய பாடலைப் பாடுமாறு கேட்கிறான். நம்பாடுவானுக்கு அதில் விருப்பமில்லை. அவர்கள் தொடர்ந்து உரையாடுகின்றனர். முடிவில் நம்பாடுவான் ராட்சசனின் பாவம் தீர கைசிகபண் இசைத்த புண்ணிய பலனை அருளி பிரம்மராட்ஷசனுக்கு சாப விமோசனம் வழங்குகிறான்.
-----------------------------------------------------
DISCLAIMER COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT AT 1976, ALLOWANCE IS MADE FOR FAIR USE FOR PURPOSES SUCH AS CRITICISM, COMMENT, NEWS REPORTING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT OTHERWISE BE INFRINGIN.
எங்களது சேனலில் நாங்கள் பதிவிடும் பதிவுகள் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. இதில் வரும் ஆன்மீக தகவல்களில் உள்ள கருத்துகள் எல்லாம் அவர்களையே சாரும். எங்களது சேனலின் கருத்துக்கள் அல்ல. பணம் சம்பத்தப்பட்ட பரிமாற்றங்கள் நாங்கள் பொறுப்பு கிடையாது.
#MAYILOSAI #MAYILOSAI_INDIA #@MAYILOSAI_INDIA #AANMEEGAM #AANMEEGA_THAGAVAL #AANMEEGA_KATHAIGAL #AANMEEGA_SORPOLIVU #VILLISAI #TAMIL
எங்களது சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க| லைக் பண்ணுங்க | ஷேர் பண்ணுங்க | எங்களது வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வையுங்கள் | எங்களது சேனல் வீடியோ சம்பந்தமான உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

Пікірлер: 1
@rathnamala3410
@rathnamala3410 12 күн бұрын
அருமை;நன்றி.நற்பவி அண்ணாமலை.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН