Рет қаралды 135,232
"உன் வாசலை நோக்கி
வந்துகொண்டிருக்கிறேன்...
இரவுகளையும் பகல்களையும் தாண்டி
உன்வாசலை நோக்கி
வந்துகொண்டிருக்கிறேன்...
பாதைகள் சோர்வடைகின்றன..
பாதங்களோ புத்துணர்வுடன்...
நிழல்களின் வெளிச்சம் நீள்கிறது...
குளிரும் சுடுகிறது...
பாசத்தில் எரியும் உள்ளம்
இருளை கிழித்து வழிகாட்டுகிறது...
கிளை பரப்பி நிற்கும்
அன்பின் நரம்புகள் வழியே நடந்து...
என் உயிரின் மூச்சுக்காற்றில் துடித்து திறக்கும்
உன் இதய வாசல் நோக்கித்தான்
வந்துகொண்டிருக்கிறேன்"...
******************************************************************************
பராசக்தி படம் தயாரிப்பில் இருந்த போது தொடர்ந்து அந்தப் படத்தில் நடிப்போமா மாட்டோமா என்கிற அச்சம் சிவாஜி கணேசனுக்கு இருந்தது... ஜெமினி ஸ்டூடியோவில் போய் வேஷம் கேட்டது போலவே அஞ்சலி தேவியின் சொந்தக் கம்பெனியான அஞ்சலி பிக்சர்ஸ் அலுவலகத்திற்கும் போய் நடிக்க சந்தர்ப்பம் கேட்டார்... அப்போது அங்கே டைரக்டர் L V பிரசாத் இருந்தார்...வேஷம் கேட்டு நின்ற சிவாஜி கணேசனின் பேசும் கண்கள் கண்டு வியந்தார் பிரசாத்...அஞ்சலி பிக்சர்ஸின் "பூங்கோதை' படத்தில் ஒரு சிறு வேஷம் கொடுத்தார்...பையன் எதிர்காலத்தில் பெரிய நடிகனாவான் என்று அஞ்சலிதேவியிடம் கூறினார் பிரசாத்---"தமிழ் சினிமாவின் கதை"
"நான் ஏன் வரவேண்டும்"
ஆடியோ : தமிழ் -- பூங்கோதை(1952)
வீடியோ : ஹிந்தி -- ஜாடூ(1951)
மிக அபூர்வமான இந்தத் தமிழ் பாடலின்
வீடியோ பதிவு கிடைக்காததால் (தற்காலிகமாக)
ஒரே மெட்டைக் கொண்ட வேறொரு வீடியோவில்
இந்தப் பாடலை ரீமிக்ஸ்(rEmiX) செய்துள்ளேன்...
ஹிந்தி வீடீயோவில் ( நன்றி You Tube )
தமிழ் ஆடியோ இணைக்கப்பட்டது...
தவறுகள் ஏதேனும் இருந்தால் சொல்லவும்...
உடனடியாக யூ ட்யூப்--ல் இருந்து நீக்கி விடுகிறேன்...
நன்றி...