அருணகிரிநாதர் படம் பல முறைபார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்து கொண்டு இருக்கிறது. டிஎம்எஸ் நடிப்பு பாடல்கள் அனைத்தும் அற்புதமானது.
@John_cena20238 ай бұрын
இந்த நடனத்தை பார்க்கும் பொது என் அப்பன் முருகன் ஆடுவதாகவெ என் மனதில் நினைத்துக் கொல்வென் முருகா சரணம் 🎉
@dinum59257 ай бұрын
Real ah apdiye than iruku
@jayamprinters4721Ай бұрын
Miga arumai Murugaaaa Ini evaralum ipdi chance eh illaaaa Murugaaaa
@kunaseelanjegan5465 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏முருகா! சற்குருநாதா! சாந்த சொருபா! என் தந்தையே! எனது தாயே! தயவுடைதெய்வமே! தயாபரனே! தேவாதி தேவா! இந்த பாவியை ஒரு பார்வை பார் தாயே!🙏🙏🙏🙏🙏
@rajeswarikrishnamurthy86283 жыл бұрын
F
@ramyakanagaraj16925 ай бұрын
Avar paakama neenga ivlo thooram avara unarndhu message panna mudiyadhu...avar ennaikum unga kodavae iruppar...naa oru sivan devotee...naa namburaen pirappinilum irappinilum namba kodavae kadavul irupparunu
@radhasundaresan84736 ай бұрын
இந்த திருப்புகழை நான்.சிறுவயது முதலே.. அடிக்கடி பாடுவேன்! என்சிறுவயதில் கேசட் ..வீடியோ வெல்லாம் கிடையாது! சீர்காழி கோயில் உற்சவக்கடையில்..பாட்டுப் புத்தகம் வாங்கி ..நெட்டுரு போட்டு க் கொண்டேன்!
@sacheinnaveen87992 ай бұрын
நெட்டுரு எனறால் என்ன அக்கா
@kodeeswaranks694727 күн бұрын
நெட்டுரு என்பது மனப்பாடம் செய்தல். திரும்பத் திரும்ப நெஞ்சில் பதியும் வரை தமிழ் பாடல் ஆங்கில ப் பாடல் தனக்கு த்தானே கூறுதல் நினைவாற்றல் பெருக்குதல். இதற்கு பெயர் நெட்டுரு. இன்று மனப்பாடம் பகுதி பள்ளியில் உள்ளதா தெய்வ சிந்தனை இறை வணக்கம் உள்ளதா.... சிந்தனை செய்ய லாமா. கோடீஸ்வரன் உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவி யாளர் ஓய்வு சிவகங்கை
@kuppamuthusankaran80613 жыл бұрын
அருணகிரி பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் சௌந்தர்ராஜன் மிகவும் அருமை
@karthikyoki4 жыл бұрын
வள்ளி மணாளனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻 🙏🏻 🌷💐🌷💐🛐🛐
@prabagarann86473 жыл бұрын
சும்மா இரு சொல் அற என அருணகிரிக்கு உரைத்த தமிழ்க்கடவுளே நின் திருப்பாதம் பணிந்தேன்.
@anitha21325 ай бұрын
முருகன் நடன அழகை காண கண் கோடி பத்தாது.
@sacheinnaveen87992 ай бұрын
செந்தூர் சண்முகர் திருவடிகள் சரணம் 💚🦚🙏
@RainbowminicookАй бұрын
என் விட்டில் நான் வேல் மாறல் படிக்கும் போது ஜலங்கை சத்தம் கோட்க்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂ஓம் முருகா சரணம் சரவணபவ பழனி ஆண்டவர் துணை
@SanthoshSanthosh-w5v17 күн бұрын
அப்டியா அருமை
@gskrishnan40597 жыл бұрын
No words to praise the lyrics, composition and rendition. It's divine.
@dhanashekarnamvazhi24194 жыл бұрын
ஞானியர் அருளியது
@tamilanrap73942 жыл бұрын
அருணகிரிநாதர் தமிழே அழகுதான்
@lovemychannels8020 Жыл бұрын
Iyaa murgaaa..Agathiyar I saw Agathiyar Guru on Aug2020 directly yes true 58days deep meditation 🧘♂️ 🙏..4 to 6 ampm
இந்தப்பாட்டை பார்த்ததும்தான் மெய்சிலிர்ப்பது என்றால் என்னவென்றே தெரிந்து கொண்டேன்
@shankardevasenan25344 жыл бұрын
ஆம்
@sacheinnaveen87992 ай бұрын
💯💚🙌🏻
@sacheinnaveen87992 ай бұрын
செந்தூர் சண்முகர் திருவடிகள் சரணம் 🦚❤🙏
@mahalakshmi3992 Жыл бұрын
௮ப்பாமு௫கா நீதான் துணை சரணம் ௮த்தானின் ௨டல்நிலையை நன்முறையில் வை ௮த்தான்௨னக்கு௮ப்பாதானே ௮த்தானுக்கு மண்டை வலியை ஏற்படுத்தலாமா ௨ன்னை மன்றாடி வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை நன்முறையில் வை விஷ்ணு வையும் நன்முறையில் வை🙏🙏🙏🙏🙏🙏
@Murugabhaktan3 жыл бұрын
I See a real saint in TMS Eyes.... Did any one noticed.
@thanikasalam.chitha6 ай бұрын
Yes I noted
@chinnathambi31332 ай бұрын
Yes I am also noted.
@kaviyarakkan7 жыл бұрын
பாடல் வரிகளும் விளக்கமும் ! தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் ...... தந்ததானா ......... பாடல் ......... தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.! விளக்கம் : தண்டை அணி ... தண்டை என்கின்ற காலணி, வெண்டையங் கிண் கிணி ... வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, சதங்கையுந் ... (சலங்கை என்னும்) சதங்கையும், தண்கழல் சிலம்புடன் ... அருள் கழல்களும், சிலம்புடன் கொஞ்சவே ... (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க நின் தந்தையினை முன்பரிந்து ... உன் தந்தை சிவனை அன்புடன் இன்பவுரி கொண்டு ... வலம்வந்து நன் சந்தொடம் அணைந்து ... நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நின்று அன்பு போல ... நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, கண்டுற ... (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்புடன் சந்த மகுடங்களும் ... கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், கஞ்ச மலர் செங்கையும் ... தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சிந்துவேலும் ... சூரனை அழித்த வேலும், கண்களு முகங்களும் ... பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், சந்திர நிறங்களும் ... (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், கண் குளிர ... என் கண்கள் குளிரும்படியாக என்றன்முன் சந்தியாவோ? ... என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? புண்டரிகர் அண்டமும் ... தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், கொண்ட பகிரண்டமும் ... அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், பொங்கி எழ ... மகிழ்ச்சி பொங்கி எழ, வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது, பொன்கிரி யெனஞ் சிறந்து ... பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எங்கினும் வளர்ந்து ... எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று புண்டரிகர் தந்தையும் ... தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் சிந்தைகூர ... மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக கொண்ட நடனம் பதம் ... நீ கொண்ட நடனப் பாதங்கள் செந்திலிலும் ... திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் ... என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தவேளே ... கந்தனாகிய மன்மத சொரூபனே கொங்கை குறமங்கையின் சந்த மணம் ... குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் உண்டிடும் (தம்பிரானே) ... மார்பை நுகர்கின்ற தம்பிரானே கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. ... அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே. ("கௌமாரம் இணையதள"த்திலிருந்து) (www.kaumaram.com) நன்றி "கௌமாரம்" இணையதளம் ! மேலும் திருப்புகழ் பாடல்களைப் படிக்க www.kaumaram.com/thiru/index_n1_u.html
@selva90627 жыл бұрын
விவேக் பாரதி mikka nandi
@kaviyarakkan7 жыл бұрын
selva ss 🙏🙏
@ganapathy66816 жыл бұрын
நண்பனே vivek இப் பாடலை போலவே "பக்கறைவிசித்ரமணி போர்கநடை " பாடலின் lyric ம் விளக்கமும் வேண்டு please
@vaishnavithiruvengatam22486 жыл бұрын
Vivek Bharathi 9nandhanarsongs and
@murugardhatchana37486 жыл бұрын
மிகவும் அருமை
@SrirangaVaasi20 күн бұрын
அற்புதம் 🎉 முருகா சரணம் 🙏
@reghungl2352 Жыл бұрын
அப்பனே முருகா
@usharanis831319 күн бұрын
ஓம் சரவண பவ ஓம்.ஓம் முருகா நீயே துணை.
@இரணியன்பூங்குன்றனார்Ай бұрын
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@krishnamoorthygood56905 жыл бұрын
💥நற்றுணையாவது நமசிவாய💥💥💥💥💥💥💥💥💥💥💥
@karoshoo7 жыл бұрын
good god song with more alto and some sublime chime of drums...as thingle thunder sound surround and surrender of almighty music..
@GiriSurendran3 ай бұрын
Muruga saranam nice song and music
@சிவபூதகணம்3 ай бұрын
செந்தூர் வாழ் சிவமே!
@dinum59253 күн бұрын
Romba romba pidicha song
@ExcitedCasualShoes-oq1kf10 ай бұрын
ரகு மாஸ்டர் நடனம் அருமை
@gowthamulaganathan41817 жыл бұрын
sema song about murugan in pure tamil
@ramyadinesh4342Ай бұрын
En appa muruga en esan maitha Siva umai Bala Valli manavala theivanai kathala
@saaijeyjey488916 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@Panda_queen4092 ай бұрын
Super best I love song 😊😊😊
@sathyamurthy57127 жыл бұрын
Never forget this song Tms live in this word NOW also thanks
@malariaselvic31075 жыл бұрын
Sathya Murthyk
@SanthoshGaneshsanti8 күн бұрын
Muruga Saranam
@balajik120825 күн бұрын
ௐ சரவண பவ ௐ
@brpjana80803 жыл бұрын
Divine song but dance is excellent fit for the song also
@kalyanib1757 Жыл бұрын
விளையும் பயிர் முளையிலே. என்னமாய் நடனமாடுகிறார் மாஸ்டர்
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக் கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... தண்டை அணி ... தண்டை என்கின்ற காலணி, வெண்டையங் கிண் கிணி ... வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, சதங்கையுந் ... (சலங்கை என்னும்) சதங்கையும், தண்கழல் சிலம்புடன் ... அருள் கழல்களும், சிலம்புடன் கொஞ்சவே ... (எல்லாம் ஒன்றுபட்டுக்) கொஞ்சி ஒலிக்க நின் தந்தையினை முன்பரிந்து ... உன் தந்தை சிவனை அன்புடன் இன்பவுரி கொண்டு ... வலம்வந்து நன் சந்தொடம் அணைந்து ... நல்ல மகிழ்ச்சி கொண்டு அணைத்து நின்று அன்பு போல ... நிலைத்து நின்ற அந்த அன்பு போலவே, கண்டுற ... (இப்போது நான் உன்னைக்) கண்டு மனம் ஒன்றுபட, கடம்புடன் சந்த மகுடங்களும் ... கடம்ப மாலையும், அழகிய மணிமுடிகளும், கஞ்ச மலர் செங்கையும் ... தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும், சிந்துவேலும் ... சூரனை அழித்த வேலும், கண்களு முகங்களும் ... பன்னிரு கண்களும், ஆறு திரு முகங்களும், சந்திர நிறங்களும் ... (அவற்றில் தோன்றும்) நிலவொளிகளும், கண் குளிர ... என் கண்கள் குளிரும்படியாக என்றன்முன் சந்தியாவோ? ... என் முன்புவந்து தோன்ற மாட்டாவோ? புண்டரிகர் அண்டமும் ... தாமரையில் தோன்றியவன் (பிரமன்) உலகமும், கொண்ட பகிரண்டமும் ... அதனை உட்கொண்ட வெளியண்டங்களூம், பொங்கி எழ ... மகிழ்ச்சி பொங்கி எழ, வெங்களங் கொண்ட போது ... நீ போர்க்களம் புகுந்த போது, பொன்கிரி யெனஞ் சிறந்து ... பொன்மலை என்னும்படி அழகு சிறந்து எங்கினும் வளர்ந்து ... எல்லாத் திசைகளிலும் நிறைந்து நின்று புண்டரிகர் தந்தையும் ... தாமரைக்கண்ணன் திருமாலும், தந்தை சிவனும் சிந்தைகூர ... மன மகிழ்ச்சி கொள்ளும் படியாக கொண்ட நடனம் பதம் ... நீ கொண்ட நடனப் பாதங்கள் செந்திலிலும் ... திருச்செந்தூர் ஆகிய இந்தப் பதியிலும், என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் ... என்முன் கொஞ்சி நடனம் கொள்ளும் கந்தவேளே ... கந்தனாகிய மன்மத சொரூபனே கொங்கை குறமங்கையின் சந்த மணம் ... குறமங்கை வள்ளியின் சந்தன மணம் வீசும் உண்டிடும் (தம்பிரானே) ... மார்பை நுகர்கின்ற தம்பிரானே கும்பமுனி கும்பிடும் தம்பிரானே. ... அகத்திய முனிவர் தொழும் தம்பிரானே. * முருகன் சூரனை வதைத்தபோது போர்க்களத்தில் விசுவரூபம் கொண்டதையும், அதனை திருமாலும், சிவனும் கண்டு மகிழ்ச்சி கொண்டதையும் குறிக்கும்.