திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் திருநாவுக்கு அரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன். 1 தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச் சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள் மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு. 2 புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின் கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர் இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும். 3 காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை. 4 கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும். 5 கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப் பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம். 6 நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல் பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித் துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால். 7 மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும் உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் வரு மேனிச் செங்கண் வரால் மடி முட்டப் பால் சொரியும் கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி. 8 மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச் செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை. 9 எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும் வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி மயில் குலமும் முகில் குலமும் மாறாட மருங்கு ஆடும். 10 மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு. 11 இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும் மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால் தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர். 12 ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம் நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள். 13 மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும் அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும் புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள். 14 தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண் குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும். 15 அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார் மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார். 16 புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண் மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில் திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார். 17 திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார். 18
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக் குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார். 66 திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார். 67 நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய் சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார். 68 திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித் தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால் உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார். 69 நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறுசிந்தையில் நேசம் மிக மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் எனநீடிய கோதில் திருப்பதிகம் போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர் நின்று புகன்றனரால். 70 மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான் அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச் செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம் திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர் முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கினரே. 71 அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப் பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவிமீது விழுந்து புரண்டு அயர்வார் இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின் தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார். 72 பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம் அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும் இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்கொல் எனத் தொழுவார். 73 மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின்நன்நாமம் நயப்புற மன்னுக என்று யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே. 74 இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறைஆகிய அன்பரும் இந்நெடுநாள் சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இதுஎன்று தெருண்டு அறியா அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே. 75 பரசும் கருணைப் பெரியோன் அருளப்பறி புன்தலையோர் நெறி பாழ்பட வந்து அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனாஅடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடுமா கடல் என்ன நிறைந்துளதே. 76 மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர்வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றி எழும் திருவாசகமும் கையில் திகழும் உழவாரமுடன் கைக்கொண்டு கலந்து கசிந்தனரே. 77 மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அத்தன்மைப் பதி மேவியதா பதியார் பொய்மைச் சமயப் பிணி விட்டவர் முன்போதும் பிணி விட்டருளிப் பொருளா எம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே. 78 இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம் பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில் புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய். 79 தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப் பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார். 80
கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால் மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம் உண்டா யினவண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே. 141 இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச் செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே. 142 உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார். 143 அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத் தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம் பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள். 144 புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும் பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான். 145 வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப் பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான். 146 இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல் பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச் சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார். 147 திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும் அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப் பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார். 148 கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப் பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார். 149 புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன் தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார். 150 பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத் தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும். 151 நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம் மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோளில் சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த. 152 ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத் தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால் ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார். 153 தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப் பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள் பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும் தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து. 154 வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம் கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல் புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார். 155
@vedicvoicemedia Жыл бұрын
பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால். 111 இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில் படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில் கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே. 112 மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச் சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே. 113 பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர் நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல் ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார் சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர். 114 அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச் சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார். 115 வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச் செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம் அடியோம் நாம் அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார். 116 தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக் கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத் தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம். 117 ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத் தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரித்து மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே. 118 ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே. 119 யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் மானம் அழிந்து மயங்கி வருந்திய சிந்தையர் ஆகித் தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான். 120 நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர் பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப் பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார். 121 அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைத்தவன் தன்னைச் சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார். 122 ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித் தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப் பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில் வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான். 123 அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர். 124 அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும் எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார். 125
@vedicvoicemedia Жыл бұрын
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு பற்றி உணர்வினால் பதிகம் பாடினார். 126 பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக் கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே. 127 அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத் தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர் மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார். 128 இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ. 129 அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக் கருணை நாவரசினைத் திரைக் கரங்களால் தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட வருணனும் செய்தனன் முன்பு மா தவம். 130 வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன் பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில். 131 அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல் தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே. 132 தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண் கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார். 133 ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும் சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினரே. 134 மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால் உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள் செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார். 135 தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும் மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப் பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின் காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார். 136 வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம் எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம் தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார். 137 மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும் தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார். 138 மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப் பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே. 139 தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப் பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே. 140
@Alaguelakiadharani Жыл бұрын
தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@vedicvoicemedia Жыл бұрын
மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக் கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார். 81 இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார். 82 தவ்வை சைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம் பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும் தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார். 83 சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார். 84 உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர் கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார். 85 அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான். 86 கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால் நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச் சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார். 87 விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான். 88 தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர். 89 அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித் தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப் பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான். 90 அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார். 91 சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார். 92 நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின் கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத் தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார். 93 ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார். 94 பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச் சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார். 95
@lakshminarashiman9901 Жыл бұрын
சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🔥
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@v.sivanesanesan3709 Жыл бұрын
Sivaya nama arumai aiahya
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@vedicvoicemedia Жыл бұрын
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார். 36 நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின் நல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால் கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார். 37 பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார். 38 அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத் துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத் தங்களின் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார். 39 அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில் சித்த நிலை அறியாத தேரரையும் வாதின் கண் உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார். 40 அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச் செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும் தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார். 41 பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால் ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார் நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார். 42 சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக் குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம் அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால் துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார். 43 புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப் பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார். 44 நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில் கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து. 45 தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால். 46 தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச் சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப் பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார். 47 மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார் உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான் அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வம் என அருளி. 48 பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும் தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக் கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால். 49 அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப் படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார். 50
@vedicvoicemedia Жыл бұрын
அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப் பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித் திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார். 96 ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத் தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார். 97 வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே. 98 மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப் பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார். 99 ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப் பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள். 100 ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர் தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார். 101 அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால் இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள். 102 ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால்கெடு மன்னன் ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத் தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப் பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார். 103 நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார். 104 பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள் முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால் படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ. 105 அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத் தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார். 106 நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார். 107 மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார். 108 மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம் கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப் பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல் கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான். 109 கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு மாடத்தை மறித்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித் தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின் வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம். 110
@vedicvoicemedia Жыл бұрын
ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார். 156 நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை பால் மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும் காவில் களி மயில் மகிழ் உற்று எதிர் எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ் வாவித் தடமலர் வதனம் பொலிவுறு மருதத் தண்பணை வழி வந்தார். 157 முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும் அருகில் செறிவனம் என மிக்குயர் கழை அளவில் பெருகிட வளர் இக்குப் பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவைக் கண்டு உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன என முன்புள வள வயல் எங்கும். 158 அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம் பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார். 159 அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம் இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே சிவ முன் பயில் மொழி பகர் கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை. 160 அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாறச் செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குடதிசை மணி வாயில் புறம் வந்துற்றார். 161 அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும் மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார் கல்வித் துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை வளர் சிவமே நிலவிய திருவீதி. 162 நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திருவீதிப் புவனங்களின் முதல் இமையோர் தடமுடி பொருந்திய மணி போகட்டிப் பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள். 163 மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் விரிவெங்கதிர் நுழைவது அரிதாகும் கோலம் பெருகிய திருவீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உறமெய் கொடு தொழுதுள்புக்கார். 164 வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா அளவில் பெருகிய ஆர்வத்து இடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் புளகச் செறி நிரை விரவத் திருமலி பொன்கோபுரம் அது புகுவார் முன் களனில் பொலிவிடம் உடையார் நடநவில் கனகப் பொது எதிர் கண்ணுற்றார். 165 நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெறவரு நிலை கூடத் தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார். 166 கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறுஎய்தும் மெய்யும் தரைமிசை விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு நின்றாடும் ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால். 167 இத் தன்மையர் பல முறையும் தொழுது எழஎன்று எய்தினை என மன்றாடும் அத்தன் திரு அருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் மெய்த் தன்மை யினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும் சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திருநேரிசை மொழி பகர்கின்றார். 168 பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால் அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று இத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலைப் பாடி கைத் திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார். 169
@iyappanavk7387 Жыл бұрын
Nandrihal iya
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@vedicvoicemedia Жыл бұрын
நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகிப் பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார். 170 அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் திருக் குறுந் தொகைகள் பாடித் திரு உழவாரங் கொண்டு பெருத்து எழு காதலோடும் பெரும் திருத் தொண்டு செய்து விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட. 171 மேவிய பணிகள் செய்து விளங்குநாள் வேட்களத்துச் சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக் காவியம் கண்டார் மன்னும் திருக்கழிப் பாலை தன்னில் நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ. 172 சின விடை யேறுகைத் தோறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து வன பவள வாய்திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண்தமிழ் பாடி அங்கு வைகி நினைவரியார் தமைப் போற்றி நீடுதிருப்புலியூரை நினைந்து மீள்வார். 173 மனைப் படப்பில் கடல் கொழுந்து வளைசொரியும் கழிப் பாலை மருங்கு நீங்கி நனைச்சினை மென் குளிஞாழல் பொழில் ஊடுவழி கொண்டு நண்ணும் போதில் நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத் தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ எனப்பாடி தில்லை சார்ந்தார். 174
@vedicvoicemedia Жыл бұрын
அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம் நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார். 51 அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக் கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார். 52 புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார். 53 தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய் ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப் போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று. 54 குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப் பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக் கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த. 55 ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார் பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத் தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான். 56 கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான். 57 என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான். 58 அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச் செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என. 59 எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத் தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார். 60 பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண் செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார். 61 சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக் குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில் திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார். 62 வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து. 63 தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார். 64 மற்ற வுரை கேட்டலுமே மருண் நீக்கியார் தாமும் உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார். 65
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகழனார் காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள் மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார். 19 மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின் பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார். 20 தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார். 21 அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின் முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர் மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார் பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார். 22 ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார். 23 அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார் பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார். 24 கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன் மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல் அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார். 25 வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார். 26 ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத் தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார். 27 மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் சுற்றம் உடன் மக்களையும் துகளாகவே நீத்துப் பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார். 28 தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின் மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால் பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார். 29 ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார் மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார் பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார். 30 வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய் அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத் தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச் செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார். 31 எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள் அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார். 32 அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன் என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார். 33 தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார். 34 மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித் தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க் காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால் ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார். 35