ஷீலா அக்கா திருநங்கைகள் பற்றி என் மனதின் வரிகள். உங்களுக்காக ஆனால் என் மனதின் வரிகள் உங்கள் வாழ்வில் சில மாறுபட்டுள்ளது. எனது வரிகள் உங்களுக்காக.(உருமாறும் திருநங்கைகள்) நான் பிறந்தநாள் மற்றவர்களுக்கு இனிக்குது, நான் யார் என்று அறிந்த நாள் மற்றவர்களுக்கு கசக்குது, நான் பிறந்தபோது என் தாய் அனுபவித்த பிரசவ வலியை போன்றது, நான் யார் என்று அறிந்த நாள் அவர்களின் கண்ணில் தெரிந்தது, நான் அவர்களின் பிள்ளையாக இருந்தாலும் மற்றவர்க்காக எனது, நான் பார்த்த என் தந்தை மனம் என்னை ஏற்க மறுத்தது, நான் என்ன செய்வேன் மரபணு மாற்றம் ஆனது சோதனையானது, நான் வாழும் வாழ்வும் வேதனையானது, நான் சிரித்த சிரிப்பு மற்றவர்களின் கேலி சிரிப்பானது, நான் பேசும் பேச்சும் மாற தொடங்கியது, நான் நடந்த என் நடையிலும் மாற்றம் வந்தது., நான் பேசும் பேச்சால் என் தாயின் மன வலி மற்றவர்களால் அதிகமானது, நான் கல் சிலையாக பிறக்காமல் காதுள்ள மனிதனாக பிறந்தது, நான் செய்த தவறு இல்லை இயற்கையின் தவறு இது, நான் தாயின் மனவலியை போக்க வீட்டை விட்டு வெளிவந்தது, நான் பார்த்த பிச்சை பிச்சைகாரர்களுக்கு போடும் கருனையானது, நான் எடுக்கும் பிச்சை முகமுடிஅணிந்த சில மனிதர்களின் காம பிச்சையானது, நான் இனி இந்த உலகத்தில் வாழ முடியாது என்று நினைத்தது, நான் இருக்கிறேன் என்று தாய் உள்ளம் கொண்ட திருநங்கை அம்மா என்னை அரவணைத்தது, நான் முழுமையாக திருநங்கையாக மாறியது, நான் மட்டும் அல்ல நாங்களும் உள்ளோம் என்று அனைத்து திருநங்கைகளும் வந்தது,நான் என்று சொல்லாமல் நாங்கள் என்று மாறிமாறி அன்புகாட்டியது, நான் மட்டும் இல்லாமல் திருநங்கைகள் நாங்கள் வாழ்வில் உயர தொடங்கியது, நான் என்று இனி கூறாமல் நாங்கள் நாம் என்று கூறி இனியாவது, நமது பாலின பாகுபாடு இல்லாமல் வாழ்வில் முன்னேறவோம், ❤❤❤ நல் வாழ்த்து❤❤❤ ஷீலா அக்கா வாழ்வில் நல்வழி காட்டும் திருநங்கை அம்மா கிடைத்திருந்தால் என் மனதின் வரிகள் அவர்களின் மனதின் வரிகளாக ஒலித்திருக்கும் என்று நம்புகிறேன்.ஷூலா அக்கா வாழ்வில் முன்னேற உதவியாக உள்ள அனைவருக்கும் ஷீலா அக்காவிற்கும். வாழ்த்துக்கள் 2025 புத்தாண்டு உங்கள் வாழ்வில் வெற்றி உடையதாக மாறட்டும் நன்றி வணக்கம்❤