சாயி ராம் சாயி ராம் || SAI RAM SAI RAM SARANAM SAI RAM || SHIRDI BABA SONG || RAMU || VIJAY MUSICALS

  Рет қаралды 12,943,041

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

''Shirdi ke Data Sabse Mahan''
Sayee ram sayee ram saranam sayee ram , Shirdi sai baba songs Tamil
SAI RAM SAI RAM SARANAM SAI RAM
ALBUM : ELLAME BABA
SINGER : RAMU
MUSIC : SIVAPURANAM D V RAMANI
LYRICS : SENKATHIRVANAN
Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
#SaiBabaSong#TamilDevotional#vijaymusicals
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
ஆல்பம் : எல்லாமே பாபா
பாடியவர் : ராமு
இசை : சிவபுராணம் D V ரமணி
பாடல் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
To get more updates follow us on :
Instagram - / vijaymusicals
Facebook - / vijaymusical
பாடல்வரிகள் || LYRICS :
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
அருள்தரும் சாயி நாதனே
சத்குரு பாபா சாந்தமே பாபா
நற்கதி பாபா நல்கிடும் பாபா
மனம் உன்னை தினம் போற்றுமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
ராமனும் பாபா கண்ணனும் பாபா
ஈஸ்வரன் பாபா யாவுமே பாபா
பரிவுடன் நீ பார்க்கிறாய்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
கண்களில் பாபா அருள்தரும் பாபா
கனிவுடன் பாபா காத்திடும் பாபா
எமதுயிர் நீயல்லவா
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
சந்திரன் பாபா சூரியன் பாபா
அனைத்திலும் பாபா உன் முகம் பாபா
நிழல் தரும் தெய்வீகமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
புன்னகை பாபா புரிந்திடும் பாபா
என்னுயிர் பாபா என்றுமே பாபா
திருவடி தினம் வேண்டுவோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
உலகினை பாபா அழைத்தாய் பாபா
அருள்மழை பாபா பொழிந்திடும் பாபா
ஆனந்தம் உன் ரூபமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
பரம்பொருள் பாபா பணிவோம் பாபா
திருவருள் பாபா நிறைந்திடும் பாபா
நிலையென்றும் நின் பதமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
உயிரினம் பாபா உன் புகழ் பாபா
தினம் தினம் பாபா பாடிடும் பாபா
உன்னையன்றி துணையில்லையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
காலத்தை பாபா வென்றிடும் பாபா
பாவத்தை பாபா போக்கிடும் பாபா
பணிந்திடும் வரம் வேண்டுவோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
எளிமையின் பாபா இருப்பிடம் பாபா
வலிமையை பாபா வழங்கிடும் பாபா
அருள்மழை நீ சிந்த வா
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
விண்ணிலும் பாபா விழிகளில் பாபா
மண்ணிலும் பாபா மனத்திலும் பாபா
அன்புடன் உனைப் பார்க்கிறோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
சிந்தனை பாபா செயலிலும் பாபா
வந்தனை பாபா செய்கிறோம் பாபா
வரும் வினை பறந்தோடுமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
மந்திரம் பாபா மகத்துவம் பாபா
விந்தைகள் பாபா விளக்கமும் பாபா
விடிவெள்ளி நீயல்லவா
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
கார்முகில் பாபா மாமழை பாபா
பூரணம் பாபா புண்ணியம் பாபா
உன்பதம் சரணாகதி
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
தாயெனும் பாபா தழுவிடும் பாபா
தூயவன் பாபா துணைவரும் பாபா
புதுமைகள் நீ செய்கிறாய்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
வீணையும் பாபா நாதமும் பாபா
ஆழ்கடல் பாபா அலைகளும் பாபா
எதுவரை உன் ராஜ்ஜியம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
கனவிலும் பாபா வருவதும் பாபா
நினைவுகள் பாபா தொடர்வதும் பாபா
உனக்கொரு நிகரில்லையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
வாழ்விலும் பாபா தாழ்விலும் பாபா
வழித்துணை பாபா வந்திடும் பாபா
நித்தமும் உனை பாடுவோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
காற்றிலும் பாபா தொழுவதும் பாபா
ஏற்றமே பாபா தருவதும் பாபா
கருணையின் அவதாரமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
தீயிலும் பாபா தெரிவதும் பாபா
பூவிலும் பாபா சிரிப்பதும் பாபா
எங்கெங்கும் உனைப் பார்க்கிறேன்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
வாழ்க்கையும் பாபா வசந்தமும் பாபா
தூக்கமும் பாபா தொழுகையும் பாபா
தொடர்ந்திடும் பல நன்மையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
அடைக்கலம் பாபா உன்பதம் பாபா
தடைபல பாபா விலக்கிடும் பாபா
அருள்நிறை தயாபரி
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
பிணிகளை பாபா நீக்கிடும் பாபா
மனிதரில் பாபா தெய்வமே பாபா
நினைவுகள் உனதாகுமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
உன்முகம் பாபா ஒளிச்சுடர் பாபா
நன்மைகள் பாபா வழங்கிடும் பாபா
மனக்குறை எமக்கில்லையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்

Пікірлер
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН