7.53 - Part-2 - மருவார் கொன்றை - maruvar kondRai - (Thevaram class)

  Рет қаралды 100

Siva Siva

Siva Siva

Күн бұрын

List of other padhigam classes: thevaramclass....
Part-1:
Part-2:
சுந்தரர் தேவாரம் - 7.53 - மருவார் கொன்றை - திருக்கடவூர் மயானம் - (பண் - பழம்பஞ்சுரம்)
sundarar tēvāram - 7.53 - maruvār koṇḍrai - (paṇ - paḻambañjuram)
Odhuvar - Dharmapuram Swaminathan: • Sundarar Thevaram - 45...
Sivakkara Swamigal: • 34.திருக்கடவூர் மயானம்...
G.P. Nallasivam: • 7.53 - திருக்கடவூர் (ம...
பதிகப் பொருள் விளக்கம் - Detailed meaning / explanation of padhigam verses.
இப்பதிகப் பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்:
Blog post link: thevaramclass....
Verses of this padhigam are available (in several languages) in the above URL.
V. Subramanian
#thevaram #thevaramclass #தேவாரம் #தேவாரவகுப்பு #sundarar #சுந்தரர்
--------------
Word separated:
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.53 - திருக்கடவூர் மயானம் - (பண் - பழம்பஞ்சுரம்)
(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" x 2 - meter)
பாடல் எண் : 6
துணி வார்- கீளும் கோவணமும் துதைந்து, சுடலைப்-பொடி அணிந்து,
பணி மேல் இட்ட பாசுபதர்; பஞ்சவடி மார்பினர்; கடவூர்த், *
திணி-வார்- குழையார்; புரம் மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்;
பிணி-வார்- சடையார்; * மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
(* For interpretation - கடவூர் - goes with - மயானத்து - in the 4th line)
பாடல் எண் : 7
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர்; கடவூர் உறை-வாணர்;
தேர் ஆர் அரக்கன் போய்-வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்;
ஊர்தான் ஆவது உலகு-ஏழும் உடையார்க்கு ஒற்றியூர், ஆரூர்;
பேர் ஆயிரவர்; மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
பாடல் எண் : 8
வாடா-முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்,
கோடு ஆர் கேழற்-பின் சென்று குறுகி, விசயன் தவம் அழித்து,
நாடா வண்ணம் செருச்-செய்து ஆவநாழி நிலை அருள்செய்
பீடு ஆர், சடையார்; மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
பாடல் எண் : 9
வேழம் உரிப்பர்; மழுவாளர்; வேள்வி அழிப்பர், சிரம் அறுப்பர்;
ஆழி அளிப்பர் அரிதனக்கு; ஆனஞ்சு உகப்பர்; அறம் உரைப்பர்;
ஏழை தலைவர்; கடவூரில் இறைவர்; சிறு-மான்மறிக்-கையர்;
பேழைச் சடையர்; மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
பாடல் எண் : 10
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்து மயானத்துப்,
பீடை தீர அடியாருக்கு அருளும், பெருமான்-அடிகள் சீர்
நாடி நாவல்-ஆரூரன் நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடும் அடியார் கேட்பார்மேல் பாவமான பறையுமே.
=====
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
sundarar tēvāram - padigam 7.53 - tirukkaḍavūr mayānam - (paṇ - paḻambañjuram)
(aṟusīr viruttam - "mā mā kāy" x 2 - meter)
pāḍal eṇ : 6
tuṇi vār- kīḷum kōvaṇamum tudaindu, suḍalaip-poḍi aṇindu,
paṇi mēl iṭṭa pāsubadar; pañjavaḍi mārbinar; kaḍavūrt, *
tiṇi-vār- kuḻaiyār; puram mūṇḍrum tīvāyp paḍutta sēvaganār;
piṇi-vār- saḍaiyār; * mayānattup periya perumān-aḍigaḷē.
(* For interpretation - kaḍavūr - goes with - mayānattu - in the 4th line)
pāḍal eṇ : 7
kār ār kaḍalin nañju uṇḍa kaṇḍar; kaḍavūr uṟai-vāṇar;
tēr ār arakkan pōy-vīḻndu sidaiya viralāl ūṇḍrinār;
ūrdān āvadu ulagu-ēḻum uḍaiyārkku oṭriyūr, ārūr;
pēr āyiravar; mayānattup periya perumān-aḍigaḷē.
pāḍal eṇ : 8
vāḍā-mulaiyāḷ tannōḍum magiḻndu kānil vēḍuvanāyk,
kōḍu ār kēḻaṟ-pin seṇḍru kuṟugi, visayan tavam aḻittu,
nāḍā vaṇṇam seruc-ceydu āvanāḻi nilai aruḷsey
pīḍu ār, saḍaiyār; mayānattup periya perumān-aḍigaḷē.
pāḍal eṇ : 9
vēḻam urippar; maḻuvāḷar; vēḷvi aḻippar, siram aṟuppar;
āḻi aḷippar aridanakku; ānañju ugappar; aṟam uraippar;
ēḻai talaivar; kaḍavūril iṟaivar; siṟu-mānmaṟik-kaiyar;
pēḻaic caḍaiyar; mayānattup periya perumān-aḍigaḷē.
pāḍal eṇ : 10
māḍam malgu kaḍavūril maṟaiyōr ēttu mayānattup,
pīḍai tīra aḍiyārukku aruḷum, perumān-aḍigaḷ sīr
nāḍi nāval-ārūran nambi sonna naṭramiḻgaḷ
pāḍum aḍiyār kēṭpārmēl pāvamāna paṟaiyumē.
=====

Пікірлер: 5
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 14 күн бұрын
‘ பேழைச்சடையர்’ பாடலுக்குள் நிறைய கருத்துகள் பொதிந்திருப்தால், அதுவே ஒரு பேழைபோல் இருக்கிறது என்பது நல்ல கருத்து.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 14 күн бұрын
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 14 күн бұрын
எளிமையான சொற்கள் கொண்ட பாடல் என்றாலும், தங்கள் விளக்கங்களும், மற்றவரகளின் கருத்துகளோடும் கேட்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது் ‘ ஓட்டுனர்’ எனபது தவறு, ‘ஓட்டுநர்’ எனபதே சரி. இது போல பல தவறுகள் நடைமுறயில் இருக்கிறது. சரியானது என்பதை எப்படி புரிய வைப்பது? நன்றி ஐயா.
@SivaSiva
@SivaSiva 14 күн бұрын
வள்ளுவர் சொல்வது - குறள் 33 - ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 14 күн бұрын
நன்றி ஐயா.
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 22 МЛН
பெரிய புராணம் வகுப்பு,  சென்னிமலை. 16ம் நாள் வகுப்பு:  22.9.24
1:37:57
பெரிய புராணம் வகுப்பு சென்னிமலை
Рет қаралды 2,2 М.
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26