அதிக பலன் தரும் விநாயகரின் சிறப்பு வழிபாடுகள், மூல மந்திரம், பதிகங்கள், விரத நாட்கள் & நெய்வேத்யம்

  Рет қаралды 562,923

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

விநாயகருடைய ஆறு படை வீடுகள் எவை? அங்கு வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் | Six Abodes of Vinayagar
• விநாயகருடைய ஆறு படை வீ...
விநாயகர் மூல மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே
வரவரத ஸ்ர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
கணேச காயத்ரி மந்திரம் :
ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
கணபதி 108 போற்றிகள்:
1. ஓம் அத்தி முகனே போற்றி
2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
3. ஓம் அம்மையே அப்பா போற்றி
4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
5. ஓம் அமரர்கள் கோனே போற்றி
6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
7. ஓம் அங்குச பாஸா போற்றி
8. ஓம் அரு உருவானாய் போற்றி
9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி
10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி
11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி
13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி
14. ஓம் ஆதி மூலமே போற்றி
15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
16. ஓம் ஆரா அமுதா போற்றி
17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
18. ஓம் இடையூறு களைவாய் போற்றி
19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி
21. ஓம் ஈசனார் மகனே போற்றி
22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி
23. ஓம் உத்தமக் குணாளா போற்றி
24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
25. ஓம் உண்மை நெறியாளா போற்றி
26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி
29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி
30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி
31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
33. ஓம் எண்குண சீலா போற்றி
34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி
36. ஓம் ஏக நாயகனே போற்றி
37. ஓம் எழில் மிகு தேவே போற்றி
38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி
39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி
40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி
41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி
43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
44. ஓம் முழு முதற் பொருளே போற்றி
45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி
46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
47. ஓம் கணத்து நாயகனே போற்றி
48. ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
49. ஓம் கலைஞானக் குருவே போற்றி
50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி
51. ஓம் கற்பக களிறே போற்றி
52. ஓம் கண்கண்ட தேவே போற்றி
53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி
54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி
55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி
56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
57. ஓம் சர்வ லோகேசா போற்றி
58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி
59. ஓம் சுருதியின் முடிவே போற்றி
60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி
62. ஓம் நாதனே கீதா போற்றி
63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி
65. ஓம் தரும குணாளா போற்றி
66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
67. ஓம் தூயவர் துணைவா போற்றி
68. ஓம் துறவிகள் பொருளே போற்றி
69. ஓம் நித்தனே, நிமலா போற்றி
70. ஓம் நீதி சால் துரையே போற்றி
71. ஒம் நீல மேனியனே போற்றி
72. ஓம் நிர்மலி வேனியா போற்றி
73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி
74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி
75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி
76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி
77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி
78. ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி
79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
80. ஓம் முத்தியை தருவாய் போற்றி
81. ஓம் வேழ முகத்தாய் போற்றி
82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி
83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி
84. ஓம் வேதாந்த விமலா போற்றி
85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி
86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
87. ஓம் செல்வம் தருவாய் போற்றி
88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி
90. ஓம் சினம், காமம், தவிர்ப்பாய் போற்றி
91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி
92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி
93. ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி
94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி
95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி
96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி
97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி
98. ஓம் அமிர்த கணேசா போற்றி
99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி
100. ஓம் வலம்புரி விநாயகா போற்றி
101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி
102. ஓம் சித்தி விநாயகா போற்றி
101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
104. ஓம் சுந்தர விநாயகா போற்றி
105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி
106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி
107. ஓம் ஆபத் சகாயா போற்றி
108. ஓம் அமிர்த கணேசா போற்றி
விநாயகர் அகவல் படிப்பது சிறந்தது.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா
பண்டிகை தினங்கள் மட்டுமின்றி பொதுவாக சாதாரண நாட்களிலும் விநாயகரை வழிபடும் முறை, வழிபட வேண்டிய விரத நாட்கள், மூல மந்திரம், பதிகங்கள், அர்ச்சிக்கும் மலர்கள், நெய்வேத்தியம் மற்றும் சிறப்பான நற்பலன்களைப் பெற்றுத் தரும் சிறப்பு வழிபாட்டு முறைகள் அனைத்தையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 809
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН