Рет қаралды 45,772
#AhmadSalihFaheemi
Badriyyeen Munajat - பத்ரிய்யீன் முனாஜாத்
ஆக்கம் :
J.S.K.A.A.H. மௌலானா அவர்கள்
CREDITS:
Lyrics:
J.S.K.A.A.H. Moulana
Voice:
Hafiẓ B.S. Ahmad Salih Faheemi
Audio Mixing:
Sajid Khan
(+91 9094510119)
Concept & Animation:
Abdul Cader P. M. Ilyas
Technical Support:
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by:
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported by:
Chinna Maraicar Family (Kilakarai)
LYRICS :
1) மண்ணில் பிறந்து ஹயாத்தா யிருக்கும் நாள்
மன்னர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
2) துக்கம் பலாயும் வபாவும் அணுகாமல்
தூயவர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
3) உண்ணும் உணவும் முதலும் சுருங்காமல்
உண்மை பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
4) இன்னும் மெளத்தின் வேளை லேசு கிடைக்கவும்
எங்கள் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
5) அறிவு குலையும் மரண சமயத்தில்
அஸ்ஹாபுல் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
6) முற்றும் இருண்ட கபுரில் அடங்கும் நாள்
மூத்தோர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
7) தீராத நிஃமத் செய்யும் சமயத்தில்
தீரர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
8) அல்லல் மிகுந்த ஹஷ்ரில் கூடும் நாள்
அன்பர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
9) உல்லாச மில்லா நேரம் உதிக்கும் நாள்
உம்பர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
10) கூட்டத் தாரில்லா ஹிஸாபுடைய நேரத்தில்
குணத்தோர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
11) ஏறிய சூட்டினால் கரிக்கும் நேரத்தில்
ஏகர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
12) சீறிய நரகங்கள் கோபிக்கும் நேரத்தில்
சீலர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
13) அதிகம் கூர்மையுள்ள பாலம் கடக்கும் நாள்
அரசர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
14) அதுபோலு மின்னும் என் தாய் பிதாவையும்
அறிவைக் கற்பித்த உஸ்தாது மாரையும்
15) இதமான இஃக்வானும் அஃகவாத்தும் மற்றுள்ள
இரஸூல் நபியின் உம்மத்தானோர் எல்லாரும்
16). அஸ்ஹாபுல் பதிரிய்யீன்கள் பொருட்டாலும்
அதுனென்னும் சுவர்க்கத்தில் சேர்த்தருள் யா அல்லாஹ்
17). அவனியில் என்னில் மானக் கேடொன்றில்லாமல்
அதிகம் நிஃமத்தாய் மெளத்தாக்கும் வேளையில்
18) நல்ல ஷஹாதத்தும் ஈமானும் ஈந்தருள்
நாதர் பதுரீன்கள் பொருட்டாலே யா அல்லாஹ்
19) இவர்கட்கு நியமமாய் உந்தன் ரிழா தன்னை
ஈந்தருள் அஹதான யாரப்பீ யா அல்லாஹ்
20) நபி நாயகம் மீதில் உந்தன் ஸலவாத்தும்
நல்ல ஸலாமும் வழங்குவாய் யா அல்லாஹ்
21) பெற்ற என் தாய் தந்தை ஆபாக்கள் மீதும்
பிழை பொறு பதுரீன்கள் பொருட்டாலே யா அல்லாஹ்
22) சுற்றத்தார்கள் சோதரர்கள் யாவரையும்
சோதனை யின்றிக் காத்தருள்வாய் நீ யா அல்லாஹ்
23) மக்கள் வாழ்வை வளம் கொழிக்கச் செய்வாயே
மணமாய் அவர்கள் ஹயாத்தை நீடிப்பாய் அல்லாஹ்
24) தக்க எங்கள் சந்ததிகள் யாவரையும்
தகையோர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
25) கபுரிலிருந்து எழுப்பும் நாள்வரை பர்ஸகிலே
காத்தருள் உடலுயிரை நீயே யா அல்லாஹ்
26) போகும் எங்கள் ஸபரிலுள்ள நாட்டத்தை
பூர்த்தியாக்கு பதுரீன்கள் பொருட்டா லல்லாஹ்
27) ஸஃபரில் ஆபத்துக்கள் வந்து அணுகாமல்
தவத்தோர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
28) பகைவர் வஞ்சகர்கள் கெடுதி நேராமல்
மகிமை பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
29) எங்களெதிரிகள் எம்மைத் தாக்க வரும்போது
பங்கம் விளைத்தே எம்மை அழிக்க வரும்போது
30) எங்கள் சொத்து வீடு முதலாம் உடைமைகள்
எடுத்தோ எரித்தோ அழிக்க அணுகி வரும்போதும்
31) அல்லாஹ்வே உன் படை வீரரான பதுரீன்கள்
எல்லார் உதவியும் தந்தருள் காதிரே அல்லாஹ்
32) எங்கள் பெண்கள் குழந்தையர் முதியோர் தம்மை
எங்கும் எப்போதும் அவர் தம் மானத்தை
33). பிறப்பு முதலாம் இறப்பு வரையும் யா ரப்பீ
சிறந்தோர் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
34) உன்னை நம்பும் உந்தன் கூட்டத்தாரெம்மை
என்றும் பதுரீன்கள் காவலி லாக்கல்லாஹ்
35) எம் குடும்பம் கோத்திரத்தார் யாவரையும்
இனியவர் பதுரீன்கள் காவலிலாக்கல்லாஹ்
36) ஷிர்க்கு என்னும் பெரிய பாபம் சேராமல்
சீரிய தெளஹீதில் ஈமானைத் தா அல்லாஹ்
37) எங்கள் கண்மணி நாயகத்தின் ஷஃபாஅத்தை
ஈந்தருள் இறுதி நாளதில் ரப்பி யா அல்லாஹ்
38) ஸல்லல்லாஹூ அலா நபீனா வஸல்லம்
வ அஸ்ஹாபின் வ அஹ்லி பைத்தி ரஸூலில்லாஹ்
#AhmadSalihFaheemi