No video

சனிப் பெயர்ச்சி பரிகாரங்கள், வழிபாடுகள், தானங்கள் & படிக்க வேண்டிய பதிகங்கள்|Sani Peyarchi 2020-2023

  Рет қаралды 335,131

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

#sanipeyarchi #சனிப்பெயர்ச்சி #பரிகாரங்கள்
சனிப் பெயர்ச்சி 2020-2023 சாதகமாக அமையாதவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடுகள், பரிகாரங்கள், செய்ய வேண்டிய தானங்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், படிக்க வேண்டிய பதிகங்கள் என அனைத்தும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
ஏழரை சனி, ஜென்ம, விரைய சனி போன்ற சனியின் தொல்லையில் இருந்து விடுபட | To get rid of from Ezharai Sani
• ஏழரை சனி, ஜென்ம, விரைய...
சனிப்பெயர்ச்சியின் தாக்கங்கள் குறைய பாராயணம் செய்ய வேண்டிய பதிகம் - 1
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
சனிப்பெயர்ச்சியின் தாக்கங்கள் குறைய பாராயணம் செய்ய வேண்டிய பதிகம் - 2
கோளறு பதிகம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
- ஆத்ம ஞான மையம்.

Пікірлер: 684
@harimurugan1002
@harimurugan1002 3 жыл бұрын
அழகா பேசுறீங்க அக்கா தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை வந்திடும் நீங்க பேசுறது மனதிற்கு அவ்வளவு ஆறுதலாக இருக்கிறது நன்றி அக்கா 🙏🙏🙏
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 3 жыл бұрын
உண்மையிலும் நான் பயந்தேன். இப்போ போயிருச்சு. நன்றி அம்மா
@prakashm4133
@prakashm4133 3 жыл бұрын
சகோதரி உங்கள் இறைபணி இன்னும் பன்நெடுங்காலம் தொடர வேண்டும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்ந்து வையத்துள் நிலைக்க வேண்டும் என வேண்டுகிறேன்
@sumathikumaresan3989
@sumathikumaresan3989 3 жыл бұрын
நன்றிகள் பல..சரியான நேரத்தில் சரியான பதிவு.. மிகத்தெளிவான விளக்கம்.. இந்த அருமையான தகவலை உற்றார் உறவினருக்கும் நட்பு வட்டங்களுக்கும் பகிர்ந்து விட்டுத் தான் மறுவேலை..🙏🙏🙂🙂
@udayakumaris5556
@udayakumaris5556 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா... அருமையான பதிவு 🙏... தங்களின் பேச்சு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும்... புது தெம்பும் ஏற்படுகிறது...👍
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
சிவபெருமானை வணங்குவோம் எங்கள் சனி பயத்தை போக்கிய அம்மா கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன்
@selva43
@selva43 3 жыл бұрын
எண்ணம் போல வாழ்க்கை.. எண்ணம் போல் தான் வாழ்க்கை... கிரகங்கள் நம் மனதை கட்டுபடுத்தியே நம்முடைய கர்ம வினைகளை.. நம்மிடம் கொண்டுவந்து சேர்கிறது.. நம் மனதை நம் கட்டுபாட்டில் வைத்திருந்தால்... கிரகத்தால் எதும் செய்ய இயலாது....
@lathachandran4708
@lathachandran4708 3 жыл бұрын
அம்மா வணக்கம்,அருமையான பதிவு,தெளிவான விளக்கம்,மனதில் இருந்த குழப்பங்கள் தீர நல்ல வழி சொன்னீர்கள்.நன்றி தாயே!
@nithyaarun5869
@nithyaarun5869 3 жыл бұрын
Nantri Amma
@lakshikasfamily7833
@lakshikasfamily7833 3 жыл бұрын
Ungala vida Vera yaralayum ivalo best ah oru visyatha convey panna mudiyathu mam,,;-);-) tq mam,
@user-uz1lv7nl7s
@user-uz1lv7nl7s 3 жыл бұрын
சபாஷ், சரியான விளக்கம். என் சிவன் எல்லோரையும் காப்பான் உண்மையை உள்ள படி உரைத்த தற்கு நன்றி சகோ தரி
@koraja6645
@koraja6645 3 жыл бұрын
Ur great spiritual person...compare to other spiritual person than ur great....I never skip ur speech ...iam also very deepest sivan devotee ....my father already buid sivan temple in srilanka....now iam in USA 🇺🇸
@uchimahaliuchimahali9473
@uchimahaliuchimahali9473 3 жыл бұрын
வணக்கம் நல்லதகவல் தந்தர்குநன்றி அம்மா🙏🙏🙏
@sramanisiva7724
@sramanisiva7724 3 жыл бұрын
அம்மா நீங்க சொல்லும் போதே மனதில் உள்ள பயம் எல்லோருக்கும்போய் விடும் மிக்க நன்றி அம்மா
@rathinamalam4348
@rathinamalam4348 3 жыл бұрын
சகோதரி ஆக்கபூர்வமான அறிவு பூர்வமான பதிவு தங்களுடைய மாணவி என்பதில் இன்னும் பெருமை அடைகிறேன் நன்றி 🙏
@ffplayer2822
@ffplayer2822 3 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் அம்மா. தெய்வத்தை சரணடைந்தால் நமக்கு துன்பமில்லை, ஓம் நமசிவாய
@gtbakiaraj
@gtbakiaraj 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 அக்கா.
@dangerdance4861
@dangerdance4861 3 жыл бұрын
சனியிஸ்வரனே போற்றி போற்றி அருமையான தகவல் நன்றி அன்பு சகோதரி 🙏
@muruganmurugan590
@muruganmurugan590 3 жыл бұрын
நல்லது தான் அதிகம் . தீதும் நன்றும் பிறர்தரா வாரீர். தவறை உணர்ந்து சரி செய்தால் நல்லதே நடக்கும்.
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 3 жыл бұрын
அருமையான பதிவு மேடம். மிகவும் தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும்படியாகவும் தெளிவுபடுத்தினீர்கள்.மிகவும் நன்றி.வணக்கம் 🙏🙏🌹🌹
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam நன்றி என்னை போல பல பேருக்கு சனி பெயர்ச்சி நடக்க போகிறது. தங்களது பதிவு தெளிவடையைச் செய்கிறது நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் 👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@payanullakurippukal
@payanullakurippukal 3 жыл бұрын
தீட்டு என்றால் என்ன? பிறப்பு, இறப்பு, பங்காளி, தாய், தந்தை, மனைவி இறந்தால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது. கோவிலுக்கு எவ்வளவு நாட்கள் செல்ல கூடாது பற்றி விரிவாக கூறுங்கள் அம்மா.
@nkalaiwani
@nkalaiwani 3 жыл бұрын
Santosam அம்மா நன்றி வாழ்க வளமுடன்
@Vel22Jansi
@Vel22Jansi 3 жыл бұрын
அருமையான.. தெளிவான விளக்கம்...🙏 ஓம் நமசிவாய...🙏 சிவ.. சிவ..🔥
@hollywoodstaradarsh5294
@hollywoodstaradarsh5294 3 жыл бұрын
Confident self boosters update we are so lucky to watch this type speech thank you mam ☺️👍💐
@mahang1444
@mahang1444 3 жыл бұрын
மேடம் ரொம்ப நன்றாக சொன்னீங்க 🙏 அருமை
@shinyk.j9154
@shinyk.j9154 3 жыл бұрын
அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ❤️🙏 மனம் அமைதி பெற்றது ❤️🙏 நன்றி அம்மா
@malathibinush2286
@malathibinush2286 3 жыл бұрын
திருவாதிரை பற்றி கூறுங்கள் அம்மா
@haripriyavjmanohar4071
@haripriyavjmanohar4071 3 жыл бұрын
Nandri Amma 🙏🏼 Miga arumaiyana padhivu 🙏🏼
@ALlifestyle...
@ALlifestyle... 3 жыл бұрын
மிக மிக மிக நன்றி அக்கா மனசு இப்போ தான் நிம்மதி ஆக இருக்கிறது🙏
@lakshmipriya957
@lakshmipriya957 3 жыл бұрын
3.35-3.55 true words. Thank you madam thanks for the information
@jayanthib6586
@jayanthib6586 3 жыл бұрын
உங்களின் பதிவிற்கு நன்றி
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@nimishayoutubechannel7198
@nimishayoutubechannel7198 3 жыл бұрын
நன்றி அம்மா . பயனுள்ள தகவல்
@thalaramesh9766
@thalaramesh9766 3 жыл бұрын
சனிப்பெயர்ச்சியைப் பற்றிய பயத்தினை போக்கி, இறைவனை நினைத்து தியாமை செய்வதனால் கிரகங்களின பெயர்ச்சி பலன்களை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய அம்மா அவர்களுக்கு நன்றி. ஓம் நமோ நாராயணா
@somusundaramurthy6733
@somusundaramurthy6733 3 жыл бұрын
பாஞ்சாலி பரந்தாமனிடம் அடைந்த சரணாகதிபோல் நாமும் இறைவனிடம் சரனடைந்தால் நல்லதே நடக்கும்
@SivaKumar-ur2od
@SivaKumar-ur2od 3 жыл бұрын
Sathyamana unmai
@saranyaneepa6604
@saranyaneepa6604 2 жыл бұрын
@@SivaKumar-ur2od ggttggngmggtgngtnmmgtmmmm
@saranyaneepa6604
@saranyaneepa6604 2 жыл бұрын
@@SivaKumar-ur2od ggttggngmggtgngtnmmgtmmmm
@thanusraghavant7919
@thanusraghavant7919 3 жыл бұрын
தகுந்த நேரத்தில் ஒரு நல்ல பதிவு. மிகவும் நன்றி அம்மா 🙏🙏. எங்களுடைய பயத்தை நீங்கள் நீக்கி விட்டீர்கள். ஒரு தெளிவு கிடைத்துள்ளது.
@lavanya4448
@lavanya4448 3 жыл бұрын
All this started only the past 15 years. Before this people did their work and remained happy
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌
@kumarsakunthala724
@kumarsakunthala724 3 жыл бұрын
மிக்க நன்றி🙏அம்மா
@marimuthumm6909
@marimuthumm6909 3 жыл бұрын
Mam neenga comedy ya pesurathu nalla irruku thank u mam
@prabakaranm5790
@prabakaranm5790 3 жыл бұрын
சூப்பர். உங்களுடைய கருத்துக்கள் அருமை
@pathmarajraj9792
@pathmarajraj9792 3 жыл бұрын
்அம்மா அடியேன் திருகோணமலை திருக்கோணேஸ்வர பதியை சேர்ந்தவன் இங்கும் சனீஸ்வரன் ஆலயம் உள்ளது இலங்கையில் ஒரு தனி தலம் உங்கள் பதிவு மன நிம்மதியை தந்தது நன்றி
@bhargavilokesh8150
@bhargavilokesh8150 3 жыл бұрын
Ur speech gives more confidence mam...... Very beautifully explained 🙏
@rajapriya9892
@rajapriya9892 3 жыл бұрын
Amma neenga kodukura thagaval enaku manam nimmathiyaga iruku amma nanri amma neenga first thanjavur mavattam neiveli gramathil vanthinga engaluku anandam
@KarthiKeyan-xu6id
@KarthiKeyan-xu6id 3 жыл бұрын
Thank for information Amma
@Sastidesignerworks14
@Sastidesignerworks14 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr 3 жыл бұрын
சூப்பர் mam அருமையான பதிவு 🙏🙏🙏நன்றிகள் கோடி 🙏🙏🙏
@eanitha2231
@eanitha2231 3 жыл бұрын
Thankyou mam excellent speech and explanation
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
நான் விருச்சிக ராசி. ஏழரைச்சனி முடியப்போகிறது. நிறைய மனசஞ்சலங்கள்,குழப்பங்கள் என பலவற்றை அனுபவித்தேன்.அதே சமயம் நிறைய அனுபவங்களும் கிடைத்தது. நான் துன்பத்தில் இருந்தபோது நான் சிவபுராணம், கோளாறு பதிகம் ஆகிய இரண்டையும் படிப்பேன். அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தது. நான் தொடர்ந்து பலமுறை தற்போது படிக்கத்தொடங்கிவிட்டேன்.எந்த பரிகாரம் எதுவும் செய்ய தேவையில்லை. என் அனுபவத்தில் கண்ட உண்மை.ௐ நம சிவாய🙏
@rajkumarannamalai6744
@rajkumarannamalai6744 3 жыл бұрын
ஓம் நமசிவாய..!!
@mahalakshmishanker4486
@mahalakshmishanker4486 3 жыл бұрын
உண்மை தான் அம்மா 🙄 நன்றி அம்மா 🙏
@s.ramachandran6276
@s.ramachandran6276 3 жыл бұрын
கார்த்திகை தீபம் அன்று நீங்கள் குறிப்பிட்ட அனைத்து விசையங்களையும் கடைபிடித்து தோம் அதே போல் திருவாதிரை விரதங்களையும் கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kothaiyarasikothaiyarasi2737
@kothaiyarasikothaiyarasi2737 3 жыл бұрын
நன்றி அம்மா
@loganathans7733
@loganathans7733 3 жыл бұрын
Nandri amma .ponnaana vaarthaigal.sirapu amma
@kalam5460
@kalam5460 3 жыл бұрын
Nandri amma nan ungala oru murayavathu pakanum
@vasankrish
@vasankrish 3 жыл бұрын
அருமையான பதிவு🙏🙏
@funguys1632
@funguys1632 3 жыл бұрын
Romba. Nandri. Amma
@kruba444
@kruba444 2 жыл бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி🙏🙏🙏
@rajalakshmi605
@rajalakshmi605 3 жыл бұрын
தெய்வமே மிக்க நன்றி..
@baskaranvaradhan2369
@baskaranvaradhan2369 3 жыл бұрын
வணக்கம் சகோதரி 🙏. எதார்த்தமான, தெளிவான, நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு கூறி இருக்கிறீர்கள். நல்ல பதிவு. மிக்க நன்றி 🙏.
@vignesh3101
@vignesh3101 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி அம்மா🙏🙏
@lakshmigurulakshmiguru3550
@lakshmigurulakshmiguru3550 8 ай бұрын
கோவிலில் எப்படி வழிபாடு செய்வது என்பது நன்றாக விளக்கினீர்கள்
@niveshprathap.p8951
@niveshprathap.p8951 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏அருமையான பதிவு அம்மா🙏
@ananthiraja3913
@ananthiraja3913 2 жыл бұрын
Murugan anna
@annapooranichandran8293
@annapooranichandran8293 3 жыл бұрын
அருமை மங்கை மா 🥀🥀🥀🌹🌹
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's heart's only.
@indrapriya1114
@indrapriya1114 3 жыл бұрын
மிக்க மிக்க நன்றிங்க அம்மா... லவ் யூ அம்மா...🙏🙏🙏🙏🙏💝😘
@rajagopalanmanoharan2380
@rajagopalanmanoharan2380 3 жыл бұрын
I heard for your good information regarding sanipayarchi Valgha valamudan desa mangayakkarasi R.manoharan
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏
@mrmuru605
@mrmuru605 3 жыл бұрын
AANMEGA AMMAVUKU NAMASKARAM. MIGA SEERAPAGA ARIVURAI. MIKKA NANDRI. Very rationally explained Amma. Thank you. Will share in our temple group.
@gunaram8318
@gunaram8318 3 жыл бұрын
Thank you amma unga voice keatalea thairiyam athigama iruku ma
@KSP87
@KSP87 3 жыл бұрын
நன்றி அம்மா.I Like yourself
@rajsangeetharajkumar907
@rajsangeetharajkumar907 3 жыл бұрын
Thank you ma...vaalga valamudan..
@kiruthikaashok8868
@kiruthikaashok8868 3 жыл бұрын
Ungal padhive super
@gayathris9292
@gayathris9292 3 жыл бұрын
நன்றி அம்மா🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@layasri2769
@layasri2769 3 жыл бұрын
Ungalai parkum pothu mahalakshmi parpathu pol ullathu Amma
@gowthamraj8039
@gowthamraj8039 3 жыл бұрын
Amma unga ovoru pathivilum oru karuthu enaku payanullatha eruku nandri ma
@dhanu208
@dhanu208 3 жыл бұрын
Rombaa Nandri...always u share positivity _/\_
@nathanmiru
@nathanmiru 3 жыл бұрын
நன்றி அம்மா ஒரு தெளிவு கிட்டியது.🙏🙏🙏
@dhavaselvi7565
@dhavaselvi7565 3 жыл бұрын
Amma nee pesum varthagal arumai♥️♥️♥️♥️♥️
@thilagavathithilaga7924
@thilagavathithilaga7924 3 жыл бұрын
Yethanai arumai.
@sivathaths6309
@sivathaths6309 3 жыл бұрын
Supper maa வாழ்க வளமுடன்
@suriyasuriya6557
@suriyasuriya6557 3 жыл бұрын
Guru saranam Thanku Mam 🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Anywhere and everywhere,NO 2G 3G OR 4G BUT ONLY SHIV G IN the world.
@kalidass1222
@kalidass1222 3 жыл бұрын
முருகன் 😁கோயில்ல 😂நீங்கள் எனக்கு 😀யந்திரம😇் 🤗கொடுப்பது 😀போல வந்நிங்க என் கனவில😊
@abarnap9804
@abarnap9804 3 жыл бұрын
Thelivu kitaithathu tq mam🙏🙏👏👏👌👌👍👍
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
மிகவும் நன்றி 🙏 வணக்கம்
@lakshmivijaya8816
@lakshmivijaya8816 3 жыл бұрын
மிக்க நன்றி தோழி
@lakshmimuthu3483
@lakshmimuthu3483 3 жыл бұрын
நன்றி சகோதரி
@kasthurie2230
@kasthurie2230 3 жыл бұрын
கோடானக்கோடி நன்றிகள் அம்மா!!!
@sathanamediaoff
@sathanamediaoff 3 жыл бұрын
Mam..Please make a video on"how to celebrate pongal traditionally?"
@priyakarthi2115
@priyakarthi2115 3 жыл бұрын
Amma super Amma😍u r a legendary
@mohanapriya4645
@mohanapriya4645 3 жыл бұрын
Mikka nandri guru amma positive ana energy unga speechla ,guru vara vanakam🙏
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@marimuthumarimuthu9145
@marimuthumarimuthu9145 3 жыл бұрын
மிக்க நன்றி
@gayathrigayathri8369
@gayathrigayathri8369 3 жыл бұрын
நன்றி
@p.mariappanparumal7705
@p.mariappanparumal7705 3 жыл бұрын
அவன் வயது 20 அம்மா...உங்களது பதிலை எதிர்பார்த்துக்கொண்டே ஆவலுடன் உள்ளேன் அம்மா
@nithyanperumal1233
@nithyanperumal1233 3 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா.
@ranjanamala
@ranjanamala 3 жыл бұрын
Nandri amma vazhga valamudan amma💐💐💐💐🙏
@mathu9381
@mathu9381 3 жыл бұрын
Hi. அக்கா. Advance happy New Year
@nalinimudaliar1156
@nalinimudaliar1156 3 жыл бұрын
Sweet voice amma Thanks
@nandhininandhini2015
@nandhininandhini2015 3 жыл бұрын
சரியான தகவல் அம்மா.மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏
@saranyak.saranya1292
@saranyak.saranya1292 3 жыл бұрын
Very useful mam thank you mam🙏
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 31 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 9 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Mithuna rasi - Sani peyarchi palangal 2023-25
20:12
KOVILGURUKKAL TV
Рет қаралды 119 М.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 31 МЛН