Рет қаралды 10,235
All Soul's Church Choir, Mullanvilai.
முகூர்த்த ஜெப கூட்டம் சிறப்பு பாடல்
சந்தோஷமாகவே நீ போய் வா
என் சகோதரியே சந்தோஷமாக போவாயே-(2)
1.எந்தை பரன் அருளால் என்றென்றும் நீ செழிக்க சந்ததம் வாழ்ந்திருப்பாயே
2.கோடான கோடியாய் நீ குவலயமேற்பெருகி நீடாயுள் பெற்றிருப்பாயே
3.சத்துருக்களை ஜெயித்து சந்ததியாய் ஜொலித்து இத்தரையில் வாழ்ந்திருப்பாயே
4.கர்த்தருக்குப் பயந்து காலங்களை கடத்தி உத்தம பெயர் எடுப்பாயே
5.சாந்தம் பொறுமை தயை சற்குணம் தானதர்மம் ஈந்து சுகித்திருப்பாயே
6.பக்தன் (மணமகன் பெயர்) அவர்களுக்கு பண்பாய் நீ கீழ்படிந்து நித்தியம் வாழ்ந்திருப்பாயே
7.தாதிமாரோடு உந்தன் சாமான்களை எடுத்து நீதியாய் போய் வருவாயே
8.இயேசு பரன் சுதன் தன் திருக்கரத்தால் உங்களை ஆசீர்வதிப்பாராகவே