சிவலிங்கம் இல்லாத சிவன் கோவில் | ஆவுடையார் கோவில் அதிசயங்கள் | Avudaiyar temple History

  Рет қаралды 492,200

Michi Network

Michi Network

Күн бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
Un Paatham Paninthom Official Tamil Devotional Video Song | Keshavraj Krishnan & Ramanan Rajendran
BGM Credits : Keshav Raj Krishnan
email. : kkeshavaraj@gmail.com
1100 ஆண்டுகளுக்கு முந்திய கோயில்
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோயில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.
தேரின் சிறப்பு
இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருவாரூர், திருநெல்வேலி, ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரியத் தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.
50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.
50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
கல்லோ - மரமோ - காண்போர் வியப்பர்
இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட கற்சிலைகள் இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும்போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும்.
வடக்கயிறு
இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும்.
உருவம் இல்லை - அருவம்தான்
தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும்.
பூத கணங்கள் கட்டிய கோயில்
ஆவுடையார் கோயிலை பூதகணங்கள் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கை
கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.
ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.
திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.
ஒரே கல்லிலான கற்சங்கிலி
கல் வளையங்களாலான சங்கிலி
இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.
மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்
இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது.
உருவம் இல்லை
கொடி மரம் இல்லை
பலி பீடம் இல்லை
நந்தி இல்லை
இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை.
படைகல்
இங்கே மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்திலே படைகல் என்கிற ஒரு திட்டுக்கல் இருக்கிறது. இந்தத் திட்டுக்கல் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறைக்கல்லாகும். இந்தத் திட்டுக்கல்லில்தான் 6 கால பூசைகளுக்கும் உரிய அமுதினை வடித்துப் படைத்து ஆற வைக்கிறார்கள்.

Пікірлер: 572
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 6 ай бұрын
ஏதேதோ வீடியோக்கள் போட்டு லைக்குகளை அள்ளுறாங்க. ஆனால் அற்புதமான இந்த காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி. விளக்கம் தந்த பெரியவர் சுவாமிகளுக்கு நமஸ்காரம்.
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
அன்பும் நன்றிகளும் 🙏❤️
@உலகமெங்கும்அன்பின்மொழி
@உலகமெங்கும்அன்பின்மொழி 6 ай бұрын
இந்த கோவில் எங்கே உள்ளது❓share this location pls
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை தமிழ்நாடு
@selviveerabagu2268
@selviveerabagu2268 4 ай бұрын
❤❤❤மிக்க நன்றி பெரியவரக்கு
@kaliyamurthyav6553
@kaliyamurthyav6553 4 ай бұрын
​@@MichiNetworkaaudaiyarkoil
@sampathkumar9572
@sampathkumar9572 6 ай бұрын
விளக்கம் கொடுத்த பெரிய ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணக்குகின்றேன் 🙏🙏🙏 ஐயா அவர்கள் நீண்ட காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ என் அப்பன் ஈசன் அருள் புரியவேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏
@hemalatha9245
@hemalatha9245 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@suriyakala-hm5pf
@suriyakala-hm5pf 4 ай бұрын
😅
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute 3 ай бұрын
Nalla manappaadam 😂
@varahiamma5129
@varahiamma5129 3 ай бұрын
அது சரி அந்தப் பெரியவர் காற்று எடுப்பவரை வா போ என்று ஒருமையில் அழைக்கிறாரே இது எப்படி மற்றபடி ஒரு விளக்கம் நன்றாகத்தான் இருக்கிறது
@ns10008
@ns10008 5 ай бұрын
மிகவும் பொறுமையாக விளக்கிய பெரியவர் குருக்கள் ஐயாவிற்கு எனது வணக்கங்கள். நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.
@thiruvasagam2849
@thiruvasagam2849 6 ай бұрын
நேரடியாக ஆலயத்திற்கு சென்று இருந்தாலும் இவ்வளவு தெளிவாக கண்டிருக்க முடியாது . பெரியவர் திரு ஜானகிராம் ஐயா அவர்களுக்கும் கானொலிகாட்சி எடுத்த சகோதரர் அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
Nandrigal ❤️
@shenbavalli
@shenbavalli 4 ай бұрын
உண்மைதான் நன்றி
@lathamuralidharan8959
@lathamuralidharan8959 2 ай бұрын
Mikka nanri iruvarukkum.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 29 күн бұрын
👏👏👏👍👍👍💪💪💪👌👌👌👌👌👌👌👌💐💐💐🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 29 күн бұрын
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺💐💐💐🏵🏵🌹🌹💥💥💥💥💥🙌🙌🙌🙌🙌🙌🙌
@udhayakumari2921
@udhayakumari2921 6 ай бұрын
அப்பா என்றாலே பெருமிதம் அப்பா பிறந்த ஊர் அதை விட சிறப்பு என்றும் தலை வணங்குகிறேன்.
@rammivenkat4175
@rammivenkat4175 6 ай бұрын
நேரில் சென்று பார்த்தே ஆகவேண்டும். ஆவலை தூண்டிய அய்யாவிற்கும் பதிவேற்றிய உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.❤❤
@moorthi6357
@moorthi6357 6 ай бұрын
இந்த தகவல் அனைத்தும் தெரிவித்ததற்கு அந்த தாத்தாவுக்கு மிகவும் இந்த இந்த சேனலுக்கு உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
❤️🙏
@SJayavijaya-ng7vp
@SJayavijaya-ng7vp 6 ай бұрын
அப்பப்பா.....எத்தனை சிறப்புகள்.கேட்க கேட்க மெய்சிலிர்க்கிறது. ஓம் நமசிவாய.
@SusilaSolai
@SusilaSolai 6 ай бұрын
மெய் மறந்தேன் இறைவா🙏 ஐயா அவர்களின் விளக்கம் அழகு இவற்றை செய்த சிற்பியின் பாதம் படிக்கிறேன்🙏🙏🙏👌
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
❤️🙏
@Danalakshmi-kc7ns
@Danalakshmi-kc7ns 7 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி
@dinakaranp8718
@dinakaranp8718 7 ай бұрын
வணக்கம் சகோ ஆவுடையார் கோயிலின் அழகிய சிற்பங்களையும் மாணிக்கவாசகரின் வரலாற்று சிறப்புகளும் ஐயாவின் வழிகாட்டுதலோடு தங்களின் படக்காட்சியின் வர்ணனையோடு சிற்பங்களின் அழகினை ரசிக்க வைத்தது மிக சிறப்பு. இதனுடன் யான் சிவத்திரு பாதத்தை பணிந்தோம் தங்களின் படக்காட்சி மூலம்
@padmap3082
@padmap3082 6 ай бұрын
எந்த கோவிலுக்கு போனாலும் அந்த கோவில் பற்றி தெரியாமல் வந்தோம் பார்த்தோம் என்று வந்து விடுகிறோம்.இந்த கோவிலில் இவ்வளவு விசயங்கள் இருக்கிறது.கோவிலை பற்றி விளக்கிய ஐயாவுக்கு நன்றி பல.
@licvadivel5111
@licvadivel5111 7 ай бұрын
உலகத்தின் மிகப்பெரிய பொக்கிஷம் மெய் மறந்து விட்டேன் நேரில் சென்று பார்க்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் babuji
@MichiNetwork
@MichiNetwork 7 ай бұрын
Nandrigal ❤️🙏
@natarajanvenkatesan9650
@natarajanvenkatesan9650 6 ай бұрын
​@@MichiNetwork13:46 lt
@nagarajvaithilingam7738
@nagarajvaithilingam7738 6 ай бұрын
Super
@subathrasuba3174
@subathrasuba3174 6 ай бұрын
Temple located place
@manim4705
@manim4705 6 ай бұрын
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டு ஆவுடையார் கோவில் பேருந்து கோவில் வாசலில் பஸ் நிறுத்தம்
@riosrinivasansrinivasan6392
@riosrinivasansrinivasan6392 5 ай бұрын
நான் இந்த கோவிலுக்கு சென்று உள்ளேன். பல வீடியோக்களும் பார்த்துள்ளேன். இப்பதிவிட்டவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இங்ஙனம் சிவன்னடிமை...
@MichiNetwork
@MichiNetwork 5 ай бұрын
அன்பும் நன்றிகளும் 🙏🩵
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 5 ай бұрын
இந்தியாவில் இந்துவாக பிறந்ததற்கு பெருமை படுகிறேன் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமை பட வேண்டும் ❤
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 29 күн бұрын
🙏🙏🙏🙏🙏💪💪💪👌👌👏👏💐💐💐💐
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 29 күн бұрын
@@vijayalakshmisridharan1065 🤝✨
@revathi48
@revathi48 6 ай бұрын
திரு ஆவுடையார் கோவில் சிற்பங்களும் பெரியவரின் வழிகாட்டுதலும் மிக மிக அற்புதம். பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத விவரங்கள். அருள்மிகு. மாணிக்க வாசக நாயனாரின். ஆன்மீக உழைப்பு. எல்லாமே அதிசயத்தில். ஆழ்த்துகின்றன. மிக மிக நன்றி பாபு.
@manoramu632
@manoramu632 5 ай бұрын
ஐயா 🙏🙏 உங்கள் திருவடிகளை வணங்குகிறேன். மெய் சிலிர்க்க வைத்தது உங்களுடைய வர்ணனை.
@jayalakshmiravikumar9951
@jayalakshmiravikumar9951 6 ай бұрын
வீடியோ எடுத்த விதம் அருமை அருமை.குருக்கள் அளித்த விளக்கம் அருமை குருக்களுக்குமம்
@samslessons4149
@samslessons4149 6 ай бұрын
சிவன் அருளால் இந்த பதிவை காண நேர்ந்தது. விரைவில் ஆலய தரிசனம் செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும்.‌ இப்பதிவை வெளியிட்ட தங்களுக்கும்‌ அருமையாக விளக்கம் தந்த பெரியாருக்கும் இறைவனுக்கும் கோடானுகோடி நன்றிகள்!
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@கிறிஸ்துவமுன்னேற்றகழகம்
@கிறிஸ்துவமுன்னேற்றகழகம் 6 ай бұрын
அருமையான பதிவு நான் எத்தனையோ முறை அந்த வழியாக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்று உள்ளேன், ஆனால் இன்று தான் இந்த கோயிலைப் பற்றிய பதிவு எனக்கு தெரியவந்துள்ளது இதற கான கிடைத்த இது காண அதிக பாக்கியமாக கருதுகிறேன் சிவனுக்கு நன்றி,
@ஆன்மீகஆனந்தம்-ள7ஞ
@ஆன்மீகஆனந்தம்-ள7ஞ 2 ай бұрын
ஐயா அவர்களின் ஆதாரபூர்வமான வர்ணனைகள் அருமையிலும் அருமை. தங்களின் இறை சேவை தொடர்ந்திட வாழ்த்தி வணங்குகிறேன் 🙏
@vasanthikailasam8990
@vasanthikailasam8990 6 ай бұрын
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் இறைவனை நேரில் கண்டேன் மனமிகசந்தோசமா உள்ளது👃👃👃👃
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
🩵🙏
@savithirip3333
@savithirip3333 6 ай бұрын
ஆவுடையார் தரிசனம் பெற ஆவல் கொண்டேன் ❤
@parivelmurugesan7016
@parivelmurugesan7016 6 ай бұрын
அருமை அருமை.... அதுவும் அந்த சிவன் பாடலுடன் தொடங்கும் ஒளிக்கோவை. பாடலின் தொனி மாறும் சமயம், ட்ரோன் ஷாட் அருமை.
@sandanadurair5862
@sandanadurair5862 6 ай бұрын
அற்புதமான பதிவு. கோவில் வழிகாட்டியவர் பல்லாண்டுகள் வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம்
@thalapathisankar7346
@thalapathisankar7346 6 ай бұрын
அருமையான பதிவு மெய் மறந்து பார்த்த ஒரு ஆலய வழிபாடு அருமையான விளக்கம் அந்த ஐய்யாவுக்கு மிகவும் நன்றி உங்கள் பதிவிற்கு நன்றி ஓம் நமச்சிவாய 🙏
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
🩵🙏
@SasiKala-vx2ql
@SasiKala-vx2ql 6 ай бұрын
ஐயா அருமையான விளக்கம் உங்கள் தன்னம்பிக்கையை என்ன வென்று சொல்ல உரிமையுடன் நகைச்சுவை கலந்த பேச்சி அருமை அருமை ஐயா
@kmcvk
@kmcvk 6 ай бұрын
ஆவுடையார் கோவில் அற்புதங்கள் ,அதிசயங்களை மிக தெளிவாக விளக்கிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
நன்றிகள் ஐயா ❤️
@jothimani2418
@jothimani2418 5 ай бұрын
தெளிவான விளக்கம் மிகவும் பிடித்திறக்கிறது நன்றி 🎉
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 6 ай бұрын
சிறப்பான பதிவு. அனைவரும் செல்ல வேண்டிய கோவில்.கோவில் சிற்பங்கள் கட்டிடக் கலை பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது . இக்கோவில் தமிழ்நாட்டின் பெருமை.மிகவும் சிறப்பான வீடியோ பதிவு.நல்ல முயற்சி.பாராட்டுகளுடன் நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
🩵🙏
@muruganandhammuthusamy1103
@muruganandhammuthusamy1103 6 ай бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள். அருமையான ஒளிப்பேழை. அண்டரன்டமாய் பறவையா.
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
❤️🙏
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 6 ай бұрын
நேற்று ஆவுடையார் கோயில் சென்று சுவாமி, சிற்பங்களை பார்க்கும் பேறு பெற்றேன் . அற்புதமான ஆலயம் .
@KanniyappanE-t6j
@KanniyappanE-t6j 2 ай бұрын
கோவில் எந்த ஊர்ல இருக்கு??
@narayanansy115
@narayanansy115 7 ай бұрын
மிச்சி பாபு, நீங்கள்தான் எங்கள் மாணிக்கவாசகர். சிவ தரிசனம் பெற பாண்டியனை மிஞ்சுவிட்டோம்.
@TamilselviArumugam-c7m
@TamilselviArumugam-c7m 6 ай бұрын
சகோதரா வீடியோ பதிவுகள் வேகமாக சென்றதால் நேரில் சென்று பார்த்த மாதிரி இல்லை ஆகவே சிறிது மெதுவாக வீடியோ காட்சிகள் பதிவு செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தகவல் கூறிய ஐயா பெரியவர் சிறப்பாக கூறினார் நம் சுமையை நாம் தான் சுமக்க வேண்டும் என்று கூறியது எவ்வளவு ஒரு தத்துவம் ❤
@rajak5248
@rajak5248 6 ай бұрын
ஆவுடையார் கோயிலின் சிறப்பு பெருமைகள் அனைத்தையும் மிக சிறப்பாக காணொளி மூலம் கண்டதிலே மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ஓம் நமசிவாய நான் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன் இவ்வளவு நிதானமாக இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த கோயிலை மீண்டும் ஒரு முறை நேரடியாக சென்று தரிசித்த மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது இதை விளக்கி சொன்ன அந்தப் பெரியவரின் திருவடியை வணங்கி மகிழ்ச்சி கொள்கிறேன் ஓம் நமசிவாய தங்கள் வீடியோவிற்கு மிக்க நன்றி இதுபோல் மேலும் நிறைய ஆலயங்கள் சென்று பதிவினை வெளியிடுங்கள்
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.. நிச்சயம் பல ஆலயங்கள் காணொளி பதிவு செய்கிறேன் ❤️🙏
@lakshmin4167
@lakshmin4167 6 ай бұрын
ஓம் நமசிவாயம்|நேரில் சென்று பார்த்தாலும் இவ்வளவு கூர்மையாக பார்த்திறுக்கமாட்டோம் மெய்மறந்து கோயிலின் உள்சென்று பார்த்த மாதிரி உள்ளது நன்றி-விவரித் அய்யா அவர்களுக்கும்/ தங்களுக்கும் நன்றி
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
அன்பும் நன்றிகளும் 🩵
@ramasamypalaniappan3966
@ramasamypalaniappan3966 Ай бұрын
True
@DhanasekarSekar-lb2wo
@DhanasekarSekar-lb2wo 6 ай бұрын
என்ன ஒரு அருமையான காணொளி சொல்ல வார்த்தைகளே இல்லை எல்லாம் எங்க அப்பனின் சிவனின் திருவிளையாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙌
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
Nandrigal ❤️❤️❤️
@sengamalankaruppiah6637
@sengamalankaruppiah6637 2 ай бұрын
மிக அருமையான காணொளிப்பதிவு . அற்புதமான விளக்கத்துடன். இந்த முயற்சிக்கு நன்றி!❤️❤️❤️👌👌👌🙏🙏🙏
@sarathimohan4696
@sarathimohan4696 7 ай бұрын
சார் உங்க வீடியோ எல்லாம் பார்த்துவிடுவேன் சாதாரணமா ஒரு சின்ன அர்த்தமில்லாத வீடியோவுக்கு வர வியூஸ் கூட இவ்வளவு துல்லியமா இவ்வளவு கேமரா டிரோன் கேமரா விசுவல் இவ்வளவு கிரேட்டா பண்ணியும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போனது வருத்தமாக இருக்கிறது. 🫂🫂 அண்ணாமலையார் உங்களுக்கு துணை இருப்பார் 🎉❤
@MichiNetwork
@MichiNetwork 7 ай бұрын
அர்தமில்லா வீடியோவில் கூட பல அர்த்தங்கள் ஒளிந்திருக்காலாம் ❤️🙏 அன்பும் நன்றிகளும் ❤️🙏
@srielectronics5996
@srielectronics5996 6 ай бұрын
போன் கேமரா டிரோன் கேமரா இல்லை
@kasthuriramathilagam8096
@kasthuriramathilagam8096 5 ай бұрын
🎉
@karthikeyan.r3482
@karthikeyan.r3482 6 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
@chitraharish1831
@chitraharish1831 7 ай бұрын
கோவில் தரிசனத்திற்கு நன்றிகள் பல கோடி.
@rajrathinampalaniswamy2458
@rajrathinampalaniswamy2458 10 күн бұрын
அருமையாகவும் அருளாலும் சொன்ன விளக்க உரை,இவர் சொன்னதால் தான் பெருமை புரிந்தது.மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@sathyakirshnamurthy6421
@sathyakirshnamurthy6421 4 ай бұрын
அழகாக எடுத்துரைத்த ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள்
@VedhaDme2323
@VedhaDme2323 3 ай бұрын
😊
@ravipalanisamy7556
@ravipalanisamy7556 6 ай бұрын
ஓம் சிவ சிவ ஓம் ,நேரில் சென்று தரிசனம் செய்தது போல இருந்தது உங்களின் பதிவு திரு பாபு ,அவர்களின் சிவப் பணி வாழ்க. ரவி மேட்டுப்பாளையம்
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@tharmalingam17
@tharmalingam17 4 ай бұрын
நமது பெருமையை உலகம் எங்கும் பறைசாற்றுவோம்❤❤❤❤❤
@kalyanisridharsridhar7225
@kalyanisridharsridhar7225 6 ай бұрын
மிக மிக அருமை ! தகவல்கள் அறிந்த ஐயர்களை பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்ட நிலையில் கோயிலின மூலை முடுக்கிட்கு எல்லாம் நம்மை அழைத்துச் சென்று அருமையாக விளக்குகிறார்! பக்தியிலும் தகவல்களிலும் மூழ்கித் திளைத்தோம்🙏🙏🙏
@ramakrishnanperumal3661
@ramakrishnanperumal3661 6 ай бұрын
ஆவுடையார் கோவிலின் அதிசயங்களை அழகாக கேட்போருக்கு புரியும் படியாக விளக்கம் அளித்த அய்யா அவர்களை மனமார பாராட்டுகிறேன்..நேரில் சந்திக்க ஆசை.. தேவகோட்டை ராமகிருஷ்ணன் ராணிஸ்நாக்ஸ்.......
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
❤️🙏
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy 6 ай бұрын
அழகிய கோயில். இதை இந்த ப்ராமணர் விவரித்தது மிக அற்புதம். ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@Ambu-w1y
@Ambu-w1y 5 ай бұрын
நன்றிகள் பல நாங்கள் விரைவில் செல்ல வேண்டும் அத்திருத்தலத்திற்கு...சிவ சிவ..
@gandhirajan5509
@gandhirajan5509 5 ай бұрын
மிகச்சிறப்பான தகவல்கள்! முழு கோவில்களில் உள்ள நுணுக்கங்கள் குறித்து விவரமாக யோசிக்காமல் விரைவாக விளக்கியுள்ளார். நன்றி
@MDeeparajaDeepa
@MDeeparajaDeepa 6 ай бұрын
அய்யா இவ்வளவு சிறப்பையும் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் சொன்னதற்கு என்னுடைய சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
❤️🙏
@MDeeparajaDeepa
@MDeeparajaDeepa 6 ай бұрын
நன்றி
@tseetharaman
@tseetharaman 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏 அற்புதக் கலை பொக்கிஷம். போற்றி பாதுகாக்க அந்த பரமனை அருள வேண்டும்🙏🙏🙏
@puviarasan2023
@puviarasan2023 6 ай бұрын
ஆலயம் குறித்து ஐயாவின் விளக்கம் மிகவும் அருமை..
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
❤️🙏
@anbuganesananbuganesan866
@anbuganesananbuganesan866 4 ай бұрын
அன்பே சிவம் இந்த அழகான பதிவிற்கு நன்றிகள் பெரியவர் சிற்பத்தின் பெருமைகளையும் அற்புதங்களையும் இன்றைய தலைமுறைக்கும் அல்லாமல் வருங்கால தலைமுறை இருக்கும் எடுத்துரைத்த அந்த உன்னதமான ஆத்மாவுக்கு கோடி நமஸ்காரங்கள் அன்பே சிவம்
@panchanathantambaram2001
@panchanathantambaram2001 3 ай бұрын
அற்புதமான விளக்கம். அரியபெரியபதொண்டை நிகழ்த்திய பெரியவரைவணங்குகிறேன்
@selvysritharan8529
@selvysritharan8529 26 күн бұрын
ஹரஹர மஹாதேவா. ஓம் நமசிவாய . மிகவும் சிறப்பான ஒளிப்பதிவினை தந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@Shanta-wf6kd
@Shanta-wf6kd 12 күн бұрын
🎉 ஆவுடையார் கோயில் சிறப்பு மிகவும் அருமை தாத்தாவுக்கு அநேக‌கோடி நமசகாரங்கள்‌
@thiyagarajanjaganathan6726
@thiyagarajanjaganathan6726 6 ай бұрын
நீண்டகாலமாக செல்ல நினைத்தேன் மிக்க நன்றி ஓம் நமசிவாய ஓம்💜✋
@mahimaheswari2079
@mahimaheswari2079 6 ай бұрын
மிகவும் நன்றி ஐயா🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@jayababu320
@jayababu320 6 ай бұрын
காணக்ககடைக்காத பொக்கிஷம் .காண கண் கோடி வேண்டும்.ஓம் நம சிவாய
@maramvettidevatactors4561
@maramvettidevatactors4561 4 ай бұрын
வெகு விரைவில் அந்த ஆலயத்தை சந்தித்து பார்க்க எனக்கு ஆண்டவன் எனக்கு அருள் புரிய வேண்டும்🙏🙏🙏
@rsvelu2129
@rsvelu2129 6 ай бұрын
மகிழ்ச்சி ஐயா நான் மூன்று ஆண்டுகள் முன்பு இங்கு இருக்கும் இறைவனை கானும் பாக்கியம் கிடைத்தது நாங்கள் ஐம்பது பேர் சென்றோம் ஐயா அவர்கள் தான் விளக்கினார் ஆனால் என்னுடன் வந்தவர்கள் இதை அனுபவிக்கவில்லை நான் இவற்றில் பாதி தான் அவரிடம் கேட்கும் கிடைத்தது நன்றி ஐயா
@ponnoliviswanathan6213
@ponnoliviswanathan6213 5 ай бұрын
ஆலயத்தையும் அதில் உள்ள தெய்வங்களையும் முறையாக பராமரிக்க அடியேனின் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.இவை அனைத்தும் காலத்தால் அழியாத பொக்கிஷம், பாதுகாப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை 🙏.
@sujathapadmanabhan5321
@sujathapadmanabhan5321 3 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@krishnaswamy5376
@krishnaswamy5376 6 ай бұрын
அருமை ஐயா.மிக்க மகிழ்ச்சி. நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
🙏❤️
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 3 ай бұрын
பெரியவாளுக்கு நன்றி. அருமையான பயனுள்ள பதிவு
@sameeantro8337
@sameeantro8337 3 ай бұрын
இவ்வளவு அழகான விளக்கம் கொடுத்து கோவிலின் சிறப்பு . நிழல் விழுந்து.சிற்பவகைகள் எடுத்து சொல்லி எங்களை மெய்சிலிர்க்க வைத்து கண்ணீரும் சுரந்தது ஐயா உங்களை சந்தித்து ஆசி வாங்கவேண்டும் . மாணிக்கவாசகர் மீண்டும் பிறப் பெடுத்து சிவன் திருவிளையாடல் தன் வாயில் கூறவேண்டும் என்று பிறப்பெடுத்தார்.
@vellingirithangamuthugound1117
@vellingirithangamuthugound1117 6 ай бұрын
ஆவுடையார் கோவில் அற்புதங்கள் ,அதிசயங்களை மிக தெளிவாக விளக்கிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நல்லமுடன் ஜெய் ஶ்ரீ ராம்
@nagarajannagarajan7369
@nagarajannagarajan7369 2 ай бұрын
ஐயாவுக்கு மிகவும் நன்றி மிகப்பெரிய பொக்கிஷமான கோயில் மாணிக்கவாசகரின் பாதம் பணிவோம் ஓம் நமசிவாய
@PackirisamyPackirisamy-o2g
@PackirisamyPackirisamy-o2g 3 ай бұрын
❤ அருமையான பதிவு அய்யா வாழ்த்துக்கள் நன்றி 🎉
@nithyapillai9903
@nithyapillai9903 6 ай бұрын
ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி ❤
@niranjan4698
@niranjan4698 6 ай бұрын
மெய்சிலிர்ந்தேன்
@ashoknatarajan7600
@ashoknatarajan7600 6 ай бұрын
Amazing . Thanks to Shri Janakiraman . People like him should be treasured and honoured
@mohanakothandan8762
@mohanakothandan8762 5 ай бұрын
Romba azaga explain panni erukkar ...kekkave romba santhoshama erukku superb
@சிவனும்நாமும்
@சிவனும்நாமும் 4 ай бұрын
உன் குடும்பம் நோய் இன்றி வாழ்க. வாழ்க.....
@RamSeetha-s8p
@RamSeetha-s8p 6 ай бұрын
❤ நன்றி கோடி கோடி நன்றி❤
@EssvariAI
@EssvariAI 6 ай бұрын
மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள், சகோ. Videography super 👌🏾👏🏾👏🏾👏🏾
@vijaytkpsirpi7947
@vijaytkpsirpi7947 6 ай бұрын
மிக அற்புதமான காட்சி காட்டியதற்கு நன்றி
@indramanikavasakam-hx8cn
@indramanikavasakam-hx8cn 3 ай бұрын
திருக்கோயிலின் ஒவ்வொரு சிற்பங்களின் விளக்கமும் கோயிலின் தொன்மையான சிறப்புக்களையும் பகுதி பகுதியாக டார்ச் லைட் ஒளியிலும் விளக்கிய ஐயா திரு.ஜானகிராம் அவர்களுக்கும், நேரில் சென்று சன்னதியின் தொன்மையை பதிவிறக்கிய சகோதரர்களுக்கும் கோடானுகோடி வணக்கங்கள்.மனநிறைவாய் இருந்தது.மிக்கநன்றி.
@MichiNetwork
@MichiNetwork 3 ай бұрын
Nandri Nandri 💜
@Umamaheshwari-bb5ik
@Umamaheshwari-bb5ik 3 ай бұрын
ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு ரொம்ப நன்றி
@umadevi8845
@umadevi8845 3 ай бұрын
பெரியவர் தரும் விளக்கம் அருமை அருமை காதில் பாய்ந்த தேன். ஒவ்வொரு வார்த்தையும் விளக்கம்.
@prabanjam1111
@prabanjam1111 6 ай бұрын
ஓம் நம சிவாய 🪷🙏🙏🙏🙏🙏🪷
@braja6399
@braja6399 7 ай бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா.ராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதுக்கு இதமாக ஒரு காணொளி கோவில் வழிகாட்டி ஐயா S..ஜானகிராமன் அவர்களின் விளக்கங்கள் அருமை உங்கள் ஆன்மீக பயணங்கள் தொடரட்டும் காரைக்குடி சுற்று வட்டாரங்களில் உள்ள திருத்தலங்களையும் காணொளியாக தரவும் என்றும் அன்புடன் தமிழன் பா. ராஜா 29.02.2024
@praneshmahesh-vu7hu
@praneshmahesh-vu7hu 4 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@muniasamysamy8014
@muniasamysamy8014 6 ай бұрын
ஓம்நாமசிவாயபோற்றி❤❤❤
@naveennaga679
@naveennaga679 2 ай бұрын
கோவிலின் சிறப்பை சிறப்பாக விளக்கம் அளித்த அறிவான பெரியவர்,
@PremalathaRao-g6l
@PremalathaRao-g6l 6 ай бұрын
really a great architecture. hats off to the grandpa who explained all details with superb clarity. long to visit the temple and pray.
@RemoNaidu
@RemoNaidu 5 ай бұрын
I can spend whole week in this temple 🙏🏻🌼🙏🏻
@sivalingam4858
@sivalingam4858 6 ай бұрын
மிகவும் அருமை. விளக்கம் கொடுத்த அய்யாவிற்கு நன்றி.
@kasturiswami784
@kasturiswami784 6 ай бұрын
This gentleman is full of information about this temple,amazing!
@sathyathanikachalam40
@sathyathanikachalam40 6 ай бұрын
திருபெருந்துறை இறைவா உங்களை காண மனம் ஏங்குகிறது
@nandhiniarul8440
@nandhiniarul8440 5 ай бұрын
S
@Ramesh.sPirama-in9yf
@Ramesh.sPirama-in9yf 5 ай бұрын
🙏👌OM NAMA SIVAYA TRIVANDRUM SUPER TEMPLE
@elakkiyaas5918
@elakkiyaas5918 3 күн бұрын
Kaanoliyai thanthavarukum atharku vilakam thanthavarkum "sollil adanga nandrigal"❤
@SabarishRithish-ic8hj
@SabarishRithish-ic8hj 5 ай бұрын
எந்த ஊரு எந்த மாவட்டம் சொல்லுங்க
@abhijiya8
@abhijiya8 4 ай бұрын
Pudukkottai
@kesavank5305
@kesavank5305 6 ай бұрын
மிகச் சிறப்பு அய்யா. மிக்க நன்றி.
@arunamoorthy
@arunamoorthy 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கோவில்
@MrParamashivan
@MrParamashivan 7 ай бұрын
Uzhaipu, bhakti, kalai..in loss of words ❤
@rl5914
@rl5914 6 ай бұрын
அருமையான வழிகாட்டி விளக்கம் 👏🏾👏🏾👏🏾👍🙏🙏🙏 நன்றி 🙏
@Alagarism
@Alagarism 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கோயில், நான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சென்று கடவுளின் அருள் பெற்று வருகிறேன்
@sreenevasaluperumal1252
@sreenevasaluperumal1252 6 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.
@kumudhaj5574
@kumudhaj5574 6 ай бұрын
Idhu varai oruvarum ungalai pol kovilai kanbithu vilakkam alithadhu illai neengalum indha kovilum irandara kalandhu irukkireergal mikka nandri ayya
@nithyakali8456
@nithyakali8456 5 ай бұрын
Mei silirkum arumaiyana video ❤❤❤❤❤om namasivaya
@ramahsridharen4331
@ramahsridharen4331 6 ай бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் ஓம்நமச்சிவாய🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@premimurugan
@premimurugan 4 ай бұрын
என் அப்பா ஈசனின் மகிமை.
@premimurugan
@premimurugan 4 ай бұрын
நான் உணர்ந்தேன் என் ஐயனை
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 66 МЛН
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 8 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 66 МЛН