ஐயா வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்களைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்... நீங்க ஏற்கனவே ஒரு வீடியோ போட்டு இருக்கீங்க... ஆனா அதில் சில புரியவில்லை... அதாவது எங்கெல்லாம் வல்லின எழுத்துகள் தோன்றும் தோன்றாது அதை வரிசைப்படுத்தி இந்த மாதிரி எடுத்துக்காட்டாக சொல்லுங்கள் (எ-கா) வல்லினம் மிகும் இடங்கள்: 1) இரண்டாம் வேற்றுமை 2) நான்காம் வேற்றுமை 3) உவமைத்தொகை 4) சுட்டு வினா சொல் மற்றும் வல்லினம் மிகா இடங்கள் அனைத்தையுமே வரிசைப்படுத்தி ஒரு வீடியோவாக போடுங்கள் ஐயா... வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்களில் மட்டுமே எனக்கு மயக்கம் தோன்றுகிறது...
@anbuarasar2199Ай бұрын
ஐயா வணக்கம்! எனக்கு ஒரு ஐயப்பாடு உள்ளது. அதனை தீர்த்து உதவுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் ...... சங்க இலக்கியத்தில் நிகழ்த்து கலைஞர்களின் வாழ்வியல்.... மேற்கண்ட இந்த இரண்டு சொற்றொடரில் எந்த சொற்றொடர் சரியானது?. சில தமிழாசிரியர்கள் முதல் சொற்றொடர் சரியானது என்றும், சிலர் இல்லை இரண்டாவது சொற்றொடர் தான் சரியானது என்றும் கூறுகிறார்கள். இதில் எது சரியானது என்று தெளிவுபடுத்துங்கள் ஐயா ! இங்கு ( நிகழ்த்துக் கலைஞர்கள்..... நிகழ்த்து கலைஞர்கள்..... ( க் ) என்ற ஒற்று மிகுமா மிகாதா..... இதற்கென இலக்கணத்தில் சிறப்பு விதி ஏதேனும் உள்ளதா ... விளக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்... நன்றி !!!!!
@kirankale408815 күн бұрын
வருமொழியில் நிகழ்த்து என்ற வார்த்தை வந்துள்ளது இது வன்தொடர் குற்றியலுகரம், இவ்வாறு வந்து வரும் மொழியில் க ச த ப என்று தொடங்கும் சொற்கள் வந்தால் அதுவும் பெயர்ச்சொல்லாக இருந்தால் ஒற்றுவரும்