அன்புள்ள கோபால்சாமி ராகவன் அவர்களுக்கு உங்கள் குழாயை இன்று தான் கண்டேன் . '' அழகு படுத்துவது ஆண்களைத் தான் '' - நல்ல சொற்றொடர் ! உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது ! தமிழுக்குக் கதி கம்பனும் திருவள்ளுவரும் தானே ! ராமன் ஒரு வடநாட்டு அரசன் தானே ! அவன் நிறம் சிவப்பாகவல்லவோ இருக்க வேண்டும் ! அவனுக்குக் கருமை நிறம் எப்படி வந்தது ? விளக்கத்தை எதிர் பார்க்கிறேன் . அன்புடன் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி தூத்துக்குடி
@gragavan12 жыл бұрын
ஐயா, நான் பிறந்த ஊரும் தூத்துக்குடிதான். :) அந்த ஊரிலிருந்து உங்கள் வாழ்த்து வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அன்புடன், ஜிரா
@gragavan12 жыл бұрын
கருத்துக்கும் வாழ்த்துக்கும் வணக்கங்களும் நன்றியும் :) வடநாட்டுக் கடவுள் கருப்பாக இருப்பதும் செந்தமிழ்த் தெய்வம் சிவந்திருப்பதும் ஆராயத்தக்கது :) கதைப்படியே என் கருத்தைச் சொல்லி விடுகிறேன். மால் என்னும் கடவுள் இறங்கி வருவதுதான் இராமன் கதை. பிறந்தவர்கள் இயல்பு முறையில் தயரதனுக்குப் பிறந்திருந்தால் செம்மையை எதிர்நோக்கலாம். பிள்ளைப்பேறு வேள்வி நடத்தில் கரியமாலே மகனாக வந்ததால் கரிய நிறம். வைணவம் தெற்கிலிருந்து வடக்கு சென்றது என்ற கருத்தும் உண்டல்லவா. மாயோன் கரியோனே அல்லவா. அன்புடன், ஜிரா
@sushimashekar868712 жыл бұрын
"அழகு" படுத்துவதை ஆண்களை தான், உணமை :-) இன்றும் எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன முறையில் தான் கண் மை செய்யப் படுகிறது :-) அஞ்சனா நிறம் என்று கருமை நிறத்தை சொல்வது அழகாக உள்ளது. சுனயினியின் மகள் சீதை! அழகிய கண்களை உடையவளின் மகளான சீதையின் கண்களோ கருப்பும் வெளுப்பும் கலந்தது. அதற்கு இன்னும் அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி :-) திருமாலின் கண்களில் சூரிய சந்திரர், இலக்குமியின் கண்களில் நஞ்சும் அமுதமும்! amas32