Рет қаралды 7,142
TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
KZbin / chefmadrasmurali
#CHEFMADRASMURALI/#Howtopreparekadarangapickle/#Kadarangapicklerecipeintamil/#கடாரங்காஊறுகாய்எப்படிசெய்வது/#கடாரங்காஊறுகாய்செய்முறை /#picklerecipe/#Kadaranga
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
கடாரங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருள்கள்
மஞ்சள் தூள் 2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
வெந்தயம் 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 65
காஷ்மீர் மிளகாய் 25
கல்லுப்பு 100 கிராம்
பெருங்காயத்தூள் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் 300ml
கடாரங்காய் 2
(சுமார் 1 1/2 கிலோ அளவு)
கடாரங்காய் ஊறுகாய் செய்முறை
முதலில் கடாரங்காய் வெட்டவேண்டும் உங்களுக்கு தேவையான அளவுக்கு வெட்டிக்கொள்ளவும் வெட்டும் பொழுது உப்பு மஞ்சள் பொடி போட்டு வெட்டவும் காரணம் கடாரங்காய் மீது சிறிது சிட்ரிக் ஆசிட் போன்ற திரவப் பொருள் இருக்கும் அது உப்பு போடாமல் வெட்டும் பொழுது கசப்பு ஏற்பட காரணமாக இருக்கும் ஆகவே உப்பு போட்டு மஞ்சள் பொடி போட்டு வெட்ட வேண்டும் இவ்வாறு வெட்டிய பிறகு சுமார் 15 நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் நன்றாக கடாரங்காய் ஊறி இருக்கும் பிறகு ஒரு கடாயில் வெந்தயத்தை போட்டு சிறிது சிவக்க வறுத்து ஆற வைத்து வீடியோவில் காண்பித்த முறையில் பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு காய்ந்த மிளகாய் (காரம் உங்களுக்கு தேவையான அளவு) 65 நம்பர்+25 நம்பர் காஷ்மீர் மிளகாய் இவற்றை சேர்த்து சிறிது வறுக்கவும் வறுக்கும் பொழுது எண்ணெய் ஊற்றக்கூடாது எண்ணெய் ஊற்றினால் மிளகாய் பவுடர் ஆக வராது ஆகவே எண்ணெய் ஊற்ற வேண்டாம் பிறகு எடுத்து பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு கடாயில் நல்லெண்ணெயை நன்றாக சூடு பண்ணி வைத்துக் கொள்ளவும் ஊறிய கடாரங்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மீது அரைத்த பவுடரை காரம் உங்களின் தேவைக்கு ஏற்ப போட்டுக் கொள்ளவும் பிறகு வெந்தயப்பொடி சேர்த்து கொள்ளவும் பிறகு பெருங்காயத்தூள் சேர்க்கவும் பிறகு சூடு பண்ணின நல்லெண்ணெய் மேலே ஊற்றவும் இப்பொழுது நன்றாக தல தலன்னு ஊறுகாய் ரெடியாக இருக்கும் பிறகு நன்றாக கரண்டியால் கிளறினால் வீடியோவில் காண்பித்த முறையில் வந்திருக்கு வேண்டும் இப்பொழுது சுவையான கடாரங்காய் ஊறுகாய் ரெடி
கடாரங்காய் ஊறுகாயில் வெந்தயப்பொடி அதிகமாக சேர்க்க வேண்டாம் காரணம் கடாரங்காய் சிறிது கசப்புத்தன்மை இருக்கும் ஆகவே அதிகமாக சேர்க்க வேண்டாம் அதே போல் ஒரு சில பேர் வெட்டி வைத்த கடாரங்காயை சூரிய ஒளியில் வைப்பார்கள் நான் அது போல் செய்யவில்லை உங்களுக்கு விருப்பம் என்றால் செய்து கொள்ளலாம்
கடாரங்காய் ஊறுகாய் எப்படி செய்வது
கடாரங்காய் ஊறுகாய் செய்முறை
How to prepare kadaranga pickle
How to make kadaranga pickle
Kadaranga pickle recipe in Tamil
Kadaranga Urgai eppadi seivathu
Kadaranga pickle preparation