கன ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை - Ghana jeevamirtham preperation

  Рет қаралды 156,556

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

5 жыл бұрын

#கன_ஜீவாமிர்தம்
கன ஜீவாமிர்தமானது ஜீவாமிர்தம் போன்றே திட நிலையில் உள்ள ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கி ஆகும்.அது நுண்ணுயிர்களை பெருக்கி மண்ணை வளப்படுத்தும். மேலும் கன ஜீவாமிர்தம் உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மூன்று விதமாக தயாரிக்கலாம்.
கன ஜீவாமிர்தம் 1
தேவையான பொருட்கள்
1. நாட்டு பசுவின் சாணம் 100 கிலோ
2. நாட்டு சர்க்கரை 1 கிலோ (ரசாயனம் கலக்காதது)
3. பயறு மாவு 1 கிலோ
(தட்டை பயறு, கொள்ளு, கொண்டைக் கடலை, உளுந்து, துவரை இதில் ஏதாவது ஒன்று)
4. காட்டின் அல்லது பண்ணையின் வரப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு.
தேவையான உபகரணங்கள்
~ தார்ப் பாய் 1 (20x20 அடி நீளம் அகலம் கொண்டது)
செய்முறை
நிழலில் ஒரு பெரிய தார்பாயை விரித்து அதில் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்பு இவற்றை கோபுரம் போல் குமித்து கோணிப்பை அல்லது துணியால் மூடி வைக்கவும். இவை தயாராக 2 நாட்கள் பிடிக்கும் குளிர்காலத்தில் நான்கு நாட்கள் பிடிக்கும். 48 மணிநேரத்திற்கு பின்பு இவற்றை ஈரம் காயும் வரை வெயிலில் நன்கு உலர்த்தி மர சுத்தியலால் தட்டி பொடியாக்கி பிறகு கோணிப்பையில் மூட்டை கட்டி நிழலில் பாதுகாத்து வைக்கவும்.
கவனிக்க வேண்டியவை
~ தயார் செய்யும் இடமும் மற்றும் பாதுகாத்து வைக்கும் இடம் நிழலாக இருக்க வேண்டும்
~ மழைநீர் தேங்காத இடமாக இருக்க வேண்டும்
~ சேமித்து வைக்கும் இடத்தின் கீழே கட்டை அல்லது வேலி கல் போட்டு அதன்மேல் அடுக்கவும்.
~ தரையின் ஈரம் மற்றும் சுவரின் ஈரம் படாமல் நெல் மூட்டை போன்று அடுக்க வேண்டும்
பயன்படுத்தும் முறை
~ ஒரு ஏக்கருக்கு 200 கிலோ அடி உரமாக பயன்படுத்தலாம்
~ காய்கறி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 400 கிலோ அடி உரமாக பயன் படுத்தலாம்
பயன்படுத்தும் காலம்
~ தயாரான கன ஜீவாமிர்தத்தை ஒரு வருடம் வரை நிழலில் வைத்து பயன் படுத்தலாம்
கன ஜீவாமிர்தம் 2
தேவையான பொருட்கள்
1. மக்கிய தொழு உரம் 200 கிலோ
2. ஜீவாமிர்தம் 20 லிட்டர்
தேவையான உபகரணங்கள்
 தார் பாய் 1 (20x20 அடி நீளம் அகலம் கொண்டது)
செய்முறை
நிழலில் ஒரு பெரிய தார் பாயை விரித்து அதில் தூளாக்கிய மக்கிய தொழு உரம் 200 கிலோவை பரப்பி அதன் மேல் 20 லிட்டர் ஜீவாமிர்தத்தை தெளித்து நன்றாக புட்டு மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். பின்பு இவற்றை கோபுரம் போல் குமித்து கோணிப்பை அல்லது துணியால் மூடி வைக்கவும் இவை தயாராக 2 நாட்கள் பிடிக்கும் குளிர்காலத்தில் நான்கு நாட்கள் பிடிக்கும். 48 மணிநேரத்திற்கு பின்பு இவற்றை ஈரம் காயும் வரை வெயிலில் நன்கு உலர்த்தி பின்பு மர சுத்தியலால் தட்டி பொடியாக்கி கோணிப்பையில் மூட்டை கட்டி நிழலில் பாதுகாத்து வைக்கவும்.
கவனிக்க வேண்டியவை
~ தயார் செய்யும் இடம் மற்றும் பாதுகாத்து வைக்கும் இடம் நிழலாக இருக்க வேண்டும்
~ மழைநீர் தேங்காத இடமாக இருக்க வேண்டும்
~ சேமித்து வைக்கும் இடத்தின் கீழே கட்டை அல்லது வேலி கல் போட்டு அதன்மேல் அடுக்கவும்.
~ தரையின் ஈரம் மற்றும் சுவரின் ஈரம் படாமல் நெல் மூட்டை போன்று அடுக்க வேண்டும்
பயன்படுத்தும் முறை
~ ஒரு ஏக்கருக்கு 200 கிலோ அடி உரமாக பயன்படுத்தலாம்
~ காய்கறி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 400 கிலோ அடி உரமாக பயன் படுத்தலாம்
பயன்படுத்தும் காலம்
~ தயாரான கன ஜீவாமிர்தத்தை ஒரு வருடம் வரை நிழலில் வைத்து பயன் படுத்தலாம்
கன ஜீவாமிர்தம் 3
தேவையான பொருட்கள்
1. கோபர் கேஸ் சிலர்ரி 200 கிலோ (சாண எரிவாயு கழிவு)
2. ஜீவாமிர்தம் 20 லிட்டர்
தேவையான உபகரணங்கள்
~ தார் பாய் 1 (20x20 அடி நீளம் அகலம் கொண்டது)
செய்முறை
சூரிய வெளிச்சத்தில் ஒரு பெரிய தார் பாயை விரித்து அதில் கோபர் கேஸ் சிலர்ரி 200 கிலோவை பரப்பி நன்றாக உலர்த்தி கொள்ளவும். பின்பு நிழலில் வைத்து அதன் மேல் 20 லிட்டர் ஜீவாமிர்தத்தை தெளித்து நன்றாக புட்டு மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். பின்பு இவற்றை கோபுரம் போல் குமித்து கோணிப்பை அல்லது துணியால் மூடி வைக்கவும் இவை தயாராக 2 நாட்கள் பிடிக்கும் குளிர்காலத்தில் நான்கு நாட்கள் பிடிக்கும். 48 மணிநேரத்திற்கு பின்பு இவற்றை ஈரம் காயும் வரை வெயிலில் நன்கு உலர்த்தி பின்பு மர சுத்தியலால் தட்டி பொடியாக்கி பிறகு கோணிப்பையில் மூட்டை கட்டி நிழலில் பாதுகாத்து வைக்கவும்.
கவனிக்க வேண்டியவை
~ தயார் செய்யும் இடம் மற்றும் பாதுகாத்து வைக்கும் இடம் நிழலாக இருக்க வேண்டும்
~ மழைநீர் தேங்காத இடமாக இருக்க வேண்டும்
~ சேமித்து வைக்கும் இடத்தின் கீழே கட்டை அல்லது வேலி கல் போட்டு அதன்மேல் அடுக்கவும்.
~ தரையின் ஈரம் மற்றும் சுவரின் ஈரம் படாமல் நெல் மூட்டை போன்று அடுக்க வேண்டும்
பயன்படுத்தும் முறை
~ ஒரு ஏக்கருக்கு 200 கிலோ அடி உரமாக பயன்படுத்தலாம்
~ காய்கறி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 400 கிலோ அடி உரமாக பயன் படுத்தலாம்
பயன்படுத்தும் காலம்
~ தயாரான கன ஜீவாமிர்தத்தை ஒரு வருடம் வரை நிழலில் வைத்து பயன் படுத்தலாம்
---
Click here to subscribe for Isha Agro Movement latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement

Пікірлер: 35
@arjunanmurugan6671
@arjunanmurugan6671 3 жыл бұрын
பயனுள்ள பதிவு! வாழ்க நூறாண்டு
@ungaljmk6229
@ungaljmk6229 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு 💐வளர்க்க தங்கள் தொண்டு 🙏
@Passion_Garden
@Passion_Garden 3 жыл бұрын
Useful tips sir 👍👌🏻👏
@rajivrathinavelu5894
@rajivrathinavelu5894 Жыл бұрын
Wow wow wow 👌 Fantastic video. Thank you so much sir 🤩
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
Most welcome
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n Жыл бұрын
எரு என்பது ஆட்டு எரு உபயோகம் செய்யலாமா, எத்தனை வருட பழைய எரு பயன் படுத்தலாம்.
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
Amazing video. I have made 1st method. Just 1month before but not yet applied because it is raining in kerala. I will try to make 2and method also. Thanks for sharing the video.
@mrindian8
@mrindian8 2 жыл бұрын
have you applied it sister? share us the results and your opinion
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
@@mrindian8 sir, I have used the 1st method by adding to soil mix. Plants are growing well.
@roshnivlogs
@roshnivlogs 2 жыл бұрын
நன்றி ஐயா..
@jeyapaul1848
@jeyapaul1848 Жыл бұрын
நன்றி நண்பரே அன்பு❤️😘
@dannykristen4525
@dannykristen4525 3 жыл бұрын
Anna Maadi thottathil eppadi payanpaduthalaam?
@rajusridhar9799
@rajusridhar9799 2 жыл бұрын
நன்றி
@murukanvalli464
@murukanvalli464 3 жыл бұрын
Thank you
@saravanakumar0007
@saravanakumar0007 3 жыл бұрын
Poochi marunthu enna pannuvathu
@durgadevi1039
@durgadevi1039 2 жыл бұрын
What's Payir powder
@cakamaleshk3961
@cakamaleshk3961 2 жыл бұрын
Iyya idhunala kalaigal athigam varuma ?
@saravanakumar0007
@saravanakumar0007 3 жыл бұрын
Kuruthu poochi enna solutions
@kowsalyan4409
@kowsalyan4409 3 жыл бұрын
Sir itha land le pottutu irrigation eppe pannanum
@gayathirijeya6314
@gayathirijeya6314 3 жыл бұрын
👍👍 👌👌👌
@saralatr2207
@saralatr2207 4 ай бұрын
பயிர் மாவு என்றால் என்ன?
@krishbharathi2891
@krishbharathi2891 3 жыл бұрын
தென்னை மரத்திற்கு எப்படி இந்த உரத்தை ஈடுவது ஐயா....??
@SathishSathish-qt8il
@SathishSathish-qt8il 3 жыл бұрын
பயிர் மாவு என்றால் என்ன அண்ணன்
@tamilearasu343
@tamilearasu343 Жыл бұрын
என்ன மாவு
@aadhiseshaan7684
@aadhiseshaan7684 4 жыл бұрын
Payir maavu na
@Shahana_cooking_tamil
@Shahana_cooking_tamil 4 жыл бұрын
பயிர் மாவு என்ன மாவு
@jayasuryaa6473
@jayasuryaa6473 2 жыл бұрын
Pachai payaru mavu
@mokanathasarun2067
@mokanathasarun2067 3 жыл бұрын
பயிர் மாவு என்பது என்ன?
@chellama6132
@chellama6132 3 жыл бұрын
Enakum same doubt thaanga ..please explain here🙄
@dharunkm5617
@dharunkm5617 3 жыл бұрын
@@chellama6132 இரு வித்து தாவர மாவு dicot seeds la irundhu vara maavu ex:Kadala maavu,Pacha payir maavu,kollu maavu
@user-ze4fk7kh8n
@user-ze4fk7kh8n 2 жыл бұрын
Thank you sir.. my doubt also clear
@annaimangalamthozhirkoodam906
@annaimangalamthozhirkoodam906 3 жыл бұрын
ன்
@chitrabalusamy6160
@chitrabalusamy6160 2 жыл бұрын
பயிர் மாவு எப்படி தயார் செய்வது
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 2 жыл бұрын
தட்டை பயறு, கொள்ளு, பச்சை பயிறு ஏதேனும் ஒன்று வாங்கி அரைத்து கொள்ளவும்
@tamilearasu343
@tamilearasu343 Жыл бұрын
Mixe use pannalama
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...
13:07
Save Soil - Cauvery Calling
Рет қаралды 642 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 30 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 12 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை | Jeevamirtham making process
8:45
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 203 М.
வேப்பங்கொட்டைக் கரைசல்_Neem seed extract
5:10
Save Soil - Cauvery Calling
Рет қаралды 85 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 30 МЛН