Рет қаралды 59,327
JESUS MEETS MINISTRIES PRODUCTION © 2020
காலா காலமாய்
1. காலா காலமாய் நேசரென் இயேசுவே
ஞாலமகிலமும் உம் புகழ் சாற்றவே
கானக வழியதில் ஜீவ ஒளியாய்
காருண்யனே என்னையும்
கருத்தாய் காத்தீரன்ரோ
இயேசு நீர் எந்தன் பட்சமானதால்
எனக்கெதிராய் இருப்பவன் யார்? - 2
நல்லாயனும் நீரே
நல் நேயனும் நீரே
என் பாதைக் காட்டி காத்திடும்
என் தீபமும் நீரே
2. பாதை தவறியே மாய்ந்த எந்தனுக்காய்
பாதை சத்தியம் ஜீவனாய் உதித்தீர்
மன்னித்து மறந்தீர் என் பாவமனைத்தும்
மந்தையில் சேர்த்தார் என்றோ
தந்தையே உமக்கென் செய்வேன்
3. பொன்னும் வெள்ளியும் அக்கினி சூளையில்
புடமிட்டு சுத்தம் செய்திடுவது போல
உபத்திரவத்தின் குகையில் சோதித்தென்னை
உத்தமனாய் நிறுத்த தெரிந்தெடுத்தீரன்றோ
4. துரைத்தனம் அதிகாரம் வல்லமையும்
திருச்சபைக் கெதிராய் போராடிடுதே
திடனடைந்து தைரியமாய் போராடிட
ஆவியின் பெலனீந்திடும் உம்மோடு ஜெயம் பெறவே
5. உமக்கு பயந்து உம் நாமம் தியானிப்போரை
உமக்காய் சேர்த்திட நேசர் நீர் வருவீர்
உமது சம்பத்தை கடாட்சிக்கும் நாளில்
உம்மோடு இயேசுவே நான் சீயோனில் சேர்ந்திடுவேன்
For Prayers:
Ph: +91-9841252836
+91-7299546363
Email: gpsrobinson@hotmail.com
Website : www.gpsrobinson.org
Facebook : / gpsrobinson
To support our ministry:
GooglePay - 91-7305444836
Paytm: 91-9841252836