KAMSA SURA SAMHARANA - THARANGAM 11 - GITAM 104 : கம்ஸ்ஸுர ஸம்ஹரண - தரங்கம் 11 - கீதம் 104

  Рет қаралды 162

SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL

SRI KRISHNA LEELA THARANGAM - VARAGUR VASIGAL

Күн бұрын

This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N.
In this Taranga Gita, Sri Sri Sri Narayana Theertha Swamigal has wonderfully explained and sung that he learnt 64 arts in 64 days from the Supreme Personality of Godhead, Sri Krishna from Shandeepini Munivar.
Sri Sri Sri Sri Narayana Theertha Swami has explained and sung as mentioned in the Bhagavata that after the end of Gurukala vasam, his Guru Shandeepini Munivar requested Sri Krishna to bring back his dead son from Yama Loka as a living form as Guru Dakshana
Sri Sri Sri Narayana Theertha Swamigal has wonderfully sung in this Tharanga Geeta that while searching for his Guru Putra, he fought with the demon pancha Jana with the help of Samudra Raja and took his Shankam Panchajanya and went to the Yama Loka called Samyamani and prayed to Yama Dharma Raja to give him his Guru Putra. .
Let us daily worship and worship the Supreme Lord Shri Krishna who gave us the most powerful Panchajanya
SARVAM SRI KRISHNARPANAMASTU
இந்த தரங்க கீதத்தில் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் பரம புருஷனான ஶ்ரீ கிருஷ்ணர் ஷாந்தீபிணி முனிவரிடம் 64 கலைகளை 64 நாட்களில் கற்றுக்கொண்டதை மிக அற்புதமாக விளக்கி பாடியிருப்பது சிறப்பான அம்சமாகும்.
குருகுல வாசம் முடிந்தபின் தனது குரு ஷாந்தீபிணி முனிவர் அவர்களுக்கு குரு தக்ஷணையாக அவரது இறந்த புத்திரனை யம லோகத்திலிருந்து ஜீவ ரூபமாக அழைத்து வந்து கொடுத்ததாக ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் பாகவதத்தில் குறிப்பிட்டுள்ளது போலவே விளக்கி பாடியுள்ளார்.
தனது குரு புத்திரனைத் தேடும் போது சமுத்திர ராஜன் உதவியுடன் பாஞ்சஜனன் என்ற அரக்கனுடன் போராடி அவனுடைய பாஞ்ச ஜன்யம் என்ற சங்கத்தை எடுத்துக்கொண்டு சம்யமணி என்ற யம லோகம் சென்று அதனை முழக்கி யம தர்ம ராஜாவிடம் தனது குரு புத்ரனை தருமாறு விண்ணப்பித்து குரு புத்திரனை அழைத்து வந்து கொடுத்ததாக ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் இந்த தரங்க கீதத்தில் அற்புதமாக பாடியுள்ளார்.
மிக சக்தி வாய்ந்த பாஞ்ச ஜன்யம் என்ற சங்கத்தை நமக்கு கொடுத்த பரம பருஷனான ஶ்ரீ கிருஷ்ணரை அனுதினமும் வணங்கி வழிபடுவோமாக!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து

Пікірлер: 4
@kamakodimuthukrishnan2816
@kamakodimuthukrishnan2816 4 күн бұрын
கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
@vijayas5510
@vijayas5510 4 күн бұрын
Simple and sweet explanation. Radhekrishna.
@rangaprasad336
@rangaprasad336 Күн бұрын
Radhe krishna 🙏🙏 contd.. 🙏🙏 கீதம் 104 இந்த கீதமானது கண்ணனுடன் கல்வி கற்ற மற்ற மாணவர்கள், ஸ்ரீ க்ருஷ்ணனை புகழ்ந்து பாடியதாக ஸ்ரீ தீர்த்தர் கூறி இருக்கிறார். இந்த கீதத்தின் முதல் சரணத்திற்கு விளக்கம் கொடுக்கும் போது, அதில் வரும் “புராண புருஷோத்தம” என்ற பதத்திற்கு ஸ்ரீ பாகவதர் அவர்கள் ஸ்ரீமத் பகவத் கீதை 15 வது அத்யாயத்தில் புருஷோத்தம யோகம் பற்றி கூறியிருப்பதையும், பகவத் கீதை 10வது அத்யாயம் 15வது ஶ்லோகத்தில் பகவானின் திருவாக்கையும், ஸ்ரீமத் பாகவதம் முதல் ஸ்கந்தம், 2வது அத்யாயம், 11வது ஶ்லோகத்தையும் ஒப்பிட்டு சொல்லியும், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமங்களிலிருந்தும், குந்தி ஸ்துதியிலிருந்தும் பலவிதமான நாமங்களை சொல்லி விளக்கி இருப்பதும், “ஹம்ஸ யதீஶ்வர் ஶம்ஸித சரண” என்ற பத்த்திற்கு “ஸ்மர வாரம் வாரம்” என்ற ஸதாஶிவ ப்ரும்மேந்தர்ரின் கீர்த்தனையினை இசைத்து விளக்கியும் சொல்லி இருப்பதும், ஸனாதன க்ரந்தங்களில் இருக்கும் ஸ்ரீ பாகவதருடைய அபார ஞானத்தை எடுத்துக் காட்டுகிறது. [இந்த உபன்யாஸங்களுக்கு Bibliography எழுதலாம் என்று முயற்சி செய்தேன்- அது இந்த விமரிசனம் / உபன்யாஸத்தைவிட பெரிதாக இருக்கும் போலிருக்கிறது] இந்த கீதத்தின் இரண்டாவது சரணத்திற்கு விளக்கம் சொல்லும் போது, தஶமஸ்கந்தம் 45வது அத்யாயம் ஶ்லோகங்களை ஒப்பிட்டு விளக்கம் சொல்லி இருப்பதும் மிக அழகு. இதில் “அஞ்சித குருபுத்ர ஸஞ்ஜீவன கரண” என்ற பதத்திற்கு விளக்கம் சொல்லும் போது, அம்ருத ம்ருத்யுஞ்ஜய மந்த்ரத்தைப் பற்றியும் ஸம்புடிதமாக விளக்கி இருப்பது - ஸ்ரீ பாகவதருக்கு இருக்கும் மந்த்ர ஶாஸ்த்ர ஞானத்தினை காட்டுகிறது. மாதவ என்ற நாமத்திற்கு - मधु विद्यायां पति: माधव: / माया विद्यायां पति: - माधव: - என்று ஒரு அருமையான விளக்கத்தை கொடுத்து, ஸ்ரீ க்ருஷ்ணன் தன்னுடைய குருவின் இறந்த புத்திரனை மீட்டுக் கொடுத்ததால், இறந்தவரை உயிர்ப்பிக்கும் மது வித்யையில் தேர்ந்தவர் என்ற பொருள் படும்படி - माधव - என்ற நாமத்தை இங்கே உபயோகப் படுத்தி இருக்கிறார் - என்ற ஒரு அருமையான விளக்கத்தை கொடுத்து இருக்கிறார் ப்ரும்மஸ்ரீ பாகவதர் அவர்கள். இதில் 3வது சரணத்திற்கு விளக்கம் அளிக்கும் சமயம், வாசாமகோசர - என்ற பதத்திற்கு விளக்கம் அளிக்கும் போது, यतो वाचो निवर्तन्ते என்ற तैत्तिरीयोपनिषत् வாக்யங்கள் மூலம் அருமையாக விளக்கம் அளித்திருக்கிறார் ஸ்ரீ பாகவதர் அவர்கள். இதில் 4வது சரணத்தில் - வாரிஜ ஸம்பவ வந்தித பாதாப்ஜ - என்ற பதத்திற்கு விளக்கம் அளிக்கும் போது, விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் வரும் - पद्मनाभ - என்ற பதத்திற்கு - ஶங்கர பாஷ்யத்திலிருந்து ஸ்ரீ பாகவதர் விளக்கம் அளித்திருப்பதும், भूरिदयारस என்ற பதத்திற்கு जय जय रमानाथ - என்ற கீர்த்தனையிலிருந்து, - निरवधिक कारुण्य - என்ற பதத்தின் பொருளை ஒப்பிட்டு சொல்லி இருப்பதும் மிக அருமை. இந்த இடத்தில் நமது வரஹூர் பெருமாளைக் காட்டிலும் காருண்ய மூர்த்தி - உலகில் இல்லவே இல்லை - என்று ஸ்ரீ பாகவதர் உண்ர்ச்சி பெருக சொல்லி இருப்பதைக் கேட்கும் போது நமக்கே கண்களில் நீர் கசியத்தான் செய்கிறது. மற்றபடி 3வது சரணத்திற்கும், 4வது சரணத்திற்கும் ப்ரதிபதமாக சிறிய குழந்தைகளுக்கும் தெளிவாக புரியும் வண்ணம் மிக அழகாக பொருள் சொல்லி இந்த உபன்யாஸத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார் திருவையாறு ப்ரும்ம்ஸ்ரீ நடராஜ ஶர்மா அவர்கள். இந்த கீர்தனையை அருமையாக இசைத்திருக்கிறார், வரஹூர் ஹாலாஸ்யம் ஸ்ரீ ஶிவராஜ பாகவதர் அவர்கள். மொத்தத்தில் எப்போதும் போல இந்த வாரமும் ஒரு சிறந்த ஸமர்ப்பணம் வரஹூர் பெருமாளுக்கும் ஸ்ரீமன் நாராயண தீர்த்தருக்கும். 🙏 புனர் நமஸ்காரங்கள் 🙏 ராதே க்ருஷ்ண 🙏
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 476 М.
Kannadasan speech 1
23:01
YOGASUDAR WELLNESS NEUROTHERAPY
Рет қаралды 65 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН