உங்களுக்கு வணக்கம், பொதுவாக, கடவுளை யாரும் நேரில் பார்க்க இயலாது. கணமுடியாத அந்த கடவுள் தாமே, தம்மை மனுக்குலத்துக்கு வெளிப்படுத்தினாலொழிய அவரை பற்றி நாம் அறிமுடியாது. ஆகையால் கடவுள் ஒவ்வொரு தலைமுறையிலும் மானிடருக்கு தம்மையும் தமது வழிமுறைகளையும் வெளிப்படுத்த அல்லது அறிவிக்க ஒரு மனிதனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார். அந்த மனிதன் தீர்க்கதரிசி செய்தியாளன் என்று அழைக்கப்படுகிறான். ஆகையால், இந்த தலைமுறையில் தேவன் அனுப்பிய உயிருள்ள ஒரே மெய் தீர்க்கதரிசி என்று, நான் நம்புகிற மனிதர் தான், காக்குவ் பிலிப்பு. நீங்களும் அவரைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்று, நான் விரும்புகிறேன். இவர் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எழுபத்தி இரண்டாவது (1972) ஆண்டில், ஆப்பிரிக்காவிலுள்ள ஐவரி கோஸ்ட் எனும் நாட்டில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். கட்டுமான பணியிடங்களில் ஒரு தொழிலாழியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். இப்படியிருக்க, ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி மூன்றாம் (1993) ஆண்டில் ஒரு தெய்வீக தரிசனத்தின் மூலம், மனிதகுலத்திற்குத் தெரிவிக்கவேண்டிய ஒரு செய்தியானது, ஒரு தேவதூதனால் கடவுளிடமிருந்து இவருக்கு வழங்கப்பட்டது. இவர் இரண்டாயிரத்தி இரண்டாம் (2002) ஆண்டு முதற்கொண்டு அந்தச் செய்தியை உலகத்துக்கு அறிவித்து வருகிறார். இன்று காக்குவ் பிலிப்பின் செய்தி, தமிழ் உட்பட நாற்பத்து நாலுக்கும் (44) மேற்பட்ட மொழிகளில், இலவசமாக, படிக்கவும் கேட்கவும் கிடைக்கிறது. நான், இரண்டாயிரத்திப் பதினைந்தாம் (2015) ஆண்டில், இணையத்தில், அவரது செய்தியைக் கண்டு வாசித்தேன், பின்னர் நான் அதை நம்பினேன். சாதி, மதம், இனம், மொழி, நாடு என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல், அவர் பூமியில் வசிக்கும் அனைவருக்கும் தேவனின் வார்த்தைகளை அறிவிக்கிறார். தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான் (ரோமர் 3:29). அவரது செய்தியின் நூற்றி முப்பத்தி ஒன்பது (139), நூற்றி நாற்பது (140), நூற்றி நாற்ப்பத்தி ஒன்று (141) ஆகிய அத்தியாயங்கள், இக்காலத்தில் வாழும் இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும், கடவுள் கூறும் செய்தியாக உள்ளன. மேலும், பதிமூன்று (13), நூற்றி முப்பத்தி ஒன்று (131), நூற்றி முப்பத்தி ஆறு (136) ஆகிய அத்தியாயங்கள் இந்த தலைமுறையில் வாழும் முஸ்லிம்களுக்கான, இறைத் தூதாக உள்ளது. மேலும் கிறிஸ்த்துவம் மற்றும் யூதம் ஆகிய மதங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு, படிப்பதற்கும் கேட்பதற்கும் அவரது செய்தியில் வெவ்வேறு அத்தியாயங்கள் உள்ளன. நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர் அல்லவென்றாலும் இந்த செய்திகளை படிக்கலாம், ஆராயலாம். அண்ட சராசரங்களை படைத்த பரம்பொருளானவர், நாம் வாழும் இக்காலத்தில், அவரது படைப்புகளான நம்மிடம் பேச ஒரு மனிதனை அனுப்பியுள்ளார். நாம் அதை அசட்டை பண்ணாமல் அதற்கு செவிகொடுக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (அப்போ 13:41). மேலும், இது, இக்காலத்துக்கான கடவுளின் வார்த்தையாக, வேதமாக, இறைத்தூதாக, இருப்பதனால், இது நிச்சயமாக உங்கள் வாழ்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி, உங்களை படைத்த கடவுளுடன் உங்களை நெருங்க வைக்கும் என்பது உறுதி. இயேசு கிறிஸ்துவை தவிற பரலோகத்தில் வேறு தெய்வங்கள் இல்லை, இன்று காக்குவ் பிலிப்பை தவிற பூமியில் அவருக்கு வேறு தீர்க்கதரிசி செய்தாயாளர்களும் இல்லை. தீர்க்கதரிசி காக்குவ் பிலிப்பின் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் கூகிள் பிளே ஸ்டோரிலும் ஆப்பிள் ஸ்டோரிலும் Prophet Kacou Philippe Official என்ற, எளிய பயன்பாட்டில் இலவசமாக கிடைக்கின்றன. இந்த லிங்கை பயன்படுத்தி டவுன் லோடு செய்யலாம் Goo.gl/s1X3WY ஆகையால் இன்றே இந்த அப்ளிக்கேஷனை இன்ஸ்டால் செய்து செய்திகளை முழுவதும் வாசித்து, பின்னர் ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள். நன்றி!