Chellammal Manpaanai Samayal, Phone: 093612 37437 Address: 28, Officers Colony Road, opp. Government Hospital, Puthur, Thillai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620017. goo.gl/maps/zAdyBwmuNiEdPngu7 --------------- Our old video link on Chellammal Mannpaanai Unavagam: kzbin.info/www/bejne/j6DRdICVrtZqhqM
@chellammalmanpaanaisamayal82172 жыл бұрын
Thank you @Madras street food. Sharing about our efforts to produce the food on daily basis. Hope your support and encouragement will help us to grow more. Thank you once again
@madrasstreetfood2 жыл бұрын
@@chellammalmanpaanaisamayal8217 Thank you sir and mam
@kathiresannallaperumal43722 жыл бұрын
புதுமையில் பழைமை. தெளிவான விளக்கம்
@venuboopathy74602 жыл бұрын
00
@venuboopathy74602 жыл бұрын
00
@premkumar-xc7yy2 жыл бұрын
மிக நல்ல மனிதர். பேச்சில் உண்மை தெரிகிறது. உண்மை இருக்கும் இடத்தில் அன்பும் இனிமையும் சேர்ந்தே இருக்கும். அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி. உணவகம் நல்ல முறையில் முன்னேற வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்
@paulthangam.25642 жыл бұрын
கை தொடாமல் சமையல் செய்வது சாத்தியமில்லை. கைப் பக்குவம் என்பது சமையலுக்கு மிக மிக முக்கியம். கையால் செய்வது தான் சமையல். கரண்டியால் சாப்பிடுபவர்கள் இன்னொருவர் சாப்பிட்ட எச்சிலையும் சாப்பிடுவதைப் பார்க்கிறோம். தன் கையால் சாப்பிடுபவர்கள் யார் வாய்க்குள் போனதையும் சாப்பிடுவதில்லை. இதில் எது நாகரீகம் என்று நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை. இது நன்றாகவும், இயற்கையாகவும் எந்திரத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பாராட்டுகள்.
@saipari29132 жыл бұрын
இன்னொரு கமல்ஹாசன் ஐயா நீங்கள்
@drhemmanthraj22152 жыл бұрын
தேவைக்காக வாழ்பவர்கள் vs ஆசைக்காக பிழைப்பவர்கள்! அறம் சார் வாணிபம்! எத்துணை ஆழமான புரிதல்! அழகான பதிவு நன்றி சகோ!
@arulkumar79082 жыл бұрын
Well said
@kabilankannan84412 жыл бұрын
உண்மை நண்பரே.... அறம் சார்ந்த வாழ்வியலின் வாணிபம் என்றும் அழகானவையே மனதுக்கு இதமும், அமைதியையும் தருபவையே, நீண்ட நாள் நீடித்து நிற்பவையே.....
@drhemmanthraj22152 жыл бұрын
@@kabilankannan8441 உண்மை தான்! நடைமுறையிலும் சாத்தியப்படக்கூடியதே என்பதற்கு உதாரணங்களும் உண்டு என்பதை அறிகையில் சற்றே திகைப்பும், மட்டற்ற மகிழ்ச்சியும்!
@karthikeyankrishnasami99252 жыл бұрын
Excellent explanations Sir, hats off 👌
@SureshSuresh-re6of2 жыл бұрын
Congrats Akka Anna 🤝💐👌
@muthukumarandhiraviyam2 жыл бұрын
வாழ்வில் ஒரு நாளாவது இந்த உணவகத்தில் உணவு உண்ண வேண்டும்
@karthikeyankrishnasami99252 жыл бұрын
சகோ, வாழ்க்கையில் இந்த மாதிரி உணவு செய்து வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும்.
@yasoy67222 жыл бұрын
Sir unga vitleyum ipadadidana
@rskkrs98802 жыл бұрын
Come and try bro Nala irkum... Arokiyayum kudave kedaikum....
@movieaddiction38132 жыл бұрын
Poi sapdu
@geethamanij65712 жыл бұрын
nanum idai than nenaithen
@pnrao312 жыл бұрын
நல்ல நோக்கம் அவரின் உயர்ந்த எண்ணம் , சத்தான உணவு கொடுத்து மக்களுக்கு சேவை செய்யும் இவர் மற்றும் இவருடன் சேவை செய்யும் ஒவ்வொருவரும் எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.... இந்த பதிவை பார்த்து இதை போன்ற பல உணவகங்கள் நம் தமிழ்நாட்டில் வரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிறது... MSFயின் தேடல் மெய் சிலிர்க்க வைக்கிறது....... உங்கள் பதிவால் உணவை பற்றி பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது... உங்கள் பதிவுகள் மேலும் மேலும் வர வேண்டும்.... ஐயா அவர்கள் பல நல்ல கருத்துக்களை இதில் பகிர்ந்து உள்ளார்... அவர்கள் மேலும் மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறோம்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriiamma-69592 жыл бұрын
அறம் சார்ந்த வணிகம் என்றாலும் இலாபம் மிக குறைவு தான்.. ஐயா பேசியதை கேட்க இங்கு பலருக்கும் பொறுமை இல்லை 🙅... ஆனால் உணவைபற்றிய உண்மைகள் நிதர்சனமானவைகள்..🙏 வரும் காலம் இதை உணர்த்தும் பலருக்கும்..
@vijaysarathi83672 жыл бұрын
18.25 “அவர்கள் தேவைகளுக்காக வாழ்பவர்கள் , நாம் ஆசைகளுக்காக பிழைப்பவர்கள் ஆகிவிட்டோம் “ அருமையான சொற்றொடர் 👌👌👌👌👌🙏🏽🙏🏽🙏🏽👍👍👍👍 அறச்சிந்தனையுடன் கூடிய உணவகம் ,திருச்சிராப்பள்ளி வாழ் மக்கள் பாக்கியசாலிகள் 😊😊
@raj.pkumar93352 жыл бұрын
மொபைல் வாங்கினதுல இருந்து நான் ஒரு 20நிமிஷம் கட் பண்ணாம பார்த்த வீடியோ இது தான் , நல்ல வீடியோவும் கூட மிக்க நன்றி
@karthikeyanp9705 Жыл бұрын
நன்றி 🎉
@vas3472 жыл бұрын
ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இன்றைய அவசரகாலத்தில் உணவு என்றொரு பேரிலே நாம் எதை எதையோ உண்டு வருகிறோம். அதனால் நமது ஆரோக்கியமான உடலை மெல்ல மெல்ல நாமே கெடுத்துவிட்டோம். ஐயா வின் உணவகத்தில் பாரம்பரிய மாக இயற்கையாக தயாரித்து பரிமாறுகின்ற உணவுகள். உடலுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காது. இது இருநூறு சதவீதம் உன்மையே. வாழ்த்துக்கள் 👏👏👏நன்றி🙏🙏
@chitrakala25032 жыл бұрын
அவரின் வார்த்தைகள் சமையல் முறை உணவு பரிமாறும் விதம் அனைத்தும் அருமை அவரின் அறம் சார்ந்த இப்பணி மென் மேலும் தொடரட்டும் மக்கள் நலம் பெற 👏👏🤝
@kumaravelu60222 жыл бұрын
அருமையான பதிவு மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்ல மனிதர் திருச்சி செல்லும் போது கண்டிப்பாக அவரின் உணவகத்திற்கு செல்வேன்
@SK-ss2dg2 жыл бұрын
உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ங்க மோகன் ஐயா🙏🙏🙏
@indianbirdsakthi69082 жыл бұрын
அருமையான பதிவு சார் இது போன்ற நல்ல ஆட்களை பார்க்கும் சமையலில் நாம் எவ்வளவு தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. அவர் சொன்னது உன்மை வழி காட்ட நல்ல முன்னோடிகள் இல்லை
@humanbeinghb38992 жыл бұрын
ஐயாவுக்கு வாழ்த்துகள்.நல்ல முன்னெடுப்பு..
@Appavumnanum61202 жыл бұрын
அய்யாவின் பேச்சும் விளக்கமும் மிக மிக அருமை 🙏
@kanushanalt5812 жыл бұрын
வணக்கம் ஐயா. உங்கள் வாயில் இருந்து உதிர்ந்த ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஆயிரம் அர்த்தமுள்ளது. இன்றைய சமுதாயத்தினர் மட்டுமல்ல அனைவருக்கும் இதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் அனைத்து கெட்டவைகளும் நம்மை விட்டு விலகும்.
@saravanasaravana83982 жыл бұрын
உங்களுடைய அறம் .சார்ந்தவர்த்தகம். அருமை இன்றைய காலத்தில் பணம் ஒரு குறிகோள் என நினைத்து உடம்புக்கு ஒத்துவராத உணவுகளை நமக்கு தருகிற இன்றைய சூழ்நிலையில் உங்கள் பதிவில் பார்த்தேன் எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது உங்கள் பேச்சுஅருமை அதவும் பெண்களே சமைத்து அவர்களே பருமாரும் வணிகம் நீங்கள் மட்டும்தான் நல்ல முயற்ச்சி வாழ்க வளமுடன்🙏💯👍👌
@vggopivijey9892 жыл бұрын
உணவில் அதிகமாகச் அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது திருச்சி வரும் போது உணவிற்காக செல்ல இவர்கள் கடை உள்ளது சிறப்பு
@mahamahalakshmi4402 жыл бұрын
ஆரோக்கியம் மட்டும் நினைத்து உணவு சமைத்து கொடுக்கிறீர்கள் ரொம்ப நன்றி ஐயா 🙏🏾
@parthibansargunam16362 жыл бұрын
யாரு சார் இந்த ஐயா உண்மைய இவ்ளோ எளிமையா விளக்குறாரு. இவர் ஒரு பொக்கிஷம் பாதுகாப்போம்.....
@balarajasekaran702 жыл бұрын
One of the best speech about food I ever seen. அறம் சார் வணிகம். 😍
@shivabhakth072 жыл бұрын
The owner is so knowledgeable....we need more people like you sir who never think about money only but health too
@vijayaramgoldem199 Жыл бұрын
Nice
@hemavathivenkatesan91392 жыл бұрын
Great sir.this is how tradition and technology should join together..ஆரோக்கியம் சார்ந்த திருப்திக்காக செய்றோம்.இது தான் அறம்.பெண்களுக்கு முக்கியத்துவம்.. நீங்கள் ஆரோக்கியத்தை தருகிறீர்கள் ஐயா.. உங்கள் சேவை எங்களுக்கு தேவை. 🙏🏻
@gayathridevib43082 жыл бұрын
நவீன இயந்திரங்கள் கொண்டு பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் தங்களின் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது..🍃🍃
@umabala57462 жыл бұрын
சுத்தம் மற்றும் ஆரோக்கியம் என்பதற்கு சூப்பரான விளக்கம் கொடுத்தீர்கள். மனசாட்சி உள்ள உங்களைப் போன்றவர்கள் சாப்பாடு செய்பவர்கள் மிக சிலரே. fast food தேடிச்சென்று சில ஆயிரங்கள் செலவழித்தாலும் உடம்பிற்கு கேடே.உங்களுடைய சாப்பாடு சாப்பிட கொடுத்து வைக்கவேண்டும்👍👌👌🙏
@Myindia-mf5mf2 жыл бұрын
இந்த காலா மக்களுக்காக இறைவன் படைத்த ஒரு நல்ல மனிதர் எல்லோரும் நல்லா இருக்கட்டும் என்று நினைக்கிறார் வாழ்க இவர் தொண்டு நன்றி வணக்கம்
@chitrashankaralingam72982 жыл бұрын
ஐயா நீங்கள் பேசிய விதம் சொன்ன கருத்துக்கள் அருமை அருமை. உங்கள் சேவை இன்று மக்களுக்கு தேவை. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@harishmedevis47752 жыл бұрын
சத்தியமாக உங்கள் நோக்கம் மிக உன்னதமான ஒன்று. அதை உங்கள் உயிரோட்டமான பேச்சில் உணர்கிறேன். வாணிபம், லாபம் மட்டுமே இலக்காக கொண்டு இயங்கும் இந்த பொருள் சார்ந்த வாழ்வியலில் இது போன்ற மரியாதைக்குரிய எண்ணங்கள் உள்ள நல் உள்ளங்கள் நிறைய தேவை. உங்கள் சேவை வெற்றி பெற மனமார ஆண்டவனை பிராத்திக்கிறேன் கண்டிப்பாக திருச்சி வருகையில் உங்கள் உணவகத்திற்கு வருவேன். உங்களை சந்திப்பதற்கான வாய்ப்பினை அந்த இயற்கை அன்னை வழங்கட்டும் 🙏🏽
@prasannakumarprasannakumar35952 жыл бұрын
அறம் சார்ந்த வாழ்க்கை... வேறு விளக்கம் வேண்டுமா!!!?தமிழனின் வாழ்வியல்🙏 வாழ்த்துக்கள் அருமையான பதிவு🌹
@kavinkumarponnusamy94302 жыл бұрын
அற்புதமான வார்த்தைகள், அழகான வரிகள், மிக தெளிவான கருத்துக்கள் ❤️ Thanks to MSF for identify and project such person to this world.. keep this gud work.. 😭
@S.e.m.m.a2 жыл бұрын
அருமையான பதிவு.பாரம்பரியம் எப்பொழுதும் ஆரோக்கிய வாழ்வு தரும்.msf😍😍
@lakshmidinesh90882 жыл бұрын
அறம் சார்ந்த வணிகம், அறம் சார்ந்த வாழ்க்கை, அறம் சார்ந்த தொழில்... அஹா வாழ்க்கை பாடம்... வாழ்க வளமுடன் 💐🙏🏻
@kannanpalani51692 жыл бұрын
வாழ்கையின் எதார்த்தமான பல நல்ல விசயங்களை உணவு பரிமாறுவது போல் எங்களுக்கு வாரி வழங்கி உள்ளீர்கள் மிக்க நன்றி...
@durairaj77432 жыл бұрын
உங்களுடைய உண்மையான உழைப்பு அறம் சார்ந்த இத்தொழிலில் அறத்துடன் அறுசுவை வழங்ஙகுவதற்கும் வாழ்த்தகள் ஐயா
@c.senthilkumar4302 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் உரிமையாளின் பேச்சு அருமை வாழ்த்துக்கள் அய்யா
@r.narayanan71282 жыл бұрын
ஐயா, உயர்ந்த நோக்கம், அருமையான கண்டுபிடிப்பு. சத்யமான வார்த்தைகள். இது அனைவரையும் குறிப்பாக இளைய சமூதாயத்தைப் போய்ச்சேரவேண்டும்.🙏
@munusamisreenivasan46962 жыл бұрын
மிக அற்புதமான மனிதர்.அவர்
@raviraorajaraorao97832 жыл бұрын
Thanks
@getsetmindtamil2 жыл бұрын
அருமையான தொகுப்பு இது போன்ற பல தகவல்களை வழங்கும் உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த அனைத்து பாரபரியமும் காக்க பட வேண்டும் இது நம் இலைய சமுதாயத்தினர் ரிடம் தான் உள்ளது நம் முன்னோர்கள் உடலில் எந்தவொரு நடுக்கமும் இல்லை நோயும் இல்லை ஆனால் இப்போது வாழும் நம்மிடம் அனைத்து வகையான நோய்களும் வயிற்றில் உள்ள போதே அனைத்து நோய்களையும் வரவழைத்து விடுகிறோம் நாமும் ஒன்று சேர்ந்து நல்லமுறையில் நம் உணவு பழக்கத்தை மாற்றி விடுவோம் நன்றி நண்பர்களே இந்த உணவகம் உரிமையளருக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@idhayaa.16272 жыл бұрын
ஐய்யா எங்கழுக்கு புரியவைக்க எடுத்த முயற்சி மிக அருமை 👍மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏
@kumaran24512 жыл бұрын
இவ்வளவு அளவு பண்ணுவதற்கு இத்தனை முயற்சி எடுத்தத தே பெரிய வெற்றி முயற்சிதான். வாழ்த்துக்கள்.
@lokeshgowda18132 жыл бұрын
Love this Owner He is more worried about Health than Money We need such people more n more God bless him and give him more strength to serve society
@shanmuganathanr59922 жыл бұрын
இவர் சமையலை பற்றி சொன்னவிதம் மிகவும் அருமை அதையும் தாண்டிஉண்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு மிகவும் பிடித்த து
@sankargaasi51572 жыл бұрын
ஐயா சூப்பர் ஐயா உங்களைப் போல் சொல்ல ஒரு ஆள் இல்லை மிகவும் நன்றி
@குரங்குகுப்பன்2 жыл бұрын
அருமை ஐயா..! உங்களின் விளக்கம் எளிமையாக உணர்வுபூர்வமாக உள்ளது..! உங்கள் பணி கடவுளின் அருளால் மேன்மேலும் வளரட்டும்..!
@svrkrishnan85302 жыл бұрын
மிக அற்புதம்......அறம் சார் வணிகம் மட்டுமல்ல.... உண்மையில் மனித குலத்திற்கு இன்றைய அவசியமும் கூட.... தெளிவான விளக்கம் நன்றி
@sivaa122 жыл бұрын
profound message by the hotel owner on food and life . always a fan of MSF . sirandha pathivu. ungaloda nermaiyana unavu thedalku nandri.
@lilythereses50442 жыл бұрын
தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்
@KHK3602 жыл бұрын
Murugan Ayya…Salute to you! Owner Murugan Ayya… Scientist Murugan Ayya… Engineer Murugan Ayya… Ethical Engineer Murugan Ayya… He is right …. Food is a necessity not a luxury or time pass 🙏 Good to see the publicity your are giving to traditional and healthy foods! Mathu technology super! Especially slowing it down to human hand speed is special touch! Great video MSF team! Super work!
@victoriamary17632 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. தங்களின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.
@geethanjali58782 жыл бұрын
மிகவும் அ௫மையான பதிவு உணவைப் பற்றிய ஐயாவின் காத்து மிக நிதர்சனமானது தி௫ச்சி செல்லும் போது கண்டிப்பாக இந்த உணவகத்திற்கு செல்வேன்
@ཞjr2 жыл бұрын
அருமையான விளக்கம் தெளிவான சிந்தனை கொண்ட விழிப்புறை இவை அனைத்தும் தான் நம் பண்பாடு உணவை உணவாகவும் மருந்தாகவும் உண்டால் மட்டுமே நன்றாக இருக்கும்.
@b.kumuthadevi16102 жыл бұрын
ரெம்ப அருமையா இருக்கிறது, உங்களது சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ஐயா!
@ravisankaran48762 жыл бұрын
அறம் சார் வணிகம் இது போதும் அவரை பற்றி எடை போட ஆரோக்கியதுக்கு முக்கியம் கொடுக்கும் இவர்களை நாம் கட்டாயம் ஆதரிக்க வேண்டும் வாழ்க உம்முடைய பணி 🙏
@manikandanbalasubramanian90682 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய உண்மைகள் மிக மிக மிக அருமை உங்களுடைய சேவை உலகம் புல்லா தேவை நம்மளுடைய ஆரோக்கியத்தை மீட்டுக் கொடுங்கள் இதை நிறைய பேருக்கு சொல்லிக் கொடுங்கள் மணக்கட்டு செய்யட்டும் இது ஒரு அறம் சார்ந்த வியாபாரம் ஆகட்டும் வாழ்க வளமுடன் நன்றி
@gsm49032 жыл бұрын
திரு.மோகன் ஐயாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் ஐயா தாங்கள் நம் பாரம்பரிய அணுகுமுறை மில் இப்படித்தான் இதற்கு முன் நாம் அனைவரும் வாழ்ந்தோம் என்ற உண்மையான நிலையை தற்பொழுதும் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையான வடிவமைப்பு கொண்ட தங்களுடைய உணவகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வருங்கால இன்றைய தலைமுறையினருக்கு தங்களுடைய உணவகம் ஒரு அத்தாரமாய் விளங்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கிறோம்
@chandrasubramaniam92072 жыл бұрын
One of the best episodes of MSF. Mr. Mohan is full of wisdom. I will likely watch this video multiple tiles to capture all the life's secrets that he talks in this video. A thousand likes. 🙏🙏🙏
@rajalakshmirajamani72932 жыл бұрын
Felt as if I went back to my childhood in the village,everything was home made with high nutrition.
@roobam31202 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்🌹 உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👍👏🌹
@yamunadeviragupathiraja9476 Жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை.ஐயாவுக்கு மனம்நிறைந்த நன்றிகள்.🙏❤️❤️❤️❤️❤️❤️🙏
@Bujji_Chinni22 жыл бұрын
Ayya has got tremendous knowledge and care on health n society..highly appreciable👌👌🤝👍🙌🙌🙌
@ebalaramanbalaraman65442 жыл бұрын
அருமை
@pratappillai75922 жыл бұрын
one of the best videos from MSF .. very well explained by the owner of that restaurant .. all the best
@oComics2 жыл бұрын
This person is a real genius..
@kumudharamanan66382 жыл бұрын
Absolutely fantastic. He aptly describes the various processes in the making of the healthy food..He is very specific and knowledgeable about the health conscious customers need in the backdrop of the traditional methods. I must say that he is the forerunner in this endeavour and I wish him all the very best.
@sardarhussain50642 жыл бұрын
pp
@sreelathacraftandcookingar90002 жыл бұрын
சூப்பர் சூப்பர் சாப்பாடு அருமை பேச்சு அதைவிட அருமை👏👍👌💐
@paarifoodproducts2358 Жыл бұрын
உண்மையான பதிவு. அறம் சார்ந்த பதிவு. விளக்கம் அளித்த அவருக்கும் பதிவு செய்தவருக்கும் நன்றி
@azar19452 жыл бұрын
Owner is a core believer of Nammazhvar,have gud understanding about the basics of health care😊
@mohanasundarikrishnapillai76812 жыл бұрын
உங்கள் சமூக அக்கறையுடன் கூடிய உணவகம் மென் மேலும் வளர வாழ்த்துகள்.
@stellajeyaseeli2 жыл бұрын
ஐயா,முதலில் உங்கள் அழகிய கோர்வையான தமிழுக்கு எங்கள் பாராட்டுக்கள். பழமையும் புதுமையும் இணைந்த பாரம்பரியமிக்க உங்கள் உணவகம் மதுரைக்கு எப்போது வருமென்று காத்திருக்ககிறோம் நீடித்த ஆயுளுடன் நீங்க வாழனும்,
@kaviya02142 жыл бұрын
Madurai kaa🙄🙄.ithu enga list la yea illayeaa
@jraja01 Жыл бұрын
Thanks MSF. One of the most intelligent persons in TN, if not the country. Nandri Ayya.
உங்கள் அறம்சார் வணிகம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஐயா
@rajendrans16852 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே நல்ல முயற்சி இது போன்ற உணவகங்கள் சென்னையில் இருந்தால் என் போன்ற பாரம்பரியமுறை சமையல் ஆர்வலர்ளுக்கு மிகுந்த பயனாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கும்
ஐயா, பேச்சில் உண்மை, தெளிவு, உணவு பற்றிய, அருமையான விளக்கம். நன்றி. அனைத்து ஊர்களிலும் இதே நோக்கத்தோடு கடைகள் தொடங்க வேண்டும்.
@rajeshwarihariharan8052 жыл бұрын
Mohan sir நீங்கள் சொல்வது அனைத்தும்💯 உண்மை👍👍🙏🙏..உங்கள் தமிழ் அருமை..சத்தான உணவின் அருமை தெரிந்தவர்கள் கண்டிப்பாக உங்களை தேடி வருவார்கள்🙏🙏🙏..
@kozhunji2 жыл бұрын
அருமை, அருமையான முயற்சி, நல்வாழ்த்துகள்!!!
@VijayKumar-ro2gg2 жыл бұрын
Good idea, traditional grinding with origional flavours and taste 👌👍
@dhanasekaranb78022 жыл бұрын
ஆரோக்கியமான உணவு தருகிறீர்கள். நன்றி
@mathinaina38312 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் அழகான ஆழமான கருத்துகள் உண்மையில் இவர் சொன்னது அனைத்தும் உண்மை
@venkatesanvenkatesan651811 ай бұрын
அருமை ஐயா நீங்கள் சொல்வது தெளிவாக உள்ளது.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா
@parvinbanu80322 жыл бұрын
நல்ல மாமனிதர்......அருமையான உணவு ..இறைவன் உங்கள் ஆயுள் நீட்டிக்க...அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்...அண்ணா
@nachimuthuvenkadesh86672 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா... வாழ்க வளமுடன் நல்ல அனுபவமான மனிதர்...தெளிவான புரிதலுடன் பேசுகிறார்.... வார்த்தையில் இந்த உலகத்துக்கு ஏதாவது செய்யனும் என்ற அர்பணிப்பு அய்யா மிக மிக சிறப்பு.... உங்கள் உழைப்பு அர்பணிப்பு சிறக்கட்டும்...வாழ்க வளமுடன்... உங்கள் குடும்பமும் இங்கு பணிபுரியும் அம்மாக்கள் அனைவரின் குடும்பங்களும் சகல செல்வங்களும் பெற்று நிறைந்து வாழ்க வளமுடன்
@Suraxa19702 жыл бұрын
This gentleman is a philosopher of the highest stature! Amazing insights, beliefs and such a down to earth, back to the roots way of life!
Mohan sir and his employees deserve to receive an honorable award from the government though it is a business. Many thanks and keep continuing your service through business sir. 💐
@sundaramathiveeraputhiran67592 жыл бұрын
அழகான யதார்த்தமான பேச்சு செயல முயற்ச்சி
@marisamy46542 жыл бұрын
முருகன் சார் வணக்கம் நீங்கள் பாரம்பரிய உணவுகளின் நவீன படைப்பாளர்.. மற்றும் எதிர்கால சந்ததிக்கு.. தேவையானவர்.உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..
@hariradha96262 жыл бұрын
Arumai. Ella orulayum ethu mathiri hostel erunthal nallarukum
@rajausha35442 жыл бұрын
Tried their food, loved the food, good service , worth paying for such traditional and healthy food. Everyone should try this at least one. My family had only good things to say about this experience 👍
@neovenkata2 жыл бұрын
The best things about this channel is you provide great food and philosophy together! Keep up the good work!
@govindarajannatarajan6042 жыл бұрын
சிறப்பு மிக்க தொழிலாக இருக்கு. ஏனென்றால் அவர் இயற்கையாக்க முயற்சி செய்கிறார் தன்னுடைய தொழிலை.
@kumark412 жыл бұрын
Best episode Anna ..Words by the owner is 100 percent true . Hats off to the team 👍🙏
@welcomeback61432 жыл бұрын
அருமை அருமை அருமை மதுரை அன்புடன் தங்களை வணங்குகிறது வரவேற்கிறது
@térrence3692 жыл бұрын
உங்களுக்கான உணவை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் உடலுக்கான தேவை என்னவென்று உங்கள் மனசு சொல்லும். அதை உங்கள் உடல் தேடும்பொழுது உங்கள் மனசு சொல்லும். எவ்வளவு உண்மையான விடயத்தை கூறியிருக்கிறார்.
@Jsa-vlogs2 жыл бұрын
௨ங்கள் கடின முயற்சிக்கு வாழ்த்துகள் ஐய்யா 👏🏻👏🏻👏🏻
@j.josephinesuganthi61922 жыл бұрын
உணவகம் மற்றும் உரிமையாளர் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்👍🎉🎊 சார். நன்றி🙏
@vanmathiv62492 жыл бұрын
நல்ல கருத்துக்கள் ஐயா நன்றிகள் பல... வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்....
@rajasekaranthiru52902 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி அனைவருக்கும். உணவு தயாரிக்கும் முறை சிறப்பு வாழ்த்துக்கள்.
@MYMy-qx1gn2 жыл бұрын
அவர் speech semma super ah life patthi unmai solluraru... 🙏
@bijubalan72042 жыл бұрын
It doesn’t matter how lengthy the video is. All we need is informative. In that way, this video has lot of things that we need to think about. So thanks to MSF 🙏🏼
@raniselva65482 жыл бұрын
அறம் சார்ந்த வணிகம், அருமை ஐயா, 👌👌👍 வாழ்த்துக்கள்..ஐயா வளர்க.. உங்கள் நோக்கம்..பெண்கள் சமைக்கும் போது உணவின் சுவை நல்லா இருக்கனும் என்று நினைத்துக்கொண்டே சமைப்பாங்க,அந்த நினைப்பே, அந்த உணவு சுவையாக இருக் உதவும்.... இந்த வெண்ணெய்.எடுக்கும் முறை கல்சட்டி இதை எல்லாம் பார்க்கும் போது என் பாட்டி செய்தது ஞாபகம் வந்தது,ஐயா அந்த சுவையில் நான் உண்டு வளர்ந்திருக்கிறேன்... உங்களின் இந்த ஆரோக்கிய உணவகத்தில் நானும் ஒரு முறை உணவு உண்ண வேண்டும்...