மதுரை அழகர்தோசை நெய் விட்டு ஊத்தினா சும்மா கரகர மொறுமொறு டேஸ்ட்ல செம...எலும்புக்கும் வலு சேர்க்கும்

  Рет қаралды 21,503

Sarasus Samayal

Sarasus Samayal

Жыл бұрын

#cookingchannel #dosa #traditional
மதுரை அழகர் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி 3 பங்கு (250gm)
கருப்பு உளுந்து ஒரு பங்கு (75gm)
சீரகம் ஒரு டீஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
சுக்கு பொடி ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
கருவேப்பிலை தேவைக்கு
உப்பு தேவைக்கு
நெய் தேவைக்கு
கடலெண்ணெய் அல்லது ரீஃபைண்ட் ஆயில் தேவைக்கு
செய்முறை:
பச்சரிசி உளுந்து இரண்டையும் இரண்டு முறை களைந்து விட்டு மூன்று மணி நேரம் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் விட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக அரைக்கவும். இதை வேறொரு பாத்திரத்தில் மாற்றி இரண்டு அல்லது மூன்று மணி நேரம் புளிக்க விடவும். பிறகு தோசை ஊற்றும் பொழுது இந்த மாவில் ஒரு டீஸ்பூன் சீரகம் மிளகு ஒன்றும் பாதியுமாக இடித்து சேர்க்கவும். சுக்கு பொடி சிறிதளவு பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்க்கவும். கருவேப்பிலையை பொடி பொடியாக கிள்ளி சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்த்து கலக்கவும். இதையெல்லாம் சேர்த்த பிறகு கரண்டியால் நன்கு கலக்கி தோசை கல்லில் நெய் எண்ணெய் இரண்டும் சம அளவில் கலந்து நான் வீடியோவில் காட்டியுள்ளது போல் ஊற்றவும். தோசைக்கல் நன்கு காய்ந்த பிறகு அடுப்பை மிகவும் குறைத்து வைத்து முறுகலாக வேகவிட்டு இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். செம டேஸ்ட்ல நமக்கு அழகர் தோசை ரெடி தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை அபரிதமாக இருக்கும். இதுபோன்ற பாரம்பரியமான ரெசிபிகள் என் சேனலில் நிறைய கொடுத்துள்ளேன். எனது இனிய பார்வையாளர்களே நீங்கள் அனைவரும் பார்த்து பயன் பெறுங்கள். நன்றி வணக்கம்

Пікірлер: 35
@smileflower.916
@smileflower.916 Жыл бұрын
ப்ரியமான காலை வணக்கமுங்க மா... வெள்ளிகிழமை போல மிக மங்களகரமாக இன்றைய விடியோ இருந்த்துங்கள் மா... மதுரை அழகரே விரும்பி உண்ட இந்த அழகர்நெய் தோசையை எங்களுக்காக விரும்பி அழகாக செய்த உங்கள் பாசகரங்களுக்கு நன்றிகள்.. காணோளி முழுவதுமே மிக வெளிச்சமாகவும் மிக மிக ஆலய எதார்த்தமாகவும் இருந்தது ங்கள் மா.. எந்த பணி என்றாலும் விரும்பி செய்யும் போது 100% பலன் கிடைக்கும் நிறைவு இருக்கும் என்பது என் நம்பிக்கை ங்க மா.. நீங்கள் செய்யும் பணியில் அது நிறைந்து புன்னகை பூக்குமுங்க மா... தூய்மையும் உண்மையும் அரோக்கியமும் தாய் பாசமும் தெய்வீகமும் கலந்த தேன் நிறை நல் விருந்து காணொளி ங்க மா...அழகர் தோசையோடு அம்மிச்சிமாவும் பேரழகு பாசதோடு... தாயோடு சாப்பிடும் தருணம் யாவரும் மழலைகளாகி போகிறோம்..இன்று நீங்களும் வயதான மழலையாக தாயருகில் மிக நெகிழ்வான பாசத்தோடு... அழகான காணோளி ங்க மா.இதை பார்க்கும் அனைவரும் மகிழ்ந்து நிறைவுற்று மகிழ வாழ்த்துகளும்.. இன்றைய விடியோ மிக வித்தியசமாகவும் மிக நேர்த்தியும் எல்லாமே மிக தெளிவாகவும் இருந்தது ங்கள் மா..சிறப்புங்க மா நன்றிகள் மா..
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
அருள்செல்வி உன்னைப் போன்ற நல்ல உள்ளங்கள் எனக்கு கிடைத்தது நான் செய்த பெரும் பாக்கியமே 😍 என்றென்றும் மனமார்ந்த அன்புடன் வரவேற்கிறேன் 😍❤️
@smileflower.916
@smileflower.916 Жыл бұрын
@@SarasusSamayal நன்றிகள் ங்க மா..
@AnnamsRecipes
@AnnamsRecipes Жыл бұрын
மதுரையில் இருந்த போது அழகர் கோவிலில் சாப்பிட்டு இருக்கிறேன்.அதே போல மொறு மொறுன்னு இருக்கிறது பா. அருமை அருமை 👌👌
@MrSrikanthraja
@MrSrikanthraja Жыл бұрын
Idhu Chennai la Velachery Dhandeeswaram la ANDHIKADAI shop la kidaikum. Madurai la Azhagar koil la pala murai naan sapitu iruken🎉
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
நன்றி நன்றிங்க அன்னம் 😍
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 Жыл бұрын
Super pa nalla healthy crispy dosai nanum try panren tq pa
@shemakrishnan5245
@shemakrishnan5245 Жыл бұрын
Thanks madam
@umamaha158
@umamaha158 Жыл бұрын
Saithu pakren mam nandri 👌
@prabhudasdas4345
@prabhudasdas4345 Жыл бұрын
Recipe was different and it is crispy and tasty to see and your explanation was nice.
@kalaivanichandrasekaran118
@kalaivanichandrasekaran118 Жыл бұрын
Superb ma
@manoharamexpert9513
@manoharamexpert9513 Жыл бұрын
vanakkam ma Good evening suuuuuuuuuper healthy recipe ma.
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Жыл бұрын
Super amma 🎉🎉🎉
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 7 ай бұрын
Super 👌 ma yummy 😋🎉
@livingstylein
@livingstylein Жыл бұрын
Delicious dosa
@lakshmiswaripati3646
@lakshmiswaripati3646 11 күн бұрын
Mouth🤤🤤🤤watering🤤🤤🤤yummy. My Grandson was in Madurai for official work & he ate this there. He wants me to make this. I Don't understand ur language so will u PLEASE write this recipe with all ur tips in English in the description box Thank u & God bless u🪷☀️
@selvee6669
@selvee6669 Жыл бұрын
Super Dosai Akka👌👌😋😋❤️❤️🌹🌹 Selvee 🇲🇾
@thenathalthenathal7195
@thenathalthenathal7195 Жыл бұрын
From sarus samyal vedio varell very super.
@manickavalliammals3186
@manickavalliammals3186 Жыл бұрын
super ma
@renus7726
@renus7726 Жыл бұрын
Simply awesome dosai madam Can we ferment the dosa batter for more than 3 hours? Can we store the leftoversbatter in the fridge and use it the next day? Please clarify madam
@MrSrikanthraja
@MrSrikanthraja Жыл бұрын
Idhu Chennai la Velachery Dhandeeswaram la ANDHIKADAI shop la kidaikum. Madurai la Azhagar koil la pala murai naan sapitu iruken🎉
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Super super sir
@sampathramesh74
@sampathramesh74 Жыл бұрын
Super amma
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
Amma supernga ma kandippa try pandreanga ma மதுரை அழகர்கோவில் தோசை பார்த்தாலே சாப்டனும்னு தோனற்துங்க மா நன்றிங்க. மா அம்மாவ பார்த்ததுல சந்தோஷம் ங்க மா அம்மா எப்படி இருக்காங்க மா நன்றிங்க மா 🙏👍
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
அம்மா நல்லா இருக்காங்க மீனா❤
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
@@SarasusSamayal 👏👏👏
@rajapalayamrecipes
@rajapalayamrecipes Жыл бұрын
Super pa eanku romba pedichathu pa sapda varalama
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Ungalukku illamala Ramani...vanga vanga 😍
@sivaramakrishnanbal
@sivaramakrishnanbal 5 ай бұрын
Echo அதிகமா இருக்கு...மைக் பொசிஷன் கரெக்ட் பண்ணுங்க
@jaykrish3566
@jaykrish3566 5 ай бұрын
இதே பொருட்கள் தான் காஞ்சிபுரம் இட்லி செய்ய தேவையானவை
@shemakrishnan5245
@shemakrishnan5245 Жыл бұрын
Please tell measurements
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
நன்றி நன்றிங்க 🙏 மிகச் சரியான அளவுகள் description box ல் கொடுத்துள்ளேன். கண்டிப்பாக பாருங்கள் 😍
@vnithushi6527
@vnithushi6527 Жыл бұрын
அம்மா சீரகம் இடிக்கும் உரல் எங்கு வாங்கினீர்கள்
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
தாந்தோன்றி மலை... கரூர் 👍
@vnithushi6527
@vnithushi6527 Жыл бұрын
அம்மா சீரகம் இடிக்கும் உரல் எங்கு வாங்கினீர்கள்
Temple Curd Rice / Azhagar Kovil Dosa | Rusikkalam Vanga | 02/01/2018
19:39
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 21 МЛН
Azhagar Koil Dosai | Thirumaaliruncholai
17:47
Dhinamum Manamum
Рет қаралды 16 М.
HugOutdoor #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:31
who is the champion of ludo luck balloon popping race ?
0:59
SS FOOD CHALLENGE
Рет қаралды 58 МЛН
Sweet watermelon 🍉😋
0:15
LizAlex Fam
Рет қаралды 8 МЛН
What did I eat? 🤪😂 LeoNata Best #shorts
0:19
LeoNata Best
Рет қаралды 1,6 МЛН
🫓 Xorazim guch 💪  #littos
0:14
Littos Media
Рет қаралды 10 МЛН