நளினி அம்மாவின் வாழ்க்கை போலவே, சீதா, குட்டி பத்மினி இவர்களின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. சீதா பார்த்திபன் வாழ்க்கையில் இன்று வரை அமைதி, மரியாதை மற்றும் தூர இருந்தாலும் பாசம் உருவாகவில்லை. குட்டி பத்மினி வாழ்க்கை இன்னும் மோசமானது! Love to my Ex husband என்று வாழ்த்தும் நிலை! லக்ஷ்மி சிவசந்திரன் வாழ்க்கை தெளிந்த நீரோட்டம் போல! மோகன் கல் விட்டெரி ந்தும் ஒன்றும் நடக்கவில்லை! ஆனால் நளினியின் வாழ்க்கை ரசித்து அனுபவிக்க கூடியது. தன் வரைமுறை, தனக்கான வட்டம் எதுவரை என்பது மிகத் தெளிவான பெண். விடிகாலை மூன்று மணி முதல் இரவு 08.30 வரை, தன் செயல்கள் என்ன என்பதை நன்கு அறிந்த பெண். விவாகரத்தானாலும் ராமராஜன் தான் தன் கணவர், தன் இரு குழந்தைகளுக்கும் அவர் தான் தந்தை. பொறுப்பாக இருவருக்கும் கல்யாணம் செய்து, தாயும் தந்தையும் சேர்ந்து வைபோகத்தை முடித்து வைத்தது பெரிய விஷயம். நளினி அம்மாவின் எண்ணங்கள் மிகுந்த மரியாதைக் குரியது. அவரின் நேர்காணலில் பல வாழ்க்கை படிப்பினைகள் பலருக்கு கிடைக்கும்.