குற்றாலம். வரும் மக்கள.பைம்பொழி. குமாரசாமி கோயிலை பார்க்க தவறாதீர்கள்...
@MuthuSaravananS4 ай бұрын
பண்மொழி அருகே உள்ள அச்சன்புதூரில் சிவகாமி அம்மையார் வசித்து வந்தார். அவரது கணவர் கங்கைமுத்து தேவர். இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை வரம் கிட்டவில்லை. இதைத் தொடர்ந்து சிவகாமி அம்மையார், முருகப் பெருமானை வணங்கி, கோயிலில் கல் மண்டபம் அமைக்க, கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி மேலே இழுத்துச் செல்வார். தான் கட்டிய கல் மண்டபத்தில் தங்கிய வரதர் மஸ்தான் என்ற ஆன்மிக குருநாதரிடம் தன் இல்லத்தில் தவழ்ந்து விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தத்தைத் தெரிவித்தார் சிவகாமி அம்மையார். அவர் திருமலை முருகனையே குழந்தையாக ஏற்றுக் கொள்ளும்படி பணித்தார். குருநாதரின் வார்த்தைகளைக் கேட்ட சிவகாமி அம்மையார், திருமலை முருகனையே தன் குழந்தையாக ஏற்று, தன் அனைத்து சொத்துகளையும் முருகனுக்கே எழுதி வைத்தார். மேலும், ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்டு, முருகனுக்கே எழுதி வைத்தார். தன் வாழ்க்கையின் நிறைவில் முருகனுக்கே தொண்டு செய்து துறவறம் பூண்டதால், ‘சிவகாமி பரதேசி அம்மையார்’ என்று அழைக்கப்பட்டார். திருமலைக் கோயில் அமைப்பதற்காக திருப்பணிகள் நடைபெறும் காலத்தில் கல் தூண்களையும், உத்தரங்களையும் மலை மீது இழுத்துச் செல்ல யானைகள் பயன்படுத்தப்பட்டன. பெரிய கயிறுகள் கிடைக்காத சமயத்தில் பனைநார் கயிறுகள் பயன்படுத்தப்பட்டன. சமயத்தில் இழுத்துச் செல்லப்படும் தூண்களின் பாரம் தாங்காமல் கயிறுகள் அறுந்து, தூண்கள் கீழே உருண்டு ஓடும். அவ்வாறு கீழே ஓடி வரும் தூண்கள், உத்தரங்களை சிவகாமி அம்மையார் தன் உயிரையும் பொருட்படுத்தாது தடுத்து நிறுத்துவார். மறுபடியும் அவை மேலே இழுக்கப்படும்வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பார். இவ்வளவு அற்புத திருப்பணிகளையும் செய்து, இறுதியில் திருமலைக் குமரனுக்கு நேர் எதிராக மலைக்குக் கிழக்கே சிறிது தொலைவில் ஜீவ சமாதி அடைந்தார். இவருக்கு இக்கோயிலில் உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. kamadenu.hindutamil.in/spiritual/kaakum-karthikai-selvan-9