தானெனை முன்படைத்தான் / சுந்தரர் தேவாரம் / திருத்தணி சுவாமிநாதன் ஐயா

  Рет қаралды 62,938

பண் இசை தேவாரம்

பண் இசை தேவாரம்

Күн бұрын

தானெனை முன்படைத்தான் / சுந்தரர் தேவாரம் / திருத்தணி சுவாமிநாதன் ஐயா
திருநொடித்தான் மலை
பண் :பஞ்சமம்
பாடல் எண் : 1
தானெனை முன்படைத்தான் அத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த
யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
தான்மலை உத்தமனே
பாடல் எண் : 2
ஆனை உரித்தபகை அடி
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ்
செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே
பாடல் எண் : 3
மந்திரம் ஒன்றறியேன் மனை
வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரி
சேசெயுந் தொண்டன்எனை
அந்தர மால்விசும்பில் அழ
கானை யருள்புரிந்த
துந்தர மோநெஞ்சமே நொடித்
தான்மலை உத்தமனே
பாடல் எண் : 4
வாழ்வை உகந்தநெஞ்சே மட
வார் தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென்னை அது
மாற்றி அமரரெல்லாம்
சூழ அருள்புரிந்து தொண்ட
னேன் பரமல்லதொரு
வேழம் அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே
பாடல் எண் : 5
மண்ணுல கிற்பிறந்து நும்மை
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறுதல் தொண்ட
னேன்இன்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர்கள் விரும்
பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்
தான்மலை உத்தமனே
பாடல் எண் : 6
அஞ்சினை ஒன்றிநின்று அலர்
கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மனமே வைகி
வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட
னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே
பாடல் எண் : 7
நிலைகெட விண்ணதிர நிலம்
எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
தான்மலை உத்தமனே
பாடல் எண் : 8
அரவொலி ஆகமங்கள் அறி
வார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெ
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து வழி
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே
பாடல் எண் : 9
இந்திரன் மால்பிரமன் னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்
தான்மலை உத்தமனே
பாடல் எண் : 10
ஊழிதொ றூழிமுற்றும் உயர்
பொன்நொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும்பின் சுவை
நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமிழால் இசைந்
தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சை
யப்பர்க் கறிவிப்பதே

Пікірлер: 54
@jayaramanpn6516
@jayaramanpn6516 7 ай бұрын
யாரவன் சுந்தரர் காலத்திலேயே வந்துள்ளது.இனிமை.அருமை.சிவசிவ
@s.dhayashree17s.dhayashree74
@s.dhayashree17s.dhayashree74 Жыл бұрын
அருமையாக உள்ளது தேவாரம் கேட்கமனம் நிறைவாக இருக்கிறது
@sivachandran89
@sivachandran89 2 ай бұрын
தானெனை முன்படைத்தான் அத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயி னேனைப் பொருட்படுத்து வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் தான்மலை உத்தமனே 1 ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தமரர் வலஞ் செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே 2 மந்திரம் ஒன்றறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களால் துரி சேசெயுந் தொண்டன்எனை அந்தர மால்விசும்பில் அழ கானை யருள்புரிந்த துந்தர மோநெஞ்சமே நொடித் தான்மலை உத்தமனே 3 வாழ்வை உகந்தநெஞ்சே மட வார் தங்கள் வல்வினைப்பட் டாழ முகந்தவென்னை அது மாற்றி அமரரெல்லாம் சூழ அருள்புரிந்து தொண்ட னேன் பரமல்லதொரு வேழம் அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே 4 மண்ணுல கிற்பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறுதல் தொண்ட னேன்இன்று கண்டொழிந்தேன் விண்ணுல கத்தவர்கள் விரும் பவெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித் தான்மலை உத்தமனே 5 அஞ்சினை ஒன்றிநின்று அலர் கொண்டடி சேர்வறியா வஞ்சனை யென்மனமே வைகி வானநன் னாடர்முன்னே துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட னேன்பர மல்லதொரு வெஞ்சின ஆனைதந்தான் நொடித் தான்மலை உத்தமனே 6 நிலைகெட விண்ணதிர நிலம் எங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானைஏறி வழி யேவரு வேனெதிரே அலைகட லால்அரையன் அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச உலையணை யாதவண்ணம் நொடித் தான்மலை உத்தமனே 7 அரவொலி ஆகமங்கள் அறி வார்அறி தோத்திரங்கள் விரவிய வேதஒலி விண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப வரமலி வாணன்வந்து வழி தந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந்தான் நொடித் தான்மலை உத்தமனே 8 இந்திரன் மால்பிரமன் னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த யானை யருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான் நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை உத்தமனே 9 ஊழிதொ றூழிமுற்றும் உயர் பொன்நொடித் தான்மலையைச் சூழிசை யின்கரும்பின் சுவை நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமிழால் இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரையா அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே
@kandhavadivelangovindasami1093
@kandhavadivelangovindasami1093 Жыл бұрын
சிவ சிவ மனதை உருக வைக்கிறது!
@tsrinivasan4305
@tsrinivasan4305 11 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் திருப்பதிகம்
@krishnavenivenkatraman2016
@krishnavenivenkatraman2016 2 жыл бұрын
இந்த பதிகம் என்னைக் கைலாசம் போகும் ஆசையைத் தூண்டுகிறது
@பண்இசைதேவாரம்
@பண்இசைதேவாரம் 2 жыл бұрын
சிவ சிவா....🙏🏼 எம்பெருமானே...🙇‍♂️
@palaniappandhp9985
@palaniappandhp9985 2 жыл бұрын
இப்பாடல் என்னை திருஅஞ்சைக்களம் அழைத்துச் சென்றது ..... 🙏🏻
@பண்இசைதேவாரம்
@பண்இசைதேவாரம் 2 жыл бұрын
சிவ சிவா....🙏🏼🙏🏼🙇‍♂️🙇‍♂️
@vinram
@vinram Жыл бұрын
சென்ற மாதம் அஞ்சைகளத்து மகாதேவரை தரிசித்தேன்
@Lakshmi-fo6fb
@Lakshmi-fo6fb 2 ай бұрын
இந்த பாடலை கேட்டஉடனே அலை பாய்ந்த மனம் சற்று அமைதி பெற்றது, திரு சிற்றம்பலம் ஓம் நமசிவய 🌹🙏
@ValliKallidai
@ValliKallidai 8 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@anbesivan6499
@anbesivan6499 2 ай бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌
@NethraragavanRagavan-fu2rf
@NethraragavanRagavan-fu2rf Жыл бұрын
உயிரை உருகவைக்கிறது ஐயா.... சிவாயநம...
@vinram
@vinram 2 жыл бұрын
என்னமோ தெரியவில்லை தினம் இரவு தூங்கும்முன் இதை கேட்காமல் தூக்கம் வரூவதில்லை
@subramanyamvaidyanathan3595
@subramanyamvaidyanathan3595 8 ай бұрын
Madam paravasamadainthathu
@krishnavenivenkatraman2016
@krishnavenivenkatraman2016 2 жыл бұрын
கேட்கக்கேட்க த் திகட்டாத திருப்பதிகம்
@ushavenkatramana5329
@ushavenkatramana5329 Жыл бұрын
பதிகம் கேட்க கேட்க தன்னை மறந்து கண்ணீர் தன்னையறியாமல் வந்து கொண்டேயிருந்தது தினமும் பதிகங்கள் படிக்கிறேன் உங்கள் குரலில் கேட்கும் போது உருக்கமாக உள்ளது ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
@dhinakar7844
@dhinakar7844 3 ай бұрын
Hi
@mg.muthukumarmg.muthukumar5028
@mg.muthukumarmg.muthukumar5028 5 ай бұрын
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
@KalyaniAkshaya
@KalyaniAkshaya 3 ай бұрын
Thiruchitrambalam. Om Namasivaya.
@krishnamoorthibalaguru2416
@krishnamoorthibalaguru2416 2 ай бұрын
சிவசிவ ❤
@murugansambandam1056
@murugansambandam1056 8 ай бұрын
❤ சிவ சிவ
@Rajeeakumar
@Rajeeakumar Жыл бұрын
சிவ சிறப்பு
@JothiMuthulakshmi-h7k
@JothiMuthulakshmi-h7k 9 ай бұрын
Mava sava nandri ayya nit pavi
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 10 ай бұрын
ஓம் நமசிவாய
@JbRecordingStudiochennai
@JbRecordingStudiochennai Жыл бұрын
SIVAYA NAMA Miha Arumai Siva. Sivananthathin Ellaikke Kondu Sendru Vittathu Ippadal
@puspanadarajah8089
@puspanadarajah8089 2 ай бұрын
Anbe sivam ❤❤❤
@callmeshan6087
@callmeshan6087 2 жыл бұрын
சுந்தரின்தேவாரம்அதிமதுரமாகதித்திக்கின்றதுசிவாயநம
@பண்இசைதேவாரம்
@பண்இசைதேவாரம் 2 жыл бұрын
🙏🏼 சிவ சிவ 🙏🏼
@dhinakar7844
@dhinakar7844 Жыл бұрын
Sundarar thiruvadi potri
@veerapathiran543
@veerapathiran543 Жыл бұрын
முக்தி பதிகம்❤️✨
@krishnamoorthyj2513
@krishnamoorthyj2513 2 ай бұрын
இசைக்கருவிகள் ஒலி மிகுதியாக உள்ளதால் பாடலைதெளிவாகக்கேட்டு ரசிக்க முடியவில்லை.
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 8 ай бұрын
Sivasiva sivasiva
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 Жыл бұрын
Arumai ayya
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🌷🌻சிவ சிவ🌿🌸திருநீலகண்டம்🌷🌹🙏திருச்சிற்றம்பலம் 🐦🐄🙏🍋
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 2 жыл бұрын
Siva siva
@b.paranisrigugan8773
@b.paranisrigugan8773 2 жыл бұрын
அய்யா வணக்கம் அருமையாக உள்ளது
@பண்இசைதேவாரம்
@பண்இசைதேவாரம் 2 жыл бұрын
🙏🏼 சிவ சிவ 🙏🏼 நாம் அனைவரும் நால்வர் பெருமக்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்... ஐயா
@b.paranisrigugan8773
@b.paranisrigugan8773 2 жыл бұрын
@@பண்இசைதேவாரம் நன்றி அய்யா
@devasenapathykp6497
@devasenapathykp6497 2 жыл бұрын
ஓம் சிவாய நம
@elangovan2070
@elangovan2070 Жыл бұрын
இரா.இளங்கோவன்வீரசைவர்சிறுவாச்சூர்
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 Жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு
@ramadoss49
@ramadoss49 Жыл бұрын
Picture s are good Song is good
@kumarsivakumar4920
@kumarsivakumar4920 2 жыл бұрын
Super
@ramadoss49
@ramadoss49 Жыл бұрын
Please put with lyrics please
@harinivenkatmvk
@harinivenkatmvk 10 ай бұрын
Check in the description. It is available.
@jayalakshmipalanisamy4723
@jayalakshmipalanisamy4723 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@karthikeyan8513
@karthikeyan8513 2 жыл бұрын
🙏🙏
@ramadoss49
@ramadoss49 Жыл бұрын
We are not having book
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 2 жыл бұрын
Siva siva
@lakshmananlakshmanan7839
@lakshmananlakshmanan7839 Жыл бұрын
Siva siva
@manikavasagams9042
@manikavasagams9042 Жыл бұрын
Siva siva
@thiagarajans4040
@thiagarajans4040 11 ай бұрын
எதிர் பாராமல் மனைவி ரா‌ஜலட்சுமி மறைந்த துக்கத்தை இந்த பாடல்தான் ஆறுதல் அளிக்கிறது.
Thaan enai mun padaithaan / Sundarar Thevaram / Nodithaan Malai Uthamanea
8:40
Keshav Raj's Official
Рет қаралды 205 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 137 МЛН
தானெனை முன்படைத்தான்
4:39
திருச்சிற்றம்பலமுடையான்
Рет қаралды 13 М.
Chidambaram Thevaram- Dharmapuram P.Swaminathan -சிதம்பரம் பாடல்கள் -தருமபுரம் பி.சுவாமிநாதன்
15:46
Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Рет қаралды 76 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН