Wa alaikum Salaam wa rah இறந்தவர் சார்பாக தர்மம் செய்யலாம், உணவு வழங்கலாம், ஹஜ் செய்யலாம், நோன்பு நோற்கலாம், அவருக்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரலாம். இஸ்லாத்தில் இதற்கான ஆதாரங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. ஆனால் இறந்தவர் சார்பாக யாஸீன் சூராவை ஓதலாம் என்றோ, குர்ஆன் ஓதி இறந்தவருக்காக ஹதியா செய்தால் அதன் நன்மைகள் அவரைச் சென்றடையும் என்றோ இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை! இறந்தவரின் மையத்துக்கு அருகில் யாஸீன் சூராவை ஓதுங்கள் என்பது போன்று இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது தொடர்பாக வரும் நபிமொழிகள் பலவீனமானவைகளாகும். உயிருடனிப்பவர் குர்ஆனை ஓதினால் அவருக்கு நன்மை உண்டு! “குர்ஆன் வசனம் ஓதப்படும் போது அதை செவிதாழ்த்தி கேளுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்“.(7 : 204) என்றதன் அடிப்படையில் ஓதுவதை செவிமடுத்தால் செவிமடுப்பவர் அருள் செய்யப்படுவார். மரணத்தருவாயில் அல்லது மரணத்திற்கு முன் செவியேற்க்கும் நிலையில் ஒருவர் இருக்கும் போது அவருக்கு அருகில் ஒருவர் திருகுர்ஆனின் வசனங்களை ஓதி அவர் செவியேற்பாராயின் மேற்கண்ட வசனத்தின் அடைப்படையில் நன்மை கிடைக்கலாம். ஆனால், “மரணித்தவரைச் செவியேற்கச் செய்ய உம்மால் கூட இயலாது” என நபி(ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான். மரணித்தவரால் குர்ஆனை ஓதவும் முடியாது, ஓதுவதைக் கேட்கவும் முடியாது. மேலும், “இது நேர் வழிகாட்டும்” என குர்ஆன் பற்றி இறைவன் கூறுகிறான். வழிகாட்டல் என்பது உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் அவசியம். இறந்தவர்களுக்கல்ல! ஓதப்படுவதைச் செவியேற்கும் நிலையிலேயே இல்லாதவருக்கு, வழிகாட்டல் என்ற வகையில் கூட எவ்வித நன்மையும் இல்லை. (இறைவன் மிக்க அறிந்தவன்) Sahih aana adaharam illai
@Allhamdhulliah2 ай бұрын
@@Key2jannahChannel Inshaallah jazakaallahu khair sis. Itheriyama yasin, quran oothitanga problem ilaila sis😰