தமிழைக்காத்த தனித்தமிழ் இயக்கம் | மறைமலை அடிகள் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-1 | SangathamizhanTV

  Рет қаралды 24,890

சங்கத்தமிழன் TV

சங்கத்தமிழன் TV

Күн бұрын

தமிழைக்காத்த தனித்தமிழ் இயக்கம் | மறைமலை அடிகள் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-1 | SangathamizhanTV
தனித்தமிழ் மாட்சி: www.projectmad...
மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட தமிழர்கள் என்கிற இந்த தொடரில் திராவிடர்களும் ஆரியர்களும் திட்டமிட்டு மறைத்த தமிழர்களைப் பற்றியும் தமிழ் சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றியும் பல அரிய தகவல்களை பார்க்க போகிறோம். இந்த தொடரில் நான் சொல்லப்போகும் பல தலைவர்கள் பற்றி நிறைய பேருக்கு தெரியாது காரணம் சுதந்திரத்திற்கு முன்பு ஆரியர்களின் ஆதிக்கத்தால் தமிழ் தலைவர்கள் மறைக்கப்பட்டார்கள் சுதந்திரத்திற்கு பிறகு ஆரியத்தின் பிள்ளையான திராவிடர்களும் அதே வேலையை தான் செய்தார்கள். தமிழர் அல்லாதவர்களை மட்டுமே தமிழின தலைவர்களாக முன்னிறுத்தி பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழர் வரலாற்றை 100 ஆண்டுகளுக்குள் சுருக்கியது திராவிடம். இப்படி சூழ்ச்சியால் மறைக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி தமிழர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு சிறு முயற்சியே இந்த தொடர்.
இந்த பதிவில் நாம் தனித்தமிழ் இயக்கம் கண்ட தமிழ்க்கடல் மறைமலை அடிகள் பற்றிதான் பார்க்கப் போகிறோம். இன்று நம் தமிழ்மொழி செம்மொழி தகுதியை பெற்றதற்கும், தமிழில் வடமொழி சொற்கள் குறைந்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் மறைமலைஅடிகள்தான்.
மறைமலை அடிகளைப்பற்றி கவிப்பேரரசு வைரமுத்து தான் எழுதிய தமிழாற்றுப்படை என்கிற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “மறைமலையடிகளின் வரவு தமிழ் நெடுவெளியில் நிகழ்ந்த பெருநிகழ்வு என்றே கட்டுரைக்கிறேன். அவரை ஒரு நூற்றாண்டின் வெடிப்பு என்று சொல்லலாம். 1800 ஆண்டுகளாய்த் தமிழ் மொழியில் அப்பிக் கிடந்த அந்நியப் பாசிகளை முற்றும் களைய வந்த மொழிச் சலவையாளர் என்றும் கணிக்கலாம்.”
“முத்தெடுக்கப்போனவன் பவளப் பாறையைக் கண்டு பிடித்த கதைபோல், மொழித் தூய்மை காக்கப்போய் இனப்பெருமை காத்ததுதான் மறைமலை அடிகளின் திருவரலாறு.
பன்னூறாண்டுகளாய்த் தமிழ் மீது படிந்து கிடந்த அயன்மொழிச் சாம்பல்களை ஓர் ஊழிக் காற்றாய் அவர் வந்து ஊதிப் பார்த்தபோதுதான் உள்ளிருந்த தணல் “நான்தான் தமிழ் தமிழ் தமிழ்” என்று தகித்தது.”
#SangathamizhanTV #MaraimalaiAdigal #ThanithamilIyakkam #மறைமலைஅடிகள் #தனித்தமிழ்இயக்கம் #தமிழாற்றுப்படை
***************************************************************************************
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
Email ID: sangathamizhantv@gmail.com
Join this channel to get access to perks:
/ @sangathamizhantv
Follow me on Facebook Page: / changatamizhan

Пікірлер: 385
@anuradharadhaanu2206
@anuradharadhaanu2206 4 жыл бұрын
சகோதரா நீங்கள் பாரி தம்பு மணியரசன் ஐயா பாண்டியன் ஐயா நாம் தமிழர் சகோதர்களெல்லாம் தமிழினத்திற்கு இன்னும் ஏனையோர்கள் வரம் ஏனென்றால் தமிழரினத்தை மீட்சியுற செய்து தமிழுக்கு தொண்டாற்றுகிறீர்கள் வாழ்த்துகளும் நன்றிகளும் உறவுகளே....
@jais8011
@jais8011 4 жыл бұрын
மிகச்சரி👍
@dhiraj7468
@dhiraj7468 4 жыл бұрын
வடநாட்டு சாய்பாபாவை கொண்டிடாடிய நாம் நம் தமிழன் வள்ளலாரை புறம்தள்ளிவிட்டோம்... 🤦‍♂️😔
@palanikumarpdkt9149
@palanikumarpdkt9149 4 жыл бұрын
மிக சரியாக கூறுனீர்கள் இதை நாம் கூறும் போது யாரும் கேட்க மறுக்கிறார்கள்
@sundhukumar
@sundhukumar 4 жыл бұрын
correct ta sonnenga nanba
@robertwilliam1419
@robertwilliam1419 4 жыл бұрын
👍👍👍
@sentamilnadan6437
@sentamilnadan6437 4 жыл бұрын
உண்மை அண்ணா😔
@thivyathiya9754
@thivyathiya9754 4 жыл бұрын
உண்மை.
@vinothatark
@vinothatark 4 жыл бұрын
உளமார்ந்த வாழ்த்துக்கள்.. தங்கள் பணி வியப்பளிக்கிறது. இனி மறவோம். உயர்வோம்.
@user-vo1ki1zo8y
@user-vo1ki1zo8y 4 жыл бұрын
மறைமலையடிகளின் தமிழ்த்தொன்டு ஈடு இணையற்றது. இவரை போன்ற தமிழ் தலைவா்களை நீங்கள் நினைவுக்கூா்ந்தது பாராட்டத்தக்கது.
@Jafri.official
@Jafri.official 4 жыл бұрын
நம் வீட்டிலிருந்தும், சொந்த ஊரிலிருந்தும் தமிழர் வரலாற்றை பரப்பும் கடமை நம் அனைவருக்கும் கட்டாய கடமை ஏற்பட்டுள்ளது. பரப்புவோம், பாதுகாப்போம் நம் தாய் மொழியை.
@Jafri.official
@Jafri.official 4 жыл бұрын
@Jyothi Ramachandran தாய் மொழி "தமிழ்"
@Jafri.official
@Jafri.official 3 жыл бұрын
@Jyothi Ramachandran Actually, what is your mother tongue?
@Jafri.official
@Jafri.official 3 жыл бұрын
@Jyothi Ramachandran உங்கள் பெயரும் தமிழில் இல்லை. சமஸ்கிருதம் மொழியில் உள்ளது. பிராமணர்களுக்கு தாய் மொழி சமஸ்கிருதம் தானே?. பின்னர் ஏன் வீட்டில் சமஸ்கிருதம் பேசவில்லை. மதத்தால் நான் இஸ்லாத்தை ஏற்றாலும் இனத்தால் தமிழ் இனத்தை சார்ந்தவன். என் பிள்ளைகளுக்கு தமிழிலேயே பெயர் வைப்பேன். உங்களுக்கு இனத்திற்கும் மதத்திற்கும் வேறுபாடு தெரியும் என்று நினைக்கிறேன்.
@prabakaran8341
@prabakaran8341 4 жыл бұрын
நம் தாய் தமிழ் காத்த மறைமலையடிகள் அவர்களை நம் பிள்ளைகளிடம் கொண்டு சேருங்கள் நாம் தமிழர்
@cutcopypaste5283
@cutcopypaste5283 4 жыл бұрын
இனி மறைமலை அடிகள் பாலத்தை கடக்கும் போது அவர் நினைவு வரும்
@thirupathigovindan5945
@thirupathigovindan5945 4 жыл бұрын
சிறப்பு தம்பி. வாழ்த்துக்கள். சங்கத்தமிழனால் எம்முன்னோர் தமிழ் மற்றும் தமிழ் இன வரலாறு அறிய முடிகிறது. நன்றி.
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 4 жыл бұрын
இந்த மாதிரி பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்து தமிழ்மொழியைக்காத்து தமிழர் வாழ்வு மேன்மையுற பாடுபடவேண்டும்
@kumaravel3616
@kumaravel3616 4 жыл бұрын
நானும் தற்பொழுது வடமொழி எழுத்துக்களை தவிர்த்துவிட்டு அதற்கு இணையான தமிழ் சொற்களை மட்டுமே தேடிக் கொண்டு வருகிறேன் பேசவும் முயற்சிக்கிறேன்.. வாழ்க தமிழ்மொழி.. காணொளிக்கு மிக்க நன்றி அண்ணா..
@velavan4768
@velavan4768 4 жыл бұрын
அடுத்த ஐயா சோமசுந்தர பாரதியார் பற்றி எதிர்பாரக்கிறேன்
@SangathamizhanTV
@SangathamizhanTV 4 жыл бұрын
கண்டிப்பாக அவரை பற்றியும் பேசுவோம் சகோ ஆனால் அடுத்த காணொளியாக இருக்க வாய்ப்பு இல்லை😍😍 விரைவில் பேசலாம்
@user-uf1wy2cl4t
@user-uf1wy2cl4t 4 жыл бұрын
தமிழ் உயிர் பெற்று சங்கத்தமிழ் புத்துணர்ச்சியடைகிறது.நன்றி
@kabileshs6910
@kabileshs6910 4 жыл бұрын
*இத்தனை தலைவர்கள் தமிழைக் காத்து இன்று வரை உயிருடன் வைத்துள்ளனர் ஆனால் இந்த digital காலத்தில் தமிழைக் காக்க நிறைய வாய்ப்புகள் இருந்தும் பழகி விட்டதாலும் பற்றை இழந்ததாலும் தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசியும் ஆங்கில வழிக் கல்வி கற்றும் தற்போதைய சந்ததியினர் தமிழ் தெரியாது இருக்கிறார்கள். ஆனால் இப்போதும் ஒன்றும் கெட்டு போகவில்லை மக்கள் அதிக நேரம் செலவிடும் இனணய தள செயலிகள் (app) மற்றும் மென்பொருளையும் தமிழாக்கம் செய்ய அனைவராலும் முடியும் open source கணினி மென்பொருள்கள் மற்றும் operating systemகளைக் கூட தமிழாக்கம் செய்யலாம் விரைவில் இது குறித்த தகவல்களை காணொளியாக வெளியிட இருக்கிறேன் தமிழ் பற்றாளர்கள் இணைந்து கொள்ளுங்கள்*
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
செயலிகளை தமிழில் உருவாக்கலாம் நண்பா. OS UI கூட தமிழில் ஏற்கனவே உள்ளது. ஆனால் முழு OS என்பது programming language மூலமே எழதப்படுகிறது.
@kabileshs6910
@kabileshs6910 4 жыл бұрын
@@user-bz7hr8ky3q அதைத் தான் நண்பா நானும் சொல்கிறேன் linux tamil translation செய்துகொண்டுள்ளனர் பாதியில் நிற்கிறது translations.launchpad.net/linuxmint/latest/ இந்த இணையதளத்தில் தமிழ் மற்றும் இதர மொழிகளில் linux என்ற operating system மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட தரவுகள் உள்ளன சென்று பாருங்கள்
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@kabileshs6910 பார்த்தேன் உறவே. சிறந்த முயற்சி. புதிதாக வரும் Device களுக்கு, Device Driver தமிழில் உருவாக்க முடியுமா? பெரும் வேலை ஆயிற்றே? எத்தனை line code இருக்கும் என்று எண்ணி பார்க்கும் போதே தலை சுற்றுகிறதே?
@kabileshs6910
@kabileshs6910 4 жыл бұрын
@@user-bz7hr8ky3q நண்பா code எதையும் மாற்றி அமைக்க வேண்டாம் display language மற்றும் UI மட்டுமே மொழிபெயர்ப்பு செய்தால் போதும் இதற்கு சிறிதளவு கணினி அறிவும் மொழியறிவும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் சிறிய குழு ஒன்று செயல்பட்டாலே போதும் இவ்வாறு தான் french,german, Japanese,chinese ல் அணைத்து மென்பொருள்களும் மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றன
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
@@kabileshs6910 எப்படி இணைய வேண்டும் ? நான் System Programmer தான். ஆனால் எதுவும் நினைவில் இல்லை.
@thamizhlkumarannataraj.a5319
@thamizhlkumarannataraj.a5319 4 жыл бұрын
நாம் தமிழர் தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 4 жыл бұрын
ஐய்யா அவர்களின் தமிழ் பணியை போற்றுவோம்...
@Siv322
@Siv322 4 жыл бұрын
ஜே சி குமரப்பா என்ற தமிழர் ஒரு பொருளாதார அறிஞர் ஆனால் இவரைப் பற்றி யாருக்கும் தெரியாது இவரைப் பற்றிய ஒரு காணொளி செய்ய வேண்டுகிறேன்
@anandbaskar5734
@anandbaskar5734 3 жыл бұрын
உண்மை
@raavanansivan7705
@raavanansivan7705 4 жыл бұрын
ஒவ்வொரு நாளும் நம் வரலாறு தெரிய தெரிய , இந்த இனத்தில் பிறந்ததற்கு பெருமையாக உள்ளது. நம் இனம் ஆளவேண்டும்.
@mcmurugan4239
@mcmurugan4239 4 жыл бұрын
🌺வாழ்க தமிழ் வளர்க தமிழ் & நன்றி 🌺
@thamizhanaram3134
@thamizhanaram3134 4 жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு உங்கள் பதிவு ஒவ்வொன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை மிக்க நன்றி மிக்க நன்றி
@blackpearl5834
@blackpearl5834 4 жыл бұрын
என்றும் வள்ளலார் வழியில்🙏 🙏நாம் தமிழர் கட்சி🙏
@simman275
@simman275 4 жыл бұрын
கார்டுவேள் என்னும் அறிஞனும் எல்லிஸ் துறையும் வந்து தான் இந்த மண்ணிலே சமஸ்கிருதம் மட்டுமல்ல தமிழும் தனித்து இயங்க கூடியது என்று வலியுறுத்தியதாக அறிந்து இருக்கிறேன் அதன் பின்னே தான் அனைவரும் (தமிழறிஞர்கள் ) அதை கையில் எடுத்து இயக்கம் கண்டார்கள் என்று உணர்கிறேன். மகிழ்ச்சி. நன்றிகள்.
@sivsivanandan748
@sivsivanandan748 4 жыл бұрын
மறைமலை அடிகளாரின் புத்தகங்களையும் விநாயோகிப்பவர் பற்றி அறிய தரமுடியுமா?
@prakashrajprakash6087
@prakashrajprakash6087 4 жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் ஐயா அவர்களின் முயற்சியால் ஐந்தாம் தமிழர் சங்கம் உருவாக்கி உள்ளார். தமிழ் சிந்தனையாளர் பேரவை சன்னலை பாருங்கள் 🙏🙏
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue 4 жыл бұрын
அந்த ஆளு காசு பாக்க பிளான் செய்றான்
@sentamilnadan6437
@sentamilnadan6437 4 жыл бұрын
அவருடைய தமிழ் மதம் புத்தகம் என் 16 வயதில் படித்தால் தான் அதன் பிறகு இந்த 2 வருடங்களாக ஆரிய எதிர்ப்பும் தமிழ் ஆர்வமும் என் மனதில் தொடருகிறது. உண்மையில் ஓர் தமிழர்களின் கடவுள் எம் மறைமலையடிகள்🙏🙏🙏
@kabileshs6910
@kabileshs6910 4 жыл бұрын
Ippo unga vayathu 18 ah
@sentamilnadan6437
@sentamilnadan6437 4 жыл бұрын
@@kabileshs6910 ஆம்🤓
@user-pm7uc9bv9p
@user-pm7uc9bv9p 4 жыл бұрын
உண்மையில் மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. ❤️தமிழ்❤️
@vannaitamilan5401
@vannaitamilan5401 4 жыл бұрын
பேரற்புதம்... நண்பா! அனைத்தும் தமிழில் பேர் அற்புதம்... தனித்தமிழ்-ஐ யாராலும் மறக்க மறுக்க மறைக்க முடியாது... அவர் மறைமலையடிகள் தனித்தமிழின் ஏணிப்படிகள் பதிவுக்கு பாராட்டும் வாழ்த்தும்
@chinnathambirrrajendran9606
@chinnathambirrrajendran9606 4 жыл бұрын
உன்னை வாழ்த்தி வரவேற்கிறேன் ராசா...உன் பணி மிக சிறந்த பணி ...நீ நல்லா இருப்பே..வள்ளலார் துணை இருப்பார் ..கவலைப் படாதே..வாழ்த்துக்கள்...நன்றி...
@sudhakar01234567890
@sudhakar01234567890 4 жыл бұрын
அனைத்தும் சிறப்பு.. தகவல் பெட்டகம் உங்களின் அனைத்தும கானொளிகளும்... தொடரட்டும் உங்கள் சேவை... நாம் தமிழர்
@sengottuvels1928
@sengottuvels1928 4 жыл бұрын
உங்கள் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது. இந்த காணொளி யிலேயே ஆரம்பம், வார்த்தை, அந்தஸ்து,முக்கிய,... போன்ற வடமொழி சொற்களை தவிர்க்க வேண்டுகிறேன்.
@user-om6zg3cq7u
@user-om6zg3cq7u 4 жыл бұрын
நன்றி அண்ணா ஈவெரா என்று சொன்னதுக்கு. அவனுக்கு பெரியார் என்று எவனோ வைத்து அந்த சொல்லின் புனிதமான தன்மையை கேடுத்து விட்டார்கள்
@vijilakshmi4498
@vijilakshmi4498 4 жыл бұрын
மறைமலையடிகள் பற்றிய அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஆனந்த் தம்பி.அருமையான பதிவு.
@kalaivanisubramaniam1274
@kalaivanisubramaniam1274 4 жыл бұрын
இனிமேல் சரி பிற மொழியாளர்களை தூக்கி எறிந்து விட்டு நமது கடவுளரையும், நமது மூதாதையரையும், நமது பாரம்பரியத்தையும் நாமே கொண்டுவருமோம். அதை நானே என் வீட்டில் இருந்து செய்கிறேன்.
@SathishSathish-yv8qh
@SathishSathish-yv8qh 4 жыл бұрын
நீ ஒரு வரும் கால புரட்சி செய்து கொண்டு இருக்கிறாய் சகோதரா.
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 ай бұрын
மகிழ்ச்சி தம்பி,ஒரு சிலராவது தமிழ் நாட்டில் மறைக்கப்பட்டவர்களை நினைவூட்டுகிறீர்களே❤
@durgaprasad6489
@durgaprasad6489 4 жыл бұрын
மறைமலை அடிகள் வாழ்க ❤️💯😍😍💯❤️❤️💯😍
@krisea3807
@krisea3807 4 жыл бұрын
உலகில் மனித இனம் பேசிய முதல் மொழி தமிழ். மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழ். தமிழ் மொழியை கற்பதில் பெருமையடைகிறேன். The very first language ever human used, the world's oldest language, mother of all languages and still in use is the Tamil Language. Proud to learn Tamil. தமிழ் நாட்டில் தமிழ் மொழி தான் ஆதிக்கம் செழுத்த வேண்டும். அதற்கு அடுத்து ஆங்கில மொழியை பயன்படுத்துவோம். வேறு மொழிகளை தனியாக கற்றுக் கொள்ளுங்கள் தவறில்லை. ஆனால் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் தான் இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ், ஆங்கிலம் இருக்க வேண்டும். அலுவலகங்களில் தமிழ், ஆங்கிலம் தான் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு வட இந்திய ஆரிய இன பெயர்களை வைக்காதீர்கள். இந்த உணர்வு, நான் ஒரு தமிழன் என்று சொல்லும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும், அப்பொழுதான், நம் தமிழ் மொழி, தமிழ் இனம் அழிந்து விடாமல் காக்கப்படும். நாம் தமிழர்.
@aravintharavinth6438
@aravintharavinth6438 4 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@user-re7uk3ls4h
@user-re7uk3ls4h 3 жыл бұрын
இந்தக் காலக்கட்டத்திலும் தனித்தமிழ் இயக்கம் செயல்பட வேண்டும்.
@-Thulangu
@-Thulangu 4 жыл бұрын
தனித்தமிழ் சொற்களான திரு,திருமதி,திருமணம் போன்றவற்றை தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியாக்கியவர் பேரறிஞர் அண்ணா
@millionaireship
@millionaireship 4 жыл бұрын
எப்படி தல உங்களால முடியுது. உங்கள் உழைப்புக்கு எப்பவுமே எங்களுடைய support இருக்கும்.👍🙏
@RajeshTamil2022
@RajeshTamil2022 3 жыл бұрын
இந்த விழியத்தை பார்த்த பின்பு உங்கள் ரசிகன் என கூறிக்கொள்வதில் மகிழ்கிறேன், நண்பா. சிறப்பான கருத்தோட்டம். உன்னத தமிழ் தொண்டு. கவனமாக களமாட வேண்டும். உங்களை போன்ற ஆளுமைகள் தமிழுக்கும் தமிழருக்கும் மிகவும் தேவை!
@jananisri9054
@jananisri9054 4 жыл бұрын
மீண்டும் வாலிய தமிழ் பேச முடியும் அதற்கு திரும்பவும் நாம் நம்மை குழந்தையாக மாற்றி வைக்க வேண்டும் அப்படியிருந்தால் 5 ஆண்டில் நாம் புலவர் ஆகிவிடுவோம்
@suryaer7905
@suryaer7905 4 жыл бұрын
உங்களின் மூலமாக இன்று ஒரு தமிழரின் வரலாறை தெரிந்து கொண்டேன் ...
@user-tn5hc5ek8j
@user-tn5hc5ek8j 3 жыл бұрын
வரலாறை இல்லை ஐயா வரலாற்றை
@Kadhiravanofficial
@Kadhiravanofficial 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@secularman3402
@secularman3402 4 жыл бұрын
Super program sir. By Tamil Mohamed
@alexandarvenkatesan5701
@alexandarvenkatesan5701 4 жыл бұрын
பாராட்டுக்கள்.
@malarvizhinamasivayam3879
@malarvizhinamasivayam3879 4 жыл бұрын
அருமை, உங்கள் தமிழ் சேவைத் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏽✌🏽
@pandiyanmuthu9864
@pandiyanmuthu9864 4 жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க மறைமலை
@ravivarman5585
@ravivarman5585 4 жыл бұрын
1st like 1st comment❤️🙏🏻🔥
@maneeshoffcl1485
@maneeshoffcl1485 4 жыл бұрын
தமிழர் பிரிவினை போடவும் எப்படி தமிழர் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றார்கள் எதனால்🙏🙏🙏🙏🙏
@MI-dg9wo
@MI-dg9wo 4 жыл бұрын
ஆம்..
@karthikkumar5364
@karthikkumar5364 4 жыл бұрын
இது போன்ற பதிவுகள் மிக முக்கியம் அண்ணா..இந்த காலகட்டத்தில்
@mymindvoice8607
@mymindvoice8607 3 жыл бұрын
நன்றி சகோ .. மெய்சிலிர்த்து விட்டேன் ...
@user-gm8fi4yf5q
@user-gm8fi4yf5q 4 жыл бұрын
தனித்தமிழின் தந்தை,தமிழ்க்கடல் ஐயா அவர்களின் எழுத்துகளில் கடுமையான தமிழோ கலப்பு தமிழோ இல்லை என்பதுதான் தனிச்சிறப்பு...My biggest inspiration for my wordsssss
@sivagnanam5803
@sivagnanam5803 4 жыл бұрын
அருமையான பதிவு.. காலம் இது காலம் தமிழ் மலர்ச்சி காலம்...
@-poovarasan4259
@-poovarasan4259 4 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு அண்ணா ❤️❤️❤️
@sundarvlogsgymtrainer5988
@sundarvlogsgymtrainer5988 4 жыл бұрын
அண்ணா தேவநேயப் பாவாணர் பற்றி காணொலி போடுங்க
@maddyarul
@maddyarul 4 жыл бұрын
Great effort Nanba. Please continue your contribution to reveal the hidden truth about Tamilian leaders and their efforts.
@mr.thelanguage9993
@mr.thelanguage9993 4 жыл бұрын
அருமை நண்பா
@perledelsten6373
@perledelsten6373 4 жыл бұрын
தமிழால் இணைவோம் 💪
@thanjaipalani8294
@thanjaipalani8294 4 жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் அரசியல் பலமே வெல்லும். . தமிழர்களுக்கு அரசியல் பலம் வேண்டும். நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥 (இந்தியாவிலேயே அரசியல் பலம் இல்லாத ஒரே இனம் தமிழர்கள்தான்)
@yoursrelation
@yoursrelation 3 жыл бұрын
எவன் பக்கமும் சாயாத சங்கத்தமிழனுக்கு நன்றி❤️🔥🔥
@velarumugam1155
@velarumugam1155 4 жыл бұрын
super
@karnaps9738
@karnaps9738 4 жыл бұрын
நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடையம்.....தங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்
@rajavel6226
@rajavel6226 4 жыл бұрын
இதுபோன்ற தலைப்புகளை அதிகம் எதிர்பார்க்கிறேன்... நன்றி
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal! Naam Thamizhar! Vivasayi sinnathirku vakalipom!
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
நண்பா.. தமிழில் பதிவு போட்டால் மகிழ்வேன்!
@David71356
@David71356 4 жыл бұрын
Great video thank you
@iyarkaipriyanmohanlife195
@iyarkaipriyanmohanlife195 4 жыл бұрын
நாம் கொண்டாடுவோம். தூயவர்களை.
@subbukuppu9143
@subbukuppu9143 4 жыл бұрын
நீடு வாழ்க. தமிழ்ப்பணி தொடர்க.
@sha81187
@sha81187 4 жыл бұрын
அருமை சகோ.. தமிழ் நாட்டின் மறைக்கப்பட்ட அனைத்து தமிழ் இன தலைவர்களை பற்றிய விழியம் வெளியிடுங்கள்..
@ragini1338
@ragini1338 3 жыл бұрын
Pillai inam thyagavallalkal 🙏🙏🙏👑👑👑👑👑👑👑👑👑
@lokeshs1374
@lokeshs1374 4 жыл бұрын
Arumaiyana Pathivu, Nanba. Oru unnathamana Manithanai unarnthu kolla thunai purindhai. Nandri 🙏🙏
@pthangavel
@pthangavel 4 жыл бұрын
மறைமலையடிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும், பிரதிபலன் கருதாது தமிழ் வளர்க்கப் பாடுபட்ட அனைவருக்கும் மறுபடியும் நன்றி செலுத்துகிறேன். 🌹🌷🙏🙏🙏
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 4 жыл бұрын
நன்றி ... மிக்க மகிழ்ச்சி..
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 4 жыл бұрын
மிக சிறப்பு தம்பி.
@ggowtham3441
@ggowtham3441 4 жыл бұрын
செம்மை
@user-qp2gy1op4v
@user-qp2gy1op4v 4 жыл бұрын
மிகவும் அருமையான முயற்சி.
@-poovarasan4259
@-poovarasan4259 4 жыл бұрын
#மறைமலையடிகள் #தமிழ்
@ramaneik2939
@ramaneik2939 4 жыл бұрын
1971ல் பியுசி படித்த காலத்தில் அட்வான்ஸ் தமிழ் என்ற பாடப்பிரிவில் மறைமலை அடிகளாரின் கட்டுரை ஒன்றை படித்த ஞாபகம் வருகிறது பின்னர் அவரைப் பற்றி அவ்வளவாக அறியமுடியவில்லை இந்த காணொளி மூலம் அன்னாரது சிறந்த தமிழ் தொண்டினை அறியமுடிகிறது. வாழ்நாளை வீணடித்தோமோ என்று வெட்கப்படுகிறேன்
@user-vl6vm9dw3v
@user-vl6vm9dw3v 4 жыл бұрын
மிக நல்ல முயற்சி தம்பி.வாழ்த்துக்கள்! திரவிட திருடர்களால் அண்ணா உட்பட இரட்டடிப்பு செய்யப்பட்ட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரை இளைய குமுகாயத்தார் அறியும் படி செய்யவும்.அவர் ஆன்மா சாந்தி அடைவதாக!
@rohanasuthasan2488
@rohanasuthasan2488 4 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி தமிழ் சிறக்க
@thangaveluganesan9634
@thangaveluganesan9634 4 жыл бұрын
Thanks for showing this video on Marai Malai Adigal.. long awaited one from Sanga Tamilan..good initiative.. expecting more videos on peoples who are sacrificed their life for Tamil
@user-zs7cj2hg9v
@user-zs7cj2hg9v 4 жыл бұрын
சிறப்பான தலைப்பு நண்பா
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 4 жыл бұрын
அருமையான பதிவு தம்பி
@camilusfernando17
@camilusfernando17 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@calebjosva2417
@calebjosva2417 4 жыл бұрын
Super
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 4 жыл бұрын
இந்தியா மொழிகள் எண்ணிக்கை இந்தியஅரசு கணக்கின்படி இந்தியாவில் பேசப்படுகின்ற மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 19,500 மொழிகள். இவற்றில் 121 மொழிகள் 10,000 பேருக்கும் மேல் பேசப்படுகின்றன. மொத்த மக்கள் தொகையில் 96.71% மக்கள் 18 வது அட்டவணையில் அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை பேசுகிறார்களாம்.+ அந்த 22 மொழிகள் என்னென்ன? #தமிழ், அஸ்ஸாமி,வங்காளி, போமோ,டோக்ரி,குஜராத்தி, இந்தி, கன்னடம்,காஷ்மீரி,கொங்கணி, மைதிலி, மலையாளம், மெய்ட்டி, மராத்தி, நேபாளி,ஒடியா,பஞ்சாபி,சந்தாலி,சிந்தி, தெலுங்கு,உருது. இதில் மேலும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்துள்ள மொழிகள்.+ அங்கிகா, பஞ்சாரா, பஜ்ஜிகா, பிஷ்ணுப்ரியா, போஜ்பூரி, லடாக்கி, போடியா, புந்தல்கண்டி, சத்தீஸ்கரி-கோசலி, தாட்கி, இந்திய இங்கிலீஷ், இந்திய பிரெஞ்சு, கார்வாலி (பகாரி), காரோ, கோண்டி, குஜ்ஜார்-குஜ்ஜாரி, ஹர்யான்வி, ஹோ, கச்சாசி, கம்டாபுரி, கர்பி, காஷி, கோடவா(கூர்கி), கோக்போரோக்,+ குமாவ்னி(பகாரி), குருக், குர்மாலி, லெப்சா, லிம்பு, மகாஹி, மிசோ(லுசாய்), முன்டாரி, நாக்புரி, நிகோபாரிஸ், ஹிமாசலி, பாலி, ராஜ்பன்ஷி, ராஜஸ்தானி, சம்பல்புரி, ஷாவுர்சேனி(ப்ராகிரித்), சிரைகி, தென்யிடி, துளு சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கென ஒரு நிலப்பகுதியே இல்லை. + மேலும் மொத்த இந்திய நிலப்பரப்பிலும், சமஸ்கிருதத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களென 2011 கணக்கெடுப்பின் படி தெரிய வருவது மொத்தம் 24,821 பேர்தான். ஆனால் அலுவல் மொழியாகச் சேர்க்கச் சொல்லிக் காத்திருக்கிற கிட்டத்தட்ட 44 மொழிகளும் தங்களுக்கென நிலப்பகுதியை உடையவை. + செறிந்த மக்கள் திரளை உடையவை. ஆனால் அதை விடுத்து, வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சனாதன மொழியை அந்தப் பட்டியலில் சேர்த்ததே மிகப் பெரிய மோசடிதான். அந்த ஒரு மொழியின் வளர்ச்சிக்காக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் ரூ. 643.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.+ இத்தனை மொழி பேசுவோர் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணத்தை, அதாவது 130கோடி மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை, வெறும் 24,821 பேர் தின்றுதீர்க்க வழிவகை செய்வதுதான் பாஜக அரசின் கேவலமான நடைமுறை. புதிய கல்விக்கொலை என்கிற கல்விக்கொள்கை பரிந்துரைத்துள்ள மும்மொழித்திட்டம். இது மோசடித் திட்டமே.
@ram2ravanan987
@ram2ravanan987 4 жыл бұрын
அருமை சகா . எங்கிருந்து இந்த தகவல் கிடைத்தது
@RameshRamesh-zf8wv
@RameshRamesh-zf8wv 4 жыл бұрын
மாநில கட்சிகளின் கைகள் ஓங்க வேண்டும்
@ItsOurLife143
@ItsOurLife143 4 жыл бұрын
அருமை...!!
@nandhivarman9135
@nandhivarman9135 4 жыл бұрын
அருமை
@sviswanathan2925
@sviswanathan2925 4 жыл бұрын
அற்புதமான பதிவு எனது அன்புச் சகோதரனே....
@sathishanbu6572
@sathishanbu6572 4 жыл бұрын
உங்களுடைய வளையொலியை ஒருவர் பின்தொடர்ந்தாள் திராவிடத்தை நிராகரித்து தமிழ் தேசியத்தை ஆதரிப்பார்கள் . ஆரிய திருட்டு என்ற தொடரும் திராவிட சூழ்ச்சி என்று தொடரும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய முக்கியமான ஒரு பொக்கிசம்.
@velu1671
@velu1671 4 жыл бұрын
சிறந்த பதிவு நன்றி தம்பி ,ஈழத்தமிழர்.
@harishr7721
@harishr7721 4 жыл бұрын
Maraimalai adigal avar Namaku kadavul 🙏🙏
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
தமிழில் பதிவு செய்யுங்கள்! 🙏🙏
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 жыл бұрын
தமிழ் சார்ந்த நிறைய செய்திகள் தகவல்கள் வெளி கொணர்ந்து கொண்டிருக்கிறீர்கள். மிகவும் நன்றாக இருக்கிறது. இப்போ தமிழர்களுக்கு மிகவும் அவசியமானதும் கூட. வாழ்த்துக்கள். ல, ழ, ள கொஞ்சம் பாருங்கள்.
@dhivinkumar1382
@dhivinkumar1382 4 жыл бұрын
Super anna
@tamililakkiyam8013
@tamililakkiyam8013 4 жыл бұрын
இதை போன்ற பல புத்தகங்களை தாருங்கள் சகோதரரே
@somnathumapathi3557
@somnathumapathi3557 3 жыл бұрын
Thanks for the book
@srikanthcolin8739
@srikanthcolin8739 4 жыл бұрын
அற்புதமான படைப்பு. நன்றி சகோ
@jivenraj0000
@jivenraj0000 4 жыл бұрын
எல்லா மொழிக்கும் அரசனா அது தமிழ் மொழி மட்டும்தான 💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥
@ramadasss2140
@ramadasss2140 4 жыл бұрын
அருமையான பதிவு
@johnwickspd9265
@johnwickspd9265 3 жыл бұрын
அளப்பரிய பணி தம்பி உங்களது இந்த தமிழ்பணி
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 10 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН