Рет қаралды 159,656
தென்காசி கோபுர வாசல் காற்று - ஓர் அதிசயம் | Tenkasi Kasi Viswanathar Temple - Breeze Wonder
ஆராயினும் இந்த தென்காசி மேவும் பொன் ஆலயத்து ,வாராத தோர் குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்து ,அதனை நேராகவே ஒழித்து புறப்பார்களை நீதியுடன் பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே
இன்று நாம் பார்க்க போறது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் அமைத்திருக்கும் மிக புகழ் வாய்ந்த மற்றும் அதிசயங்கள் நிரம்பிய அருள்மிகு உலகம்மன் சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பற்றித்தான்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
நாரதர், அகத்தியர், இந்திரன், மிருகண்டு முனிவர், வாலி, நந்தி ஆகியோர் இங்குள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டுள்ளார்கள்.
சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு பராக்கிரம பாண்டியன் சிவ பெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண(தென்) காசியில் கோயில் அமைத்து வழிபடும்படி கூறினார். அதாவது எறும்பு ஊர்ந்து செல்லும் வழியாக சென்று அது எங்கு முடிகிறதோ அங்கு கோயில் கட்டும் படி இறைவன் கூறுகிறார். அதன்படி மன்னனும் எறும்பு சென்ற வழியே சென்ற போது, அது சிற்றாற்றங்கரையில் செண்பக வனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு கோயில் கட்டி வழிபட்டார் மன்னர்
கி.பி.1456-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, கி.பி.1462-ல் குலசேகர பாண்டியரால் முற்றுவிக்கப்பட்டது.
கோபுர தரிசனம் கோடி புண்யம் என்பார்கள்,அப்படிப்பட்ட கோபுரங்களால் புகழ் பெற்ற தளங்கள் தமிழ்நாட்டில் பல இருந்தாலும்,இந்த அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவிலின் கோபுரம் மிக மிக விசேஷமானது .
இன்று 178 அடியில் உயர்ந்து பல வண்ணங்களோடு 800 சிலைகள் வடிக்கப்பட்டு அழகாய் நிமிர்ந்து நிற்கும் இக்கோபுரம் ஒரு காலத்தில் சிதைந்து கிடந்தது, 1990ல் இந்த மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது திகழ்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி - 627 811, திருநெல்வேலி மாவட்டம்.
போன்:
+91-4633-222 373
This video is about the Breeze wonder of Tenkasi temple and Tenkasi temple history in Tamil.
Google Map coordinates to reach this Tenkasi Vishwanath temple is goo.gl/maps/an...
More details can be read at ta.wikipedia.o...