Thirupalliyezhuchi with lyrics-Dharmapuram P.Swaminathan-திருப்பள்ளியெழுச்சி-தருமபுரம் சுவாமிநாதன்

  Рет қаралды 199,309

Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்

Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்

2 жыл бұрын

#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
Please subscribe to kzbin.info...
===============
Thirupalliyezhuchi with lyrics -Dharmapuram P.Swaminathan -திருப்பள்ளியெழுச்சி - தருமபுரம் பி.சுவாமிநாதன்
=================
திருப்பள்ளியெழுச்சி பாடல் : 01
போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 02
அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 03
கூவின பூங்குயில்;கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்; திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 04
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 05
“பூதங்கள் தோறும் நின்றாய்! “எனின் அல்லால் “போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 06
பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 07
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் ;
இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 08
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்! மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 09
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகதே நின்று களிதரு தேனே! கடலமுதே!கரும்பே!விரும்படியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 10
“புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று” நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!
=============================
/ variyar
/ variyarswamigal
Please subscribe to kzbin.info?su...

Пікірлер: 65
@selvamshanmugasundram8751
@selvamshanmugasundram8751
மார்கழி மாதம் விடியற்காலை சுமார் 4.30 அளவில் தருமபுரம் ஐயாவின் தெய்வீக குரலில் இந்த பாடல்கள் எங்கள் கோயில் ஓலிபரப்பவதை கேட்டு கொண்டு நான்கு வீதிகளில் 30 வருடங்கள் முன்பு இதை பாடிக்கொண்டு சென்றது மறக்க இயலாது . ஆனால் இன்றைய அது போன்ற அனுபவங்களை அனுபவிக்க குழந்தைகள் இழந்து விட்டனர்.
@chithiraikumar4793
@chithiraikumar4793 19 сағат бұрын
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
@karthikeyanr7882
@karthikeyanr7882
வைணவர்களுக்கு திருப்பாவையை போல் சைவர்களுக்கு திருப்பள்ளி எழுச்சி திருவம்பாவை பாடல்கள் இந்த 30 பாடல்களையும் இந்த மார்கழி மாதத்தில் ஆலயங்களிலும் இல்லங்களிலும் ஒலிக்கச் செய்து சிவபெருமானின் அருளைப் பெறுவோம் சிவ சிவ சிவ சிவ
@uthayasuriyan9593
@uthayasuriyan9593
❤❤ எல்லாம் வல்ல இறைவன் சிவனே போற்றி ❤❤ ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏
@santhramohan7044
@santhramohan7044
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
@vithhyav9639
@vithhyav9639 Жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம் ஓம் ஓம்
@mohans9383
@mohans9383 Жыл бұрын
திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🌹அருமை. 🙏🙏🙏🌹🌹thiru🙏perunturi🙏emperumane🙏sivane🙏🙏🙏🙏🙏போற்றி. தவத்திரு. 🙏🙏தர்மபுரம். 🙏🙏🙏saminadhan🙏ஐயா. 🙏potry🙏🙏. திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏siva🙏🙏
@sivanandamrajasekaran9540
@sivanandamrajasekaran9540
சிவாயநம❤
@jayaradha159
@jayaradha159
அற்புதம். ஐயாவை போன்று ஒருவர் இனி பிறந்து தான் வரவேண்டும்.
@lohanmuthu6341
@lohanmuthu6341 2 жыл бұрын
நன்றி...
@easwaranchockalingam7642
@easwaranchockalingam7642 Жыл бұрын
சிவாய ந ம ஐயாவின் தெய்வீக குரலில் பாடலையும் கேட்டு படிக்கவும் வாய்ப்பு தந்த உங்கள் திருத்துண்டிற்கு மிக்கது ஏதுமில்லை திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் குரு பாதம்
@neelamoodley764
@neelamoodley764 Жыл бұрын
Potri Om Namasivaya Sivaya NamaOm🙏🙏❤️🌹💮
@meerabiju1294
@meerabiju1294
Kodi pranaam. Thanks
@chithiraikumar4793
@chithiraikumar4793 Күн бұрын
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹🤣🌹
@prabuprabu7407
@prabuprabu7407 2 жыл бұрын
சிவசிவ.நன்றி.ஐயா..
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093
தருமபுரம் ஸ்வாமி தேவகானம்
@neelamoodley764
@neelamoodley764 Жыл бұрын
Potri Om Namasivaya great Padham with lyrics and sweet voice I am gifted Swami nandri 🙏💐❤️🎆🙏🙏
@tavamathy656
@tavamathy656 Жыл бұрын
தங்கள் குரல் மனதை மீட்டும். தினமும் தூங்கும் முன் கேட்பேன் நன்றிகள்
@tavamathy656
@tavamathy656
இன்று வரை தூங்கும் போது தான் கேட்கிறேன் தெரியவில்லை!
@janardhanamvs8166
@janardhanamvs8166
Thiruchittrambalam siva siva sivachamboosenkarayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Thiruvembavai with lyrics - Dharmapuram P.Swaminathan -திருவெம்பாவை - தருமபுரம் பி.சுவாமிநாதன்
44:32
Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Рет қаралды 116 М.
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 138 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 24 МЛН
திருமந்திர விளக்கம் -1 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -1 Pulavar Keeran
16:26
Noi Neekum Thirupathigangal | Lord Siva  | Dharmapuram P.Swaminathan | Divine Songs for Good health
1:10:39
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 63 М.