முக்கிய அறிவிப்பு🔴 தங்கள் ஊர் கோவில் கொடைவிழாக்கள் வீடியோக்களில் தற்போது இருப்பவர்கள் புதிய பரிணாமம் அடைந்திருந்தால் அந்த வீடியோக்களில் பழைய வில்லுப்பாட்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அது தற்போது உள்ள வீடியோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் 🔴அதில் எங்களின் உழைப்பு உள்ளதால் அதன் அத்தனை உரிமையும் எங்களையே சேரும் வேறு யாரும் ஒளிபரப்பும் உரிமை கூற முடியாது 🔴 கலைஞர்களின் வளர்ச்சிக்காக அத்தகைய செயல் இருப்பின் நாங்கள் எதுவும் செய்யவில்லை 🔴இதுவரை எங்களால் பல லட்சம் சப்ஸ்கிரைப்பர் பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேனலை சேர்ந்தவர்கள் வீடியோக்களை திருட்டுத்தனமாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் இனி இந்த தவறை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் மீறி பதிவேற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இதுவரை எங்களால் பல லட்சம் சப்ஸ்கிரைப்பர் பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேனலை சேர்ந்தவர்கள் வீடியோக்களையோ சேனல்களையோ முடக்க நேரிட்டால் நாங்கள் பொறுப்பாக முடியாது 🔴அன்பர்களுக்கு வணக்கம் பல ஆயிரம் செலவழித்து கண்விழித்து மழை வெயில் பாராது கொட்டும் பனியிலும் உயிரை துச்சமாக நினைத்து இரவு பகல் பாராது ஓய்வில்லாது உழைத்து பதிவேற்றப்படும் வீடியோக்களை ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு லேப்டாப்பில் மொபைல் போனில் திருடி எடிட் செய்து பதிவேற்றம் செய்து பல லட்சம் சப்ஸ்கிரைப்பர்களை பெற்ற சேனல் காரர்கள் பயனடைந்தது போதாதா உங்களின் தொடர்ந்த இந்த செயலால் எங்களின் சேனல் பாதிப்புக்கு உள்ளாவது உங்களுக்கு தெரியாதா❓ இதோடு தங்களின் இந்த தவறான செயல்களை நிறுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் எங்களின் வீடியோக்களில் 🔴அருவருப்பான பாடல்களை வைத்து ரீல் செய்து எத்தனையோ நல்ல சினிமா பாடல்கள் இருந்தும் மேலும் ரீல்ஸ் ஷார்ட்ஸ்களில் முகம் சுளிக்க வைக்கும் பாடல்களை வைத்து உங்களின் சுயலாபத்துக்காக போற்றக்கூடிய வில்லிசையை கலைஞர்களை தூற்றக்கூடியவர்களாக நீங்கள் மாற்றி உள்ளீர்கள் இது எங்களை மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்கி உள்ளது 🔴வில்லிசையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் எங்கள் முயற்சியில் வில்லிசை கலைஞர்களே கதாநாயகர்கள் கலைஞர்கள் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படுவதற்காகவே நாங்கள் கடுமையாக முயற்சி செய்து அதனை கொண்டு வந்துள்ளோம் அவர்கள் மதிப்பின் மீதும் அவர்களின் அடையாளத்தின் மீதும் தங்களின் இத்தகைய செயல்களால் மதிப்பும் மரியாதையும் குறைந்து போகும் என்பது தங்களுக்கு தெரியாதா நாங்கள் சினிமா பாடல்களை பரப்ப வரவில்லை வில்லிசையை உலகிற்கு பரப்பவே வந்துள்ளோம் 🔴🔴எமது தமிழ் கிராமிய கலையை உலகிற்கு கொண்டு செல்லும் உன்னத முயற்சிக்கு இத்தகைய தவறான செயலால் ஊறு விளைவிக்க வேண்டாம் நாங்கள் இக்கலையின் மீதும் இக்கலை வளர்ச்சியின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறோம் உங்களின் இந்த செயல்களால் இக்கலைக்கு அவப்பெயர் ஏற்படும் போது நாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது இக்கலைக்கும் இக்கலை சார்ந்த கலைஞர்களுக்கும் 🔴எதிர்காலத்தில் இக்கலையை அழியாது நிறைய பேர் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எங்களின் கனவுகளுக்கும் உங்களின் வில்லிசை கலைஞர்களுக்கு களங்கம் கற்பிக்கும் இத்தகைய செயலால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது ஏற்பட்டு வருகிறது ஆதலால் தங்களின் இத்தகைய தவறான செயல்களை மாற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் தமிழ் பண்பாட்டை உயர்த்தி பிடிப்போம் தொடர்ந்து பேராதரவு தரும் அத்துணை நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஜித் டிவி