துன்ப முடிச்சுகளை அகற்றும் மாதா .(Mary Untier of Knots ( thunba mudichi avilkum madha))

  Рет қаралды 9,628

 என் விவிலியம் என் வாழ்க்கை....

என் விவிலியம் என் வாழ்க்கை....

Күн бұрын

வரலாறு
அருட்திரு ஜோகன் (Johann Melchior Georg Schmittdner ) தனது பெற்றோர் விவாகரத்து செய்யவிருப்பதை அறிந்து , மரியன்னையிடம் குடும்ப சமாதானத்திற்காக வேண்டினார் . அன்னையிடம் அவர் வேண்டியது நிறைவேறவே , தனது துன்ப முடிச்சை அகற்றிய அன்னையின் திரு உருவப்படத்தை வரைந்தார் . 1700 ஆம் ஆண்டு முதல்( Perlack, Augsburg, Germany) ஜெர்மனியில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது இந்தப் படம் . ஆயராக இருந்து 202ல் வேத சாட்சியாக மரித்த புனித ஐரேனியுஸ் என்னும் புனிதர் , புனித பவுல் கிறிஸ்துவை புதிய ஆதாமுக்கு உருவகப்படுத்தியது போல , மரியன்னையை புதிய ஏவாளுக்கு உருவகப்படுத்தினார் . கீழ்ப்படியாமையினால் ஏவாள் மனித குலத்திற்கு சாபம் என்னும் துன்ப முடிச்சை கொணர்ந்தாள். அன்னையோ , தனது கீழ்ப்படிதலின் மூலம் அத்துன்ப முடிச்சை அகற்றினார் . இதன் அடிப்படையிலேயே அன்னையின் இந்தப் படம் வரையப்பட்டது .
இந்தத் துன்ப முடிச்சுகள் தான் என்ன ?
நமது வாழ்வில் தீர்வு காண இயலாத பிரச்சனைகளையும் போராட்டங்களையும் நாம் சந்திக்கிறோம் .
குடும்பங்களிலே சமாதானமின்மை ,பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே கருத்து வேறுபாடு ,அவமரியாதை , வன்முறை , கணவன் மனைவிக்கிடையே உள்மனக் காயங்கள் ,குடும்பங்களிலே சந்தோசமும் சமாதானமும் இல்லாத நிலை . மட்டுமல்லாது குடும்பங்களிலே பிரிவினை , கணவன் மனைவியிடையே மோதல் , குடி மற்றும் போதைக்கு அடிமை ,வியாதி , வருத்தங்கள் , இறைப்பற்றின்மை ,கருக்கலைப்பு , மன அழுத்தம் , வேலையின்மை , பயம் , தனிமை எத்தனை எத்தனை துன்ப முடிச்சுகள் !! நமது ஆத்துமாவை அழுத்தி , மன அமைதியைக் குலைத்து , நம்மை இறைவனிடமிருந்து அவை பிரிக்கின்றன . இவற்றிலிருந்து நம்ம துன்ப முடிச்சு அகற்றும் மாதா காக்கிறார்
நாளுக்கு நாள் அன்னையின் பக்தி பெருகியது . குடும்பங்களிலே ஒற்றுமை மீண்டது .வியாதிகள் நீங்கின . பலர் ஆலயத்திற்கு குடும்பமாக வரத்துவங்கினர் . மகிழ்ச்சியும் நம்பிக்கையும் குடும்பங்களில் நிறைந்தன .வேலை இல்லாதவர்க்கு வேலை கிடைத்தது .அன்னையிடம் பற்றுக் கொண்ட ஆசீர்வாதங்களுக்காய் பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினர் .இதற்காகவே அன்னை தெரிந்தெடுக்கப்பட்டார் .
நமது துன்ப முடிச்சுகளை அகற்றி , உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைத் தருவது மட்டுமல்லாமல் விண்ணரசிலும் நமக்கு இடம் கிடைக்கும் பொருட்டு அன்னை நமக்காய் பரிந்து பேசுகிறார் .
சென்னையில் தாழம்பூரில் துன்ப முடிச்சகற்றும் அன்னைக்கு ஆலயம் உள்ளது . ஆசியாவிலேயே அன்னைக்கு அர்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் இதுவே
துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையிடம் நவநாள் செபிக்கும் வகையாவது
1. சிலுவை அடையாளம் வரையவும்
2. மனஸ்தாப செபம் சொல்லவும் (கீழே உள்ளது )
3. செபமாலையின் முதல் மூன்று பத்து மணிகளைச் சொல்லவும்
4. அந்த நாளுக்கான தியான செபத்தைச் சொல்லவும்(கீழே உள்ளது )
5. செபமாலையின் இரண்டு பத்து மணிகளைச் சொல்லவும்
6. முடிச்சுகளை அகற்றும் அன்னையின் செபத்துடன் முடிக்கவும்
முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையிடம் செபம்
கன்னிமரியே,
அழகு அன்புத் தாயே,
மன்றாடும் குழந்தையை ஒருபோதும் புறக்கணியாத அன்னையே ,
உமது திரு இதயத்தில் இருந்து பெருக்கெடுத்து வழியும் அன்பினாலும்
முடிவில்லாத இரக்கத்தினாலும் குழந்தைகள் எமக்காய் அயராது உழைக்கும் திருக்கரங்கள் கொண்ட திருவே ,
உமது கருணைப் பார்வையை எம் மீது திருப்பி எமது வாழ்வை திணற வைக்கும் முடிச்சுகளைக் கண்ணோக்கியருளும்.
எனது துன்பம் , வலி , செயலிழக்கச் செய்யும் துன்ப முடிச்சுகள் அனைத்தையும் நீர் அறிவீர்
எங்கள் வாழ்க்கை நூலில் விழும் முடிச்சுகளை அவிழ்க்க கடவுளிடமிருந்து பொறுப்பு பெற்ற தாயே
உமது திருக்கரங்களில் என் வாழ்வை ஒப்படைக்கிறேன் .
உமது இரக்கப் பெருக்கை ஒரு போதும் ஒருவரும் நிறுத்த முடியாதென்றும் .உம்மால் அவிழ்க்க முடியாத முடிச்சு உலகில் ஒன்றுமில்லை என்றும் நம்புகிறேன் .
வல்லமையின் தாயே
ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசும் உமது பலத்தினால் என்னை வாட்டி வதைக்கும் இந்தச் சிக்கலான முடிச்சுகளை ( உங்கள் துன்ப முடிச்சுகளை நினைத்து ஒப்படைக்கவும் )
உமது தூய திருக்கரங்களில் பெற்றுக் கொள்ளும்
தந்தையாம் கடவுளின் உன்னத மகிமை வெளிப்படும்படி
எனது துன்ப முடிச்சுகளை இப்போதும் என்றென்றைக்கும் அவிழ்த்துப் போடும்
எனக்கு ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்டவர் நீர்
எனது பலவீனத்தில் எனது வலிமை நீர்
உம் திருமகன் யேசுவிடமிருந்து என்னைப் பிரிக்கும் சக்திகளை அழிப்பவர் நீரே
அம்மா ! எனக்குப் பதில் தாரும் பாதுகாத்தருளும்
வழிநடத்தும் காப்பாற்றும்
ஏனெனில் நீரே என் உறுதியான அடைக்கலம்
உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன் ஆமென்
Prayers courtesy Click here .நவநாள் செபங்கள் ஆங்கிலத்தில் கிடைத்தன . தமிழாக்கம் என்னுடையது . தமிழ் செபங்கள் உங்களிடம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்

Пікірлер: 37
@francisvasanthan7012
@francisvasanthan7012 2 жыл бұрын
மிக்க நன்றி.
@dorathyruban1599
@dorathyruban1599 5 ай бұрын
அம்மா அன்புத்தாயே எங்கள் துன்ப முடிச்சிக்களை உம் அன்பு மகனிடம் பரிந்து பேசி விடுதலை பெற்றுத்தாரும் அம்மா ஆமென் 🎉
@sagayamarylourdhusamy1792
@sagayamarylourdhusamy1792 3 жыл бұрын
அம்மா எங்களுக்கு இதுவரை செய்த அனைத்து நன்மைகளுக்கு நன்றி கூறுகிறேன் மரியாயே வாழ்க
@sagayamarylourdhusamy1792
@sagayamarylourdhusamy1792 3 жыл бұрын
துன்ப முடிச்சுக்களை அகற்றுகின்ற அன்னையே என் மகனுக்கு நல்ல வரனை தாரும் அவன் வாழ்க்கையில் செய்த பாவங்களை மன்னித்து நல்ல குடும்பத்தை ஏற்படுத்தித்தரும் அன்பும் பண்பும் பரிவும் உள்ளம் வாழ்க்கை துணையை அவனுக்கு கொண்டு வந்து சேர்த்து அருளும் செல் சீமாட்டி இருக்க நான் வேண்டிக் கொள்கின்றேன் எங்கள் விருப்பங்களை நிறைவேற்றி தரும்படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன் அருள் புரிவாயே அம்மா மரியே வாழ்க
@suganthithatheyus6392
@suganthithatheyus6392 Жыл бұрын
Super fr💐
@durairajmanoraj812
@durairajmanoraj812 Ай бұрын
ஆவே ஆவே ஆவே மரிய ❤🙏🌷❤🙏🌷❤🙏🌷
@jovinnivie5684
@jovinnivie5684 3 жыл бұрын
Ave maria pray for all 🙏🙏🙏
@sureshlowrence6032
@sureshlowrence6032 4 ай бұрын
AMEN 🙏 🙏
@PondyFoodChannel
@PondyFoodChannel 4 ай бұрын
@abjabj1805
@abjabj1805 3 жыл бұрын
Amen
@salethjayabharaths3832
@salethjayabharaths3832 4 жыл бұрын
அருமை 👌🙏
@sow5020
@sow5020 4 жыл бұрын
God bless you
@paniyadimaijessiah530
@paniyadimaijessiah530 4 жыл бұрын
Excellent thoughts of Mother Mary Good keep it up
@sowbagya1238
@sowbagya1238 4 жыл бұрын
Tq so much
@sow5020
@sow5020 4 жыл бұрын
Super
@aniruthaniruth4149
@aniruthaniruth4149 4 жыл бұрын
Voiceeee semaaaa.and nice karuthuuu
@sowbagya1238
@sowbagya1238 4 жыл бұрын
Tq
@mikefrancis6869
@mikefrancis6869 2 жыл бұрын
AVE MARIA 🙏🙏🙏🙏
@SaimonRajbabu
@SaimonRajbabu 6 ай бұрын
Saimonrajubabu amen ❤❤, 🙏🙏🙏🙏
@sowbagya1238
@sowbagya1238 4 жыл бұрын
Nice
@prabhababl.3958
@prabhababl.3958 4 жыл бұрын
Amen mu.pa.pagutharivan @Paul
@arockiasamy822
@arockiasamy822 3 жыл бұрын
Pls pray for us
@varunjack2906
@varunjack2906 3 жыл бұрын
Sure we are praying
@jenistanaijay768
@jenistanaijay768 3 жыл бұрын
Amma 10 aandukalsi meelamudiyatha thunpathilitunthu meelunks
@jovinnivie5684
@jovinnivie5684 3 жыл бұрын
Ave maria pray for all 🙏🙏🙏
@anunciamaryarulraj4905
@anunciamaryarulraj4905 4 жыл бұрын
சகோதரி அவர்களே, அன்னையின் நவநாள் ஜெபத்தை எங்களுக்காக வழங்குங்கள். நன்றி🙏💕
@varunjack2906
@varunjack2906 Жыл бұрын
கண்டிப்பாக தருகிறோம் அம்மா
@pauledlebet7053
@pauledlebet7053 3 жыл бұрын
Amen
@angelmary3923
@angelmary3923 4 жыл бұрын
Nice
@rajas1099
@rajas1099 4 жыл бұрын
Super
@sowbagya1238
@sowbagya1238 4 жыл бұрын
Tq
@FrancisAnthony-h2x
@FrancisAnthony-h2x 2 ай бұрын
Amen
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை நவநாள் - 02 / Rosary & Novena
45:43
நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
Рет қаралды 15 М.
Divvya Thirukalyana Matha Thiruthalam | Pothakalanvilai | Festival | 14.012025 - 23.01.2025
6:02
Thirukalyana matha thiruthalam official
Рет қаралды 758
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை நவநாள் - 01 / Rosary & Novena
45:43
நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
Рет қаралды 55 М.