கிருஷ்ணன் கடவுளே அவதாரம் எடுத்து கூறியது போல் இருந்தது உங்கள் உரை, அபிராமி கதை அல்ல நம்ம காவல் தெய்வம், நம்மை எப்போதும் காக்கும் தெய்வம், அதை மானிட ரூபத்தில் ஒரு தெய்வம் உரைக்கும் போது தேனை விடா சுவையாக இருந்தது, மிக்க நன்றி அய்யா, வாழ்க வளமுடன், சிறப்புடன் ❤❤❤
@magudadheeban1954Ай бұрын
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.... உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது - அதன் உள்ளிருந்து வாழ்த்துவது நின் அருள் அன்றோ? - எனத் தங்கள் வாழ்த்தையும் வள்ளலாரின் வாழ்த்தாகவே ஏற்றுக் கொள்கிறோம்... இந்தக் காலத்தில் நம் மக்கள் முழு வீடியோவையும் பார்ப்பது அரிது. தங்கள் கருத்தில் அப்படிப் பார்த்து இரசித்த தொனி தெரிகிறது.... ஆற அமர அப்படியே கொஞ்சம் அபிராமி பதிகங்களையும் கேளுங்கள்..... நன்றிகள் கோடி சமர்ப்பணம்
@sarathtendulkar87333 ай бұрын
கோடான கோடி ஐயா.. வாழ்க உங்கள் சேவை😊 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வள்ளல் மலரடி வாழ்க!!! வாழ்க!!!வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
@magudadheeban19543 ай бұрын
மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து இணைந்திருங்கள்
@naturelover96903 ай бұрын
தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
@naturelover96903 ай бұрын
என் விழுத்துணை அவளே🙏🙏🙏 உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கொடி குங்குமத் தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என் விழுத் துணையே
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிரத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, அங்குச பாசம் குசுமம் கரும்பும் அங்கை செர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.
ஒரு லிங்க் தருகிறேன் நவீன் ராஜ்...அதில் தியானம் செய்முறை விளக்கம் சொல்லி இருக்கிறேன்...கடைசிப் பகுதியில்..... கேட்டு அதன்படி செய்து பயன் பெறுங்கள்... நன்றி.... kzbin.info/www/bejne/oIaqkoiYZ7uAipY
@PraveenKumar-sy3lv3 ай бұрын
தாத்தா உங்கள் தொலைபேசி எண்ணை தைரியமாக இருந்தால் பதிவிடவும் 😂😂😂
@magudadheeban19543 ай бұрын
அச்சம் என்பது அறவே கூடாது. பயம் பூச்சியம் ஆக இருக்க வேண்டும் என்பது வள்ளல் வாக்கு. தொலைபேசி எண்ணை வெளியிடுவதில் தடையில்லை.... யூடியூப் வருவதற்கு முன்பே blog, forumகளில் வெளியிட்டிருக்கிறேன்...ஆர்வமும் திறமையும் பொறுமையும் இருந்தால் கண்டுபிடிப்பது எளிதே பிரவீண்குமார்....